கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

விடை பெறுகிறார் குமார் சங்கக்கார.

இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரும் சாதனை நாயகனுமான குமார் சங்கக்கார இருபது20 தொடர்களிருந்து ஓய்வு பெறபோவதாக அறிவித்துள்ளார்.

பங்களாதேஷில் ஆரம்பமாகியுள்ள இருபது-20 உலக கிண்ணத் தொடருடன் ஓய்வு பெறபோவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

36 வயதுடைய குமார் சங்கக்கார இதுவரை 50 சர்வதேச இருபது-20 போட்டிகளில் பங்கேற்றுள்ளதோடு 1311 ஓட்டங்களையும் கடந்துள்ளார்.

தனது ஓய்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவரும் சாதனை நாயகனுமான குமார் சங்கக்கார, ' எந்த சந்தேகமும் இல்லை. இருபது-20 உலக கிண்ணத் தொடரே இறுதி தொடராக அமையும். இத் தொடருக்கு பின்னர் எந்தவொரு சர்வதேச இருபது20 தொடர்களில் பங்கேற்க மாட்டேன். இது கவரைக்குரிய விடயம். ஆனாலும் இதுவே இயற்கை.

இந்த ஓய்வுடன் எனது இருபது20 வாழ்க்கை நிறைவடைய போவதும் இல்லை. ஆனால் உள்ளூர் இருபது20 போட்டிகளில் விளையாட விருப்பமாக உள்ளேன். அடுத்த தலைமுறையினருக்கு வாய்ப்பு வழங்க வேண்டிய கட்டாயம் எமக்கு உள்ளது என்றார்.

2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இருபது20 உலக கிண்ண இறுதிப் போட்டியில் குமார் சங்கக்கார தலைமையிலான இலங்கை அணி தோல்வியடைந்திருந்ததோடு 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஒருநாள் உலக கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியிலும் தோல்வியை தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment