கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

நரேந்திரமோடியை எதிர்த்து கெஜ்ரிவால் போட்டி?

பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி பாராளுமன்ற தேர்தலில் எங்கு போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அவர் சொந்த மாநிலத்தில் போட்டியிடுவதை விட நாட்டிலேயே அதிக தொகுதிகள் உள்ள மாநிலமான உத்தரபிரதேசத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.


அந்த மாநிலத்தில் தனக்கு செல்வாக்கு உள்ள தொகுதியை தேர்வு செய்து வருகிறார். இதற்காக தனது நெருங்கிய ஆதரவாளரான அமித்ஷிவை அம்மாநில பொறுப்பாளராக நியமித்தார். அவர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்கள் கருத்தை கேட்டு வந்தார்.
அதன் அடிப்படையில் வாரணாசி தொகுதியில் நரேந்திரமோடி போட்டியிட தீர்மானித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆன்மீக நகரான வாரணாசி தனக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதியாக நரேந்திரமோடி கருதுகிறார்.

எனவே நரேந்திமோடி போட்டியிடும் தொகுதி பற்றி விரைவில் அதிகாரப் பூர்வமாக அறிவிப்பு வெளியாகிறது. தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதும் நரேந்திரமோடி போட்டியிடும் தொகுதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே நரேந்திர மோடி வாரணாசியில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் களத்தில் இறங்க திட்டமிட்டுள்ளார்.

டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் முதல்–மந்திரி ஷீலா தீட்சித்தை தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் தற்போது பாராளுமன்ற தேர்தலில் நரேந்திரமோடியை எதிர்த்து நிற்கவும் முடிவு செய்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி ஒருவர் கூறினார்.
வாரணாசியை குறி வைத்த ஆம் ஆத்மி பிரசாரத்தில் இறங்கியுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரபிரதேசத்தில் 3 நாள் பிரசாரயாத்திரை மேற் கொண்டுள்ளார். இது முடிந்ததும் அவர் வாரணாசியில் கவனம் செலுத்துகிறார்.

கெஜ்ரிவால் நரேந்திர மோடியை கடுமையாக தாக்கிப் பேசி வருகிறார். குறிப்பாக எரிவாயு ஒப்பந்தத்தில் அம்பானிக்கு மத்திய அரசு சாதகமாக இருப்பது பற்றி நரேந்திமோடி மவுனம் சாதிப்பது ஏன் என்று எல்லா கூட்டங்களிலும் கேள்வி விடுத்து வருகிறார்.
இது தொடர்பாக நரேந்திர மோடிக்கு பகிரங்கமாக கடிதமும் எழுதினார். ஆனால் மோடி இன்னும் பதில் அளிக்கவில்லை. எனவே, தேர்தல் பிரசாரத்தில் இந்த பிரச்சினையை கிளப்பவும் இதன் மூலம் காங்கிரசும், பாரதீய ஜனதாவும் ஊழலை மறைமுகமாக ஆதரிப்பதாக எடுத்துக்காட்டவும் கெஜ்ரிவால் திட்டமிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment