கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

முஸ்லிம் உம்மாவின் 2013 !!


2013-ம் ஆண்டு எம்மை கடந்து செல்கிறது. மத்தியகிழக்கின் பாலைவனங்களிலும், கவ்கஸ்ஸின் பனிப்படுக்கைகளிலும், ஆப்கானின் பள்ளத்தாக்குகளிலும், ஆபிரிக்க சதுக்கங்களிலும் இருந்து கிளம்பும் நெடியில் முஸ்லிம்களின் மரண வாசனை மட்டுமே வீசுகிறது. உலகின் ஏனைய இனங்கள் இயற்கை அனர்த்தங்களினாலும், விபத்துக்களினாலும் மரணித்த அதே காலப்பகுதியில் முஸ்லிம்கள் மட்டும் பித்தளை தோட்டாக்களாலும் கந்தக குண்டுகளாலும் மட்டுமே மரணித்து போயுள்ளனர். 2014 நல்ல வருடமாக பிறக்க வேண்டும் என எம்மால் பிரார்த்திக்க முடியாமல் உள்ளது. இனி வரும் வருடங்கள் இதை விடவும் மோசமானவையாகவே இருக்க போகின்றன. ஏன் அப்படி என்ற கேள்விக்கான விடை தான் என்ன?

2013-ல் முஸ்லிம்களின் இரத்தம் வெடிகுண்டு தாக்குதல்களினாலும், ட்ரோன் விமான தாக்குதல்களினாலுமே அதிகம் சிந்தப்பட்டுள்ளது. ஈராக்கிலும், பாகிஸ்தானிலும் மேற்குலக இஸ்லாமிய விரோத சக்திகள் ஷியா சுன்னி பிரச்சனைக்கு பின்னணியில் நின்று செயற்பட்டன. தற்கொலை தாக்குதல் என்ற பெயரில் முஸ்லிம்களை பரஸ்பரம் மோத விடுவதன் ஊடாக அவர்களின் அழிவையும், காட்டிக்கொடுப்புக்களையும் விரும்பி நின்றனர் அவர்கள். 

ட்ரோன் ஆளில்லா விமானங்கள் எமனிலும், வசிரிஸ்தானிலும் கொலை வேட்டையாடின. ஒரு போராளியை கொல்வதற்கு அந்த குறித்த பகுதியையே ஏவுகணைகள் மூலம் அழிப்பதன் மூலம் பல பொதுமக்களையும் சேர்த்து கொலை செய்தன இந்த அமெரிக்க விமானங்கள். 
பெண்கள், வயோதிபர்கள், குழந்தைகள் என்று வகை தொகையில்லாமல் கொன்று குவித்தன இந்த விமானங்கள். கடந்த காலங்களை விட 2013-ல் மிக மோசமான பல தாக்குதல்களை முஸ்லிம்கள் எதிர்கொண்டனர். 

எதிர் வரும் காலங்களில் உலகலாவிய முஸ்லிம் உம்மாவிற்கு எதிரான அநியாயங்களும், அழித்தொழிப்பு நடவடிக்கைகளும் மேலும் தீவிரமடையவிருக்கின்றன். இதற்கான தீர்வை முஸ்லிம் உம்மா எதன் ஊடாக தேடப்போகிறது?. நிச்சயமாக முஸ்லிம்களிற்கான தலைமைத்துவ அரசியல் சக்தியின் அவசியம் இவற்றிற்கான விடையாக அமையும். இஸ்லாமிய அரசியல் கொள்கையின் மையக்கருவான “அதிகாரம் அல்லாஹ்விற்கு மட்டுமே” என்ற சங்க நாதம் ஒவ்வொரு முஸ்லிமின் செவிப்பறையையும் அதிர வைக்க வேண்டும். ஒவ்வொரு முஸ்லிமின் உதடுகளும் இதனை, இந்த வார்த்தைகளை  அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும் உச்சரிக்க வேண்டும். அவன் நாடிகளின் துடிப்பில் இவை வெளிப்படல் வேண்டும். 

“ஆட்சி அதிகாரம் அல்லாஹ் ஒருவனிற்கே” என்ற கொள்கை முஸ்லிமின் குடும்பங்களில் இருந்து ஆரம்பமாக வேண்டும். அது இறுதியில் இஸ்லாமிய அரசியல் தலைமை எனும் கிலாபாவை உலகில் உருவாக்குவதற்கான முஸ்லிம் உம்மாவின் இலட்சிய அலையாக எழ வேண்டும். முஸ்லிம் கிலாபா என்பது குறிப்பிட்ட ஒரு அமைப்பின் கொள்கையல்ல. அதனை அவர்கள் மட்டும் உரிமை கோரவும் முடியாது. எந்த ஒரு முஸ்லிம் ஆணோ பெண்ணோ அஷ்-ஷஹாதத் கலிமாவை வாயினால் உரைத்து உள்ளத்தினால் அதனை நம்புவாரோ, அவர்கள் அனைவரினதும் பொதுக்கடமையே “இஸ்லாமிய கிலாபாவை உருவாக்குவதம் அதனை பாதுகாப்பதும்”. 

இஸ்லாமிய கிலாபா இல்லாத 2014-ல் நாம் காலடி எடுத்து இன்று வைக்கவுள்ளோம். இமாம் மஹதியும், ஈஸாவும் வந்து அதனை பார்த்துக்கொள்ளட்டும் அது வரை நாம் இணையத்தில் ஜிஹாத் செய்வோம் என்ற முனாபிக்தனமான முழங்கள்களுடன்..

0 comments:

Post a Comment