கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

இந்தோனேசியாவில் எரிமலை சீற்றம்: பள்ளி சிறுவர்கள் உள்பட 16 பேர் மரணம்.

புவியியல் தன்மையில் எரிமலை வளையத்தைச் சேர்ந்த இந்தோனேசிய நாட்டில் 150 எரிமலைகள் உள்ளன.

அவற்றுள், இன்னும் 130 எரிமலைகள் செயல்படும் தன்மையுடன் உள்ளதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த எரிமலைகளுள் ஒன்றான 1,731 மீட்டர் உயரமுடைய கெலட் கடந்த சில வாரங்களாகவே குமுறிக் கொண்டிருந்துள்ளது.

இதன் காரணமாக அந்த எரிமலையிலிருந்து 10 கி.மீ சுற்றளவில் உள்ள 36 கிராமங்களில் வாழ்ந்துவரும் 2 லட்சம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி அரசு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு அந்த எரிமலை சீறியுள்ளது. அது வெடித்துச் சிதறிய சப்தம் 130 கி.மீ தொலைவில் உள்ள நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான சுரபயாவிலும், அதற்கு அப்பால் உள்ள ஜோக்யகர்டாவிலும் கேட்டுள்ளது.

அந்த சீற்றத்தில் வெளியேறிய சாம்பல் படிவங்கள் இந்த நகரங்களின் தெருக்கள் முழுவதும் பரவியுள்ளன.
எரிமலையை ஒட்டியுள்ள பண்ணைகளில் இருக்கும் விலங்குகள் முழுவதும் சாம்பல் படிந்து காணப்படுவதை ஊடக நிகழ்ச்சிகள் வெளிப்படுத்தின.
இன்று காலை பரவிய சூரிய வெளிச்சத்தில் எரிமலை சீற்றத்தின் பாதிப்பு வெகுதூரம் வரை பரவியிருந்தது தெரிய வந்தது.

எரிமலை சாம்பலும், அதன் விளைவாக எழுந்துள்ள தூசு மண்டலமும் பார்வைத்தன்மையை வெகுவாகக் குறைத்துள்ளதாலும், விமான எஞ்சின்கள் பாதிப்படையும் என்பதினாலும் சுரபயா,சோலோ மற்றும் ஜோக்யகர்டா ஆகிய மூன்று நகரங்களிலும் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சக செய்தித் தொடர்பாளர் பம்பங் எர்வன் தெரிவித்துள்ளார்.



எரிமலை வெடிப்பு ஏற்பட்ட பகுதியிலிருந்து 2.7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுகமெரியா கிராமத்தின் சாலையோரத்தில் சாம்பல்களால் மூடப்பட்ட உடல்கள் கிடந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 16 பேரின் உடல்களும் அடையாளம் காணப்பட்டன. சிறுவர்கள் 5 பேரும் எரிமலையை வேடிக்கை பார்க்கச் சென்றபோது அதில் சிக்கிக் கொண்டது தெரிய வந்துள்ளது.
விபத்தில் சிக்கிய 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

""இந்த எரிமலைச் சீற்றத்தில் மேலும் பலர் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது. எரிமலைக்கு அருகில் உள்ள பாதைகளில் அதிக அளவு வெப்பம் கொண்ட சாம்பல்கள் பரவிக் கிடப்பதால் மீட்புப் பணி பாதிக்கப்பட்டுள்ளது'' என்று தேசிய பேரிடர் மீட்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் நக்ரோஹோ தெரிவித்தார். இது, இந்தோனேசியாவில் சமீபத்தில் நிகழ்ந்த எரிமலைச் சீற்றங்களில் மிகவும் பயங்கரமானது என்று அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

A man wears a mask as he rides a rickshaw on a road covered with ash from Mount Kelud, in Yogyakarta, 14 February 2014

A man covered with ash from Mount Kelud is seen on his motorcycle in Yogyakarta, 14 February 2014
 

0 comments:

Post a Comment