சகோதரர் A.R.M. ஹலீம் அவர்கள் கல்கமுவயில் காலமானார்.
கஹடோவிடாவைச் சேர்ந்த சகோதரர் A.R.M. ஹலீம் அவர்கள் கல்கமுவயில் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ரஜிஊன்.
அன்னார் காலம் சென்ற அப்துர் ரஹ்மான், மஹ்புபா தம்பதிகளின் மகனும், கல்கமுவவைச் சேர்ந்த சித்தி ஸுலைஹா அவர்களின் அன்புக் கணவரும். மர்ஹும் உம்மு ஜஸீமா, ஷாஹுல் ஹமீத், மற்றும் நஜுமுன்நிஸா, ராஸீக் ஆசிரியர் ஆகியோரின் சகோதரனும். அல் அக்பர் பாடசாலை அதிபர் சகோதரி அவர்களின் சாச்சாவும், அல் ஹாஜ் இக்பால், ஆசிரியர் இக்பால் நாஸர் ஆகியோரின் மாமாவும், ஆசிரியா் ஹிசாம் ராஸிக், ரப்ஸன் ஜானி, சியாம் ஹமீட், அஷ்ஷபா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
அனனாரின் ஜனாஸா இன்று ( 06.02.2014) பிற்பகல் 3.00 மணியளவில் கல்கமுவ ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
اَللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مَدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ اْلأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ [وَعَذَابِ النَّار
இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள்புரிவாயாக! இவருக்கு சுகம் அளிப்பாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவரது தங்குமிடத்தை மதிப்புமிக்கதாக ஆக்குவாயாக! மேலும் விசாலமானதாக இவரது நுழைவிடத்தை ஆக்குவாயாக! வெண்மையான ஆடை அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்துவதுபோல் இவரை இவரது தவறுகளிலிருந்து தண்ணீராலும் ஆலங்கட்டி நீராலும் பனிக்கட்டியாலும் தூய்மையாக்குவாயாக! இவரது இல்லத்தை விட சிறந்த இல்லத்தை (மறுமையில்) அளிப்பாயாக! இவரது துணையைவிட சிறந்த துணையை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இவரைச் சுவனத்தில் நுழையச் செய்து கப்ருடைய வேதனை, நரகவேதனை ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவாயாக!
0 comments:
Post a Comment