கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

அரசனைப் புரிந்து கொள்ளாத முஸ்லிம் அரசியல்வாதிகள்...!


வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அண்மையில் 'ஜனாதிபதி சொல்வது ஒன்று செய்வது மற்றொன்று' என்று கூறினார். அப்படியென்றால் பொய்யன் அல்லாது போனால் வேஷக்காரன் என்றுதானே அர்த்தப்படும் அல்லவா? விக்னேஸ்வரனுக்கு அரசியல் முதிர்ச்சி இல்லாவிட்டாலும் அநுபவ முதிர்ச்சி உண்டு. விக்னேஸ்வரன் ஜனாதிபதியை ஒரு போதும் நம்பப் போவதில்லை. இதே கடும்போக்கைக் கொண்டவர்தான் சம்பந்தனும். அவர்கள் ஜனாதிபதியை எடைபோட்ட அளவுக்கு நமது முஸ்லிம் தலைவர்கள் எடைபோடவில்லையென்பது மிகவும் கவலைக்குரிய விடயம். அதற்கு அண்மைய சம்பவம் ஒன்று கூறுகின்றேன். தெஹிவளையில் ஒரு பள்ளிவாசல் தாக்கப்பட்ட போது ஜனாதிபதியிடம் ஒரு முஸ்லிம் பிரதிநிதி முறையிட்டார். அதற்கு ஜனாதிபதி ' ஆ! அப்படியா! இது பற்றி எனக்குத் தெரியாதே! எப்போது? என்றாராம்.
 
முஸ்லிம்களின் புனிதஸ்தலம் இடிக்கப்படுகின்ற போது அல்லது தாக்கப்படும் போது அதைத் தடுக்கும் தலையாய பொறுப்பு எல்லா முஸ்லிம் அரசியல் வாதிகளையுமே சாரும்.

இலங்கைத் தமிழர்களுக்காக தமிழ்நாடு கூக்குரல் இட்டுக்கொண்டிருக் கின்றது. 'போர்க்களத்தில் ஒரு பூ ' என்ற திரைப்படத்தை ஜெனிவாக்கும் அனுப்புவதோடு தமிழகம் மட்டுமல்லாது உலகம் பூராகவும் தோலுரித்துக் காட்டவுள்ளது.

இலங்கை முஸ்லிம்களுக்கு உள்ள கால அவகாசம் சொற்பம். எனவே ஜனாதிபதியின் பேச்சை நம்புவதா? வீதீப் போராட்டங்களில் ஈடுபடமாட் டோம் என்கின்ற பொதுப்பல சேனாவின் பொய்ப்பேச்சை நம்புவதா ? ஜெனீவா மாநாடு முடியுமட்டும் அடக்கி வாசிக்கும் சிங்கள ராவையை நம்புவதா ? நித்திரையில் ஆழ்ந்திருக்கும் ஹெல உறுமையை நம்புவதா என்ற முடிவை விரைவாக எடுக்க வேண்டும்.
 
ஏனெனில் முஸ்லிம் நாடுகளை இலங்கைக்கு எதிராக? அல்லது சார்பாக வாக்களிக்குமாறு வற்புறுத்துவதற்காகவேயன்றி வேறெதற்கும் அல்ல. ஐ.நா ஆணையாளர் நவநீதம் பிள்ளையுடன் கை கோர்ப்பதா இல்லையா என்ற முடிவை எட்டுவதற்கும் முழு முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து தீவிர முடிவெடுங்கள்..!
 
(றிசானா பசீர்)

0 comments:

Post a Comment