பொது பல சேனாவில் குழப்பம் - ஞானசார தேரர் பணத்திற்காக செயற்படுகிறார்..!
சிங்கள பௌத்த இயக்கமான பொதுபல சேனா இயக்கத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்த இயக்கத்தைச் சேர்ந்த சிலரது உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இயக்கத்தின் நோக்கங்களுக்கு புறம்பான வகையில் செயற்பட்ட எட்டு பௌத்த பிக்குகள் இவ்வாறு உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு நீக்கப்பட்ட எட்டு பௌத்த பிக்குகளும் காவி உடையை துறக்கப் போவதாக எச்சரித்துள்ளனர். தமக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால், காவி உடையை துறக்கப் போவதாக தெரிவித்துள்னர். மேலும், காவி உடையைத் துறந்து உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாக குறித்த எட்டு பௌத்த பிக்குகளும் தெரிவித்துள்ளனர்.
இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர், தனிப்பட்ட குரோதம் காரணமாக தம்மை பழிவாங்கி வருவதாக உறுப்புரிமை நீக்கப்பட்ட பௌத்த பிக்குகள் குற்றம் சுமத்தியுள்ளனர். எந்தவொரு விஹாரையிலும் தமக்கு தங்க இடம் கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
கலபொடத்தே ஞானசார தேரர் பணத்திற்காக இவ்வாறன செயல்களில் ஈடுபடுகின்றாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என பாதிக்கப்பட்டதாக மெலவ்வே கல்யானதம்ம தேரர் தெரிவித்துள்ளார்.
Jaffna Muslim
0 comments:
Post a Comment