கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

“ஒரு சத்தியப் போராளியின் இலட்சிய உரை” - மரணித்த வங்கத்தின் ஜமாத் -ஏ- இஸ்லாமியின் தலைவரின் வைர வரிகள்!!

 
“ஷஹீத் என்பவன் யார் தெரியுமா?. இறைவனின் சட்டங்கள் தனது வாழ்வினை விட பெறுமதியான என்பதனை தனது மரணத்தின் மூலம் நிரூபணம் செய்பவன்” - செய்யது குதுப்

ரண்டு முறை பிற்போடப்பட்ட மரண தண்டனைக்கான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை வழங்கியது. வெள்ளிக்கிழமை டாக்கா மத்திய சிறைச்சாலையில் அப்துல் காதிர் முல்லா தூக்கிலிடப்பட்டார். 1971-ல் நிகழ்ந்த போர் குற்றங்களிற்கு காரணாமாக இருந்தவர்களின் ஒருவர் என்பதே, இவர் மீதான மரணதண்டனைக்காக நியாயப்படுத்தப்பட்ட அரசு தரப்பு காரணம். அவரது பிறப்பிடமான பரீத்பூரில் வைத்து அவரின் சகோதரரிடம் முல்லா அப்துல் காதிரின் உடலம் கையளிக்கப்பட்டு பின்பு நல்லடக்கம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் அந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். அரச உளவாளிகள் உட்பட.

 பெப்ரவரியில் ஆயுட் தண்டனை விதிக்கப்பட்ட ஒரு மனிதரை மீண்டும் நீதி மன்றத்திற்கு அழைத்து மரண தண்டனை வழங்கிய விசித்திரம் வங்க தேசத்தில் நிகழ்ந்துள்ளது. அவரது சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் காரணம் கூறப்படாமலே நிராகரிக்கப்பட்டன. அப்பீலும் மறுக்கப்பட்டது. எல்லாமே அவசர அவசரமாக ட்றயல் முறையில் நடாத்தி முடிக்கப்பட்டன. ஒரு இராணுவ ஜுண்டா அரசு செயற்படும் விதத்தில் பங்களாதேஷ் அரசு செயற்பட்டு தீர்ப்பை எழுத வைத்து நிறைவேற்றியும் உள்ளது. வங்க அரசின் பின் எந்த ஏகாதிபத்தியம் உள்ளது. அது எதனை செய்ய நினைக்கிறது என்பது பற்றிய பதிவை இன்ஷாஅல்லாஹ் வரும் காலத்தில் பதிவிடுவோம்.

தனது மரணத்திற்கு முன்னர் அவர் எழுதிய செய்தியொன்றை islam21c.com  வெளியிட்டுள்ளது. அதில் அவர்....

நான் அநியாயமாக கொல்லப்பட்டால் இறைவனிடத்தில் அவனது மார்க்கத்திற்காக உயிரை அர்ப்பணித்த தியாகியாக ஏற்றுக்கொள்ளப்படுவேன். இதில் கவலைகொள்ள எந்தவொரு காரணமும் இல்லை. நான் எந்த குற்றமும் செய்யவில்லை. அவர்கள் என்னை அநியாயமாக கொலை செய்யவுள்ளனர். எனது கொலைக்கு காரணம், நான் இஸ்லாமிய இயக்க செயற்பாடுகளில் முனைப்பாக இருந்ததும், எனது கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் இஸ்லாத்தை நோக்கி திரும்பியதுமாகும். இது தான் நான் செய்த குற்றம். இது குற்றம் என்றால் இந்த குற்றத்தை நான் எனது சுவாசம் இருக்கும் வரை திரும்ப திரும்ப செய்வேன். ”

”எனது உடலில் இருந்து சிந்தப்படும் ஒவ்வொரு துளி இரத்தமும் இஸ்லாமிய இயக்கத்திற்கு உரம் ஊட்டுவதாக அமைய வேண்டும் என நான் விரும்புகிறேன். அது நிச்சயம் நடக்கும். நான் எனது வாழ்நாள் முழுவதையும் பங்களாதேஷ் இஸ்லாமிய இயக்கத்தின் செயல் நடவடிக்கைகளிற்காகவே அர்ப்பணித்தேன். நான் தவறான ஆட்சியாளர்களின் இஸ்லாமியவிரோத அரசியல் முடிவுகளிற்கு ஆதரவாக பேசவில்லை. அதனை கடுமையாக எதிர்த்தேன். விமர்சித்தேன். 1971-ல் நான் எதை செய்தேனோ அதனைத்தான் 2013-இலும் செய்து கொண்டிருக்கின்றேன். இஸ்லாத்திற்கு எதிரான எந்த ஜனநாயகத்தையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இது தான் ஆட்சியாளர்களிற்கு என் மேல் கோபம் ஏற்படவும், என் கருத்துக்களின் மேல் அச்சம் ஏற்படவும் காரணமாக அமைந்தது. எனது மரணம் எனது சிந்தனையின், எனது செயலின், எனது பிரச்சாரத்தின் சத்தியத்தன்மைக்கு சான்று பகர்வதாக அமைவதையிட்டு நான் திருப்தி அடைந்தவனாகவே உள்ளேனன். இதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.” 

என அவர் தெரிவித்திருந்தார். 

ஒரு இஸ்லாமிய ஊழியன் தனது கடைசி நிமிடங்களில் எவ்வாறு நடந்து கொள்வான் என்பதற்கான சான்று மீண்டும் நிரூபணமாகியுள்ளது. இறைவனின் பாதையில் அவனது மார்க்கத்திற்காக உழைத்த ஒரு இறைவனின் அடிமை தனது வாழ்வை அவர் சுமந்த கொள்கைக்காக அர்ப்பணம் செய்துள்ளார். எகிப்தில் அன்று அப்துல் காதர் அவ்தாவும், செய்யது குதுபும் காட்டிய தியாகத்தின் பாதை புற்களும் பற்றைகளும் மண்டி தடம் தெரியாமல் போயிருந்த வேளை நேற்று அந்த பாதையின் வெளிச்சத்தை ஒரு உன்னத மனிதன் தன் உயிரின் மூலம் துப்பரவு செய்து எமக்கு காண்பித்துள்ளான். 

 “ஜனநாயகம் என்ற பெயரில் ஆளும் தாகூத்திய சக்திகளின் கொள்கைகளிற்கு அடிபணியாமல் இஸ்லாத்தை ஆட்சியின் தலைமையில் கொண்டு வர உழைத்த ஒரு மனிதனின் கதை முடிவிற்கு வந்துள்ளது. இதில் நாம் என்ன படிப்பினையை கண்டு கொண்டுள்ளோம் சகோதரா?...”
அன்னாரின் பர்சக்குடைய வாழ்க்கைக்கும் மறுமை வாழ்க்கைக்கும் இறைவனிடத்தில் நாம் நாம் பிரார்த்தனை செய்வோமாக. 

கைபர்தளம்.

0 comments:

Post a Comment