கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

தெஹிவளை ஷாபி பள்ளி மீது பொலிஸார் வழக்கு. (காரணம் சமாதானம்)

தெஹிவளை கடவத்தை வீதி தாருஷ் ஷாபியா பள்ளிவாசலினால் பிரதேசத்தின் சமாதானத்திற்குப் பங்கம் ஏற்படுவதாகக் கூறி கொஹுவளை பொலிஸார் கங்கொடவில மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணை எதிர்வரும் 6ஆம் திகதி இடம்பெறவுள்ளது. கடந்த 20ஆம் திகதி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக கடவத்தை வீதியில் இயங்கிவரும் வக்பு சபையின் அங்கீகாரம் பெற்ற குறித்த பள்ளிவாசலின் சமாதானத்துக்கு பங்கம் ஏற்படுவதாகக் கூறி தண்டனைச் சட்டத்தின் 98/1 ஷரத்தின் கீழே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த செவ்வாயன்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ கலந்துகொண்ட முஸ்லிம் பிரமுகர்களது கூட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எம். ஸுஹைர் இந்த விடயம் குறித்து பாதுகாப்புச் செயலாளரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.
இதுகுறித்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்கவுடன் தொடர்பு கொண்ட பாதுகாப்புச் செயலாளர் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருப்பது பற்றி விபரங்களைக் கேட்டறிந்துள்ளார். மேலதிக நடவடிகைகள் தொடர்பில் பணிப்புரையை வழங்கினர். இது தொடர்பாக அங்கிருந்த சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி மற்றும் முன்னாள் எம்.பி. ஸுஹைர் ஆகியோருக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபருடன் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இதேநேரம் கடந்த புதனன்று முன்னாள் எம்.பி ஸுஹைருடன் தொடர்ப கொண்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்க குறித்த வழக்கினை வாபஸ் பெறுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார். பிரதேச வாசிகள் எட்டுப் பேர் பள்ளிவாசல் நடவடிக்கைகள் தமக்கு தொல்லைகள் தருவதாக முறைப்பாடு செய்துள்ளதனையடுத்தே பொலிஸார் இந்த வழக்கினைத் தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த 3 மாத காலமாக இப்பள்ளி வாசலுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பள்ளிவாசலுக்கு கல்லெறிந்த சம்பவம் ஒன்றை அடுத்தே பாதுகாப்புப் போடப்பட்டது.
இதேநேரம் கடந்த செவ்வாயன்று பிரதேச உயர் பொலிஸ் அதிகாரிகள் பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து வழக்குத் தாக்கல் செய்திருப்பது பற்றி அறிவித்துள்ளது. புதனன்று காலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரவீந்திர சரபிடிய மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கினிகே ஆகியோர் பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து பொலிஸாரைஇப்பள்ளிவாசலை மூடிவிடுமாறு கேட்டுள்ளார்களா என வினவியுள்ளார். இதுவரை பள்ளிவாசலை மூடிவிடுமாறு கேட்கப்படவில்லை எனத் தெரிவித்ததாக நிர்வாக சபையின் செயலாளர் பிஸ்ருல் ஹாஜி தெரிவித்தார்.

வழக்குப் போடப்பட்டதற்கான பின்னணியையும் இவர்கள் விளக்கியுள்ளார். இதேநேரம், இப்பள்ளிவாசலுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குத் தொடருமாயின் அதனை எதிர்கொள்வதற்கு தாம் தயாராக இருப்பதாக சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நுர்தீன் தெரிவித்தார்.
வழக்கு தொடர்பாக நீதிமன்றம் இப்பத்திரிகை அச்சுக்குப் போகும்வரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என்றும் பள்ளிவாசல் செயலாளர் அல்ஹாஜ் பிஸ்ருல் ஹாஜி தெரிவித்தார்.

கடந்த செவ்வாயன்று கூடிய தெஹிவளை பள்ளிவாசல் சம்மேளன மாதாந்தக் கூட்டத்திலும் இது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

(நவமணி: 28.02.2014)
-NM Ameen-

0 comments:

Post a Comment