கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

சிங்கள ராவைய அமைப்புக்கு எதிராக பொலிசில் முறைப்பாடு

கடும்போக்கு சிங்கள ராவைய அமைப்புக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் எஸ்.எல்.எம் .ஹனீபா மதனி அவர்களினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது  .
அக்கரைப்பற்று போலிஸ்  நிலையத்தில் அவரினால் செய்யபட்டுள்ள முறைப்பாட்டில்  சிறுபான்மை முஸ்லிம்களின் உரிமைகளுக்கு எதிராக சிங்கள ராவைய அமைப்பின் நடவடிக்கைகளுக்கு எதிராக பொலிசாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.
சிங்கள ராவய அமைப்புக்கு எதிராக, ஹனீபா மதனி பதிவு செய்துள்ள முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவதுள,
கடந்த 17 மற்றும் 19 பெப்ரவரி 2014 ஆம் திகதிகளில் வெளியான தமிழ் தினசரி பத்திரிகையில் இரண்டு செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்தன.மேற்படி செய்திகளின்படி, நாட்டில் மாடறுப்பினை அரசாங்கம் உடனடியாக தடைசெய்ய வேண்டும் என்றும், அப்படி தடை செய்யாது விட்டால், சிங்கள ராவய எனும் அமைப்பிலுள்ளவர்கள் தமக்குத் தாமே தீவைத்து தற்கொலை செய்து கொள்வார்கள் எனவும் அந்த அமைப்பினர் தெரிவித்திருந்தனர். மேலும், இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் சமூகத்தினை இஸ்லாமியப் பயங்கரவாதிகள் எனவும் சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரட்ண என்பவர் கூறியிருந்தார்.
இந்தச் செய்திகளிலுள்ள விபரங்களை உள்ளடக்கி, மேலும் பல தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில மொழி ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டிருந்தன.
சிங்கள ராவய எனும் அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன என்பவர், குறித்த கூற்றினூடாக, நமது நாட்டின் நடைமுறையிலுள்ள இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் பிரிவுகளான 291 (ஆ), 300, 301, 485 ஆகியவற்றின் படி குற்றங்களைப் புரிந்துள்ளார்.
இதேவேளை, சிங்கள ராவய அமைப்பினர் ஆர்ப்பாட்டங்கள் எவற்றிலும் ஈடுபடுதல் கூடாது என்று, கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதவான் கௌரவ ஜிஹான் பலப்பிட்டிய கடந்த 30 ஜனவரி 2014 ஆம் திகதி உத்தரவொன்றினை வழங்கியிருந்தார். ஆயினும், மேற்படி நீதிமன்ற உத்தரவினையும் மீறி, சிங்கள ராவய அமைப்பினர் கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்திலும், சத்தியாக்கிரக நடவடிக்கைகளிலும், மோதல்களிலும் ஈடுபட்டிருந்தனர்.
சிங்கள ராவய அமைப்பின் இந்த நடவடிக்கைகள், நமது நாட்டின் மதிப்புக்குரிய நீதித்துறையினை அவமதிக்கும் செயற்பாடுகளாகும்.
மேலும், அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையிலும், முஸ்லிம் சமூகத்தினரின் சமய உணர்வுகளை பாதிக்க வேண்டும் என்ற திட்டமான கெடு நோக்கத்தினையுடைய கருத்துடனும், சமய நம்பிக்கைகளை நிந்தனை செய்ய எத்தனிப்பதுடன், அச்சத்தையும் மனக் கிலேசத்தினையும் ஏற்படுத்தி, சர்வதேச சட்டமான வாழு – வாழ விடு என்பதையும் மீறும் வகையில் சிங்கள ராவய எனும் அமைப்பு அண்மைக் காலமாக நடந்து வருகிறது. இவையனைத்தும் சட்டத்தின்படி குற்றச் செயல்களாகும்.
எம்.அம்றித்: 

0 comments:

Post a Comment