கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

'அல்லாஹ்' என்ற சொல் நீக்கப்பட்டது

 உலகலாவிய முஸ்லிம்களின் எதிர்ப்பின் காரணமாக, ஐக்கிய அமெரிக்க பொப் இசைப் பாடகியின் பாடல் ஆல்ப...த்தில் இருந்து ‘அல்லாஹ்’ என்ற சொல் தொழிணுட்ப ரீதியாக நீக்கப்பட்டுள்ளது.

KatyPerry எனும் பாடகியின் 'Dark Horse' என்ற பாடல் ஆல்பத்தின் ஒரு பாடல் காட்சியில், அவள் அணிந்திருக்கும் மாலையில் ‘அல்லாஹ்’ என்ற அரபுச் சொல் தொங்கவிடப்பட்டிருந்தது. இக் காட்சி அடங்கிய பாடல் யூடியுப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இச் செயலைக் கண்டித்து ஐக்கிய ராச்சியத்தின் பிராட்போடு (Bradford, UK) வைச் சேர்ந்த ஷாசாத் இக்பால் Shazad Iqbal என்ற முஸ்லிம் வாலிபன், Change.org என்ற வலைத்தளத்தின் ஊடாக, மேற்படி வீடியோவுக்கு எதிராக முறைப்பாடு ஒன்றுக்காக ஆள்சேர்ப்புப் பணியில் ஈடுபட்டார். அவருடைய முயற்சியின் விளைவாக தற்பொழுது அப் பாடல் காட்சியில் ‘அல்லாஹ்’ என்ற சொல் நீக்கப்பட்டுள்ளது.

‘எல்லோருடைய ஒத்துழைப்பும் கிடைக்காமல் இருந்திருந்தால் இதனை சாத்தியப்படுத்தியிருக்க முடியாது. நான் அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கின்றேன். நமது கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைவருக்கும் அல்லாஹ்தஆலா நல்லருள் பாளிப்பானாக’ என்று ஷாசாத் கூறியுள்ளார். இவ் இணைய முறைப்பாட்டில் 65,000 பாவனையாளர்கள் ஒப்பமிட்டிருந்தனர்.

தகவல் மூலம்: OnIslam(Hisham Hussain, Puttalam)

0 comments:

Post a Comment