நாட்டில் பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டிருந்தால் அதனை நிரூபிக்கட்டும் - மஹிந்த பகிரங்க சவால்
பள்ளிவாசல்களும், கத்தோலிக்க ஆலயங்களும் உடைக்கப்படுவதாக சில கட்சிகளும், சமய ரீதியான கட்சிகளும் பாரியளவிலான பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றன. எங்கே, எவ்வாறு உடைக்கப்பட்டுள்ளன..? இந்த போலி பிரச்சாரங்கள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்,
கம்பஹா மாவட்டத்தில் நடைபெற்ற பௌத்த சமய நிகழ்வில், பெரும் எண்ணிக்கையிலான பௌத்த பிக்குகள் பங்கேற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில்,
சமயத்தின் பெயராலும், இனத்தின் பெயராலும் இயங்கிவரும் கட்சிகள் எமது நாட்டுக்கு எதிராக சர்வதேசத்திற்கு தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளன. பள்ளிவாசல்களோ அல்லது தேவாலயங்களோ எங்கும் உடைக்கப்படவில்லை. நாட்டில் பள்ளிவாசல்களோ அல்லது தேவாலயங்களோ உடைக்கப்பட்டிருந்தால் அதனை நிரூபிக்கட்டும்.
பள்ளிவாசலுக்கு சொந்தமில்லாத காணியில் பள்ளிவாசல் நிர்மாணிக்க முடியாது என குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. வீடுகளில் பள்ளிவாசல்கள் இயங்கமுடியாது என்றும் குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. அப்படியென்றால் பள்ளிவாசல்களை உடைத்தார்கள், மத ஸ்த்தலங்களை உடைத்தார்கள் என்று ஏன் பொய் சொல்கிறார்கள்..?
0 comments:
Post a Comment