முஸ்லிம் காங்கிரஸ் கம்பஹாவில் வேட்பு மனு தாக்கல்
மேல் மாகாண சபை தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை முஸ்லிம் காங்கிரஸ் இன்று திங்கட்கிழமை தாக்கல் செய்தது.
முஸ்லிம் காங்கிரஸின் கம்பஹா மாவட்ட முதன்மை வேட்பாளரும் கம்பஹா மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஷாபி ரஹீம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். கம்பஹா மாவட்ட செயலகத்தில் வேட்பு மனு தமாக்கல் இடம்பெற்றது.
இதன் போது, நீர்கொழும்பு மாநகர சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரும் கம்பஹா மாவட்ட வேட்பாளருமான ஹீஸான் மற்றும் வேட்பாளர் ஸஹ்ரான் ஆகியோரும் உடன் சமூகமளித்தனர்.
0 comments:
Post a Comment