கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

'பேஸ்புக்கில் இணைந்ததால் சிரியாவில் பெண் கல்லால் அடித்துகொலை' என்பது சுத்தப் பொய்..!


மேற்படி தலைப்பில் ஒரு தகவல் பேஸ்புக்கிலும் இணையத்தளங்களிலும் மிக வேகமாக பரப்பப்பட்டுக்கொண்டிருக்கிறது. இதனை சில இணையத்தளங்களும், முகநூல் குழுமங்களும் எவ்வித ஆதாரமும் இன்றி, கொஞ்சமும் ஆராயாமல் வெளியிட்டு வருகின்றன.

சிரியா இஸ்லாமிய முஜாஹிடீன்களையும், இஸ்லாமிய போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாக மேற்படி தகவல் ஷீஆ ஆதரவு ஊடகங்களால் உருவாக்கப் பட்டு பரப்பப் பட்டு வருகின்றது. அதன் உண்மை தன்மையை அறியாமல், ஆராயாமல் பல்வேறு தரப்புக்களாலும், தனிநபர்களாலும் மீண்டும் மீண்டும் பரப்பப்பட்டுக்கொண்டிருக்கிறது.

அந்தத்தகவல் முற்றிலும் பொய்யானதாகும்! எவ்வித ஆதாரமுமற்றதாகும்!!!

இன்று சிரியா நாடு இருக்கும் நிலையில், பெரும் குற்றங்களுக்கு தண்டனை வழங்கவே நீதிமன்றங்கள் செயல்படாத நிலையில், எவ்வித அரச நிறுவனங்களும் ஒழுங்காக செயல்படாத நிலையில், இது போன்ற விடயங்களை விசாரிக்க எவ்வித நீதிமன்றகளும் இல்லை. சிரியாவில் பாடசாலைகளே ஒழுங்காக செயல்படுவதில்லை.

மேலும், பேஸ்புக்கில் இணைவது என்பதற்கு எதிராக எவ்வித இஸ்லாமிய சட்டங்களும் இல்லை, அதற்காக தண்டனை வழங்கவும் முடியாது.

மேற்படி போலியான தகவலுக்காக இணைத்து வெளியிடப்பட்ட புகைப் படத்தினைக்கொண்டே அது எவ்வளவு தூரம் போலியானது என்பதனை புரிந்து கொள்ளலாம்.

உண்மையில் அந்தப் புகைப்படம், ஒரு பெண்ணை கல்லால் அடித்து கொல்வது போன்ற காட்சி ஆகும், இது ஒரு சினிமா படத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகும். அந்தப் படத்தின் பெயர் "The Stoning of Soraya M". அந்தக் காட்சியில் நடித்தவர் Mozhan Marno என்ற ஈரானிய நடிகை ஆவார்.

2010 ஆம் ஆண்டு சைரஸ் நவ்ரஸ்தேஹ் என்பவரால் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அந்த திரைப் படத்தில் ஈரானில் உள்ள ஒரு கிராமத்தில் மேற்படி கதை நடப்பதாக ஒரு காட்சி அமைத்திருந்தார்கள். அப்போது அந்தப் படம் ஈரானில் தடை செய்யப்பட்டு இருந்தது.

மேற்படி திரைப்படம் குறித்த மேலதிக தகவல்களை இந்த இணைப்பில் சென்று விக்கிபீடியாவில் பார்வையிடலாம்.
http://en.wikipedia.org/wiki/The_Stoning_of_Soraya_M.

பொய்களை பரப்புவதனை தவிர்ப்பதுடன், மேற்படி செய்தியை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுவோம். மேற்படி பிழையான செய்தியை பகிரும் இடங்களில், இதனை Copy & Paste செய்வோம்.

0 comments:

Post a Comment