நாணயத்தாள்களில் ஒஸாமா பின்லாடன்..! (படம் இணைப்பு)
சிரியா, ஈராக் நாடுகளைச் சேர்ந்த கடும்போக்கு குழுவொன்று தமது கட்டுப்பாட்டு பகுதிகளில் புழக்கத்தில் விட்டிருக்கும் நாணயத் தாளில் ஒசாமா பின்லாடனின் படத்தை இணைத்துள்ளது.
தமது இறையாண்மை கொண்ட பகுதியாக அறிவித்த பகுதியில் இந்த தீவிர குழு புழக்கத்தில் விட்டிருக்கும் நாணயத்தாளுக்கு இஸ்லாமிய நூறு பவுண்ட் என்று பெயர் வைத்துள்ளது. ஈராக் இஸ்லாமிய தேசம் குழுவினாலேயே இந்த நாணயம் வெளியிடப்பட்டிருப்பதாக நம்பப் படுகிறது.
எனினும் இது ஆங்கில பெயரான பவுண்ட் என்ற பெயர் சூட்டியிருப்பதால் இது அல் கொய்தா அமைப்பினரின் நாணயம் அல்ல என்று குவைட்டில் இருக்கும் நிபுணர் ஒருவர் அல் ராய் இணையதளத்திற்கு குறிப்பிட்டிருக்கிறார்.
எனினும் ஈராக்கின் வடக்கு அண்பார் மாகாணத்தில் தீவிரவாத குழு தம்மை பல்வேறு பெயர்களிலும் அறிமுகப் படுத்திக்கொள்வதாக பக்தாதிலிருந்து இயங்கும் ஷபிக் செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.
Jaffnamuslim.com
0 comments:
Post a Comment