ஹிட்லர் 95 வயது வரை வாழ்ந்ததாக பரபரப்புத் தகவல்
கொடுங்கோல் ஆட்சியாளராக அறியப்பட்ட ஹிட்லர் தனது 95 ஆவது வயது வரை உயிர்வாழ்ந்ததாக நூலாசிரியர் ஒருவர் புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளார்.
2ஆம் உலகப் போரின் இறுதியில், 1945ஆம் ஆண்டு பெர்லின் பாதாள அறைக்குள் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு ஹிட்லர் உயிரிழந்தார் என்பதுதான் வரலாற்று தகவலாக இருந்தது.
ஆனால் ஹிட்லர் சாகவில்லை, தப்பி விட்டார் சிமோனி ரெனீ குரேரியோ என்ற முதுகலை மாணவி தான் வெளியிட்டுள்ள ர்வைடநச Hitler in Brazil - His Life and His Death, என்ற நூலில் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இத்தகவலின்படி,
ஹிட்லர் 1984ஆம் ஆண்டு வரை உயிர் வாழ்ந்துள்ளார். தனது 95வது வயதில்தான் இயற்கையாக அவர் மரணமடைந்துள்ளார். அவர் தனது வாழ்நாளின் கடைசிக் காலத்தை பிரேசிலில் கழித்துள்ளார்.
பெர்லினை விட்டுத் தப்பிச் சென்ற ஹிட்லர் ஒரு கருப்பர் இனப் பெண்ணுடன் காதல் கொண்டு அவருடன் சில காலம் வாழ்ந்துள்ளார்.
ஹிட்லரின் சகாப்தம் பெர்லின் பதுங்கு குழியோடு முடியவில்லை. 2ம் உலகப் போரில் ஜெர்மனி வீழ்ந்ததை அறிந்த ஹிட்லர் உடனடியாக தப்பி ஓடி விட்டார். ஜெர்மனியை விட்டு வெளியேறிய அவர் பல நாடுகளுக்கும் மாறு வேடத்தில் போயுள்ளார்.
தென் அமெரிக்க நாடுகளில் அர்ஜென்டினா போயுள்ளார், பராகுவே போயுள்ளார். கடைசியாக பிரேசில் வந்து சேர்ந்துள்ளார்.
இந்த நாடுகளில் ஹிட்லர் மற்றும் அவரது கூட்டு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பல அரிய பொக்கிஷங்களை மறைத்து வைத்துள்ளனர். அதைத் தேடித்தான் ஹிட்லர் போனதாக கூறப்படுகின்றது.
பொலிவியா நாடுகளுக்கிடையிலான எல்லைப் பகுதியில் பிரேசிலுக்குட்பட்ட மாடோ கிராஸ்ஸோ என்ற மாகாணத்தில்தான் ஹிட்லர் தலைமறைவாக 1984ஆம் ஆண்டு வரை வாழ்ந்துள்ளார்.
இந்த நாடோடிப் பயணத்தின்போது அவருக்கும், கருப்பர் இனத்தைச் சேர்ந்த குட்டிங்கா என்ற பெண்ணுக்கும் இடையே நட்பும், காதலும், உறவும் ஏற்பட்டதாம்.
அடோல்ப் லிப்ஸிக் என்ற பெயரில் பிரேசிலுக்குத் தப்பி வந்த ஹிட்லர் தனது பெயரை அடோல்ப் லிப்ஸிக் என்று மாற்றிக் கொண்டு வாழ்ந்ததாக ரெனீ கூறுகிறார்.
ஹிட்லரை அங்குள்ளவர்கள் ஜெர்மனியைச் சேர்ந்த தாத்தா என்று அழைத்து வந்துள்ளனர் அந்நூலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
tamilmirror
0 comments:
Post a Comment