கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

முஸ்லி்ம்கள் வாக்குறிமையைத் தவரவிடக் கூடாது


மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்காக நாளை நடைபெறவுள்ள தேர்தல்களின் போது முஸ்லிம்கள் தமது வாக்குரிமையை முழுமையாகப் பயன்படுத்த வேண்டுமென முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பான ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் முஸ்லிம்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 
இவ்வமைப்பின் தலைவர் என்.எம். அமீன் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: 
ஓர் அரசாங்கம் மக்கள் சார்ந்த தீர்மானங்களை எடுக்கும் போது அந்நாட்டில் வாழக் கூடிய ஒரு தனி நபரின் செல்வாக்கின் ஆளுமையை உறுதிப்படுத்தும் ஒரு சக்தியாகவே வாக்குரிமை காணப்படுகிறது. அத்துடன் மக்கள் அரசியல் நடவடிக்கைகளில் பங்குபற்றக் கிடைக்கும் ஒரே சந்தர்ப்பமும் இந்த வாக்களிப்பு முறையாகும். 
வாக்குரிமை என்பது மக்களின்  ஜனநாயக உரிமையாகக் கருதப்படுகின்றது. இந்த வாய்ப்பினை எமது சமூகத்தைச் சேர்ந்த அநேகர் பயன்படுத்தாது இருக்கின்றனர். அது மட்டுமின்றி சனிக்கிழமை இடம்பெறவுள்ள தென், மேல் மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில் கடந்த காலத் தேர்தல்களில் காட்டிய ஆர்வம், அக்கறை போன்றல்லாது முஸ்லிம் சமூகத்தினரிடம் குறைந்தே காணப்படுவதனை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. 
எனவே, இந்த மாகாணங்களில் வாழும் முஸ்லிம்கள் தங்களது வாக்குகளை தாம் விரும்பும் கட்சிக்கும் வேட்பாளர்களுக்கும் அளித்து தனது வாக்குரிமையின் பெறுமானத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
நாம் எமது வாக்குகளைப் பயன்படுத்தி விரும்பிய உறுப்பினர்களை தெரிவு செய்வதன் மூலம் உரிய இடங்களுக்கு எமது பிரச்சினைகளை கொண்டு சென்று அதற்கான தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள அது உதவும் எனவும் முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம். அமீன் அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.  (மு)

0 comments:

Post a Comment