திஹாரியைச் சோ்ந்த தாஹா ஆசிரியரவர்கள் இன்று காலமாகியுள்ளார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்..
எனது பாடசாலை வாழ்வில் மறவாத ஆசான்களில் ஒருவா்தான் திஹாரியைச் சோ்ந்த தாஹா ஆசிரியா். நாம் ஆண்டு 3, 4 இல் கல்வி கற்ற காலத்தில் எமது வகுப்பாசிரியராக இருந்த ஒருவா். தாஹா ஆசிரியா் என்றாலே எமக்கு மிக்க மகிழ்ச்சி. ஏன் தெரியுமா ஒரு நாளைக்கு ஒரு கதை கூறுவார். அவா் கூறும் கதைகளைக் கேட்பதற்காகவே நாம் பாடசாலைக்கு கட் அடிப்பதில்லை. சித்திரம் வரைவதில் மகா கெட்டிக்காரர். தமிழ் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளையும் சரளமாகப் பேசக் கூடியவா். இப்படி எத்தனையோ விடயங்கள் எம் மனதில் அவா் பற்றிய பதிவுகள். பலரின் மனதில் நீங்கா இடம் பிடித்த அவா் இன்று மாலை தனது மறுமை வாழ்வை ஆரம்பித்துள்ளார். அல்லாஹ் அவரைப் பொருந்திக் கொண்டு நற்பாக்கியங்களை வழங்குவானாக! அவரின் மறுமை வாழ்வை சிறந்ததாக ஆக்குவானாக! அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதலை அளிப்பானாக!
اَللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مَدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ اْلأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ [وَعَذَابِ النَّار
இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள்புரிவாயாக! இவருக்கு சுகம் அளிப்பாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவரது தங்குமிடத்தை மதிப்புமிக்கதாக ஆக்குவாயாக! மேலும் விசாலமானதாக இவரது நுழைவிடத்தை ஆக்குவாயாக! வெண்மையான ஆடை அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்துவதுபோல் இவரை இவரது தவறுகளிலிருந்து தண்ணீராலும் ஆலங்கட்டி நீராலும் பனிக்கட்டியாலும் தூய்மையாக்குவாயாக! இவரது இல்லத்தை விட சிறந்த இல்லத்தை (மறுமையில்) அளிப்பாயாக! இவரது துணையைவிட சிறந்த துணையை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இவரைச் சுவனத்தில் நுழையச் செய்து கப்ருடைய வேதனை, நரகவேதனை ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவாயாக!
தகவல்
இஜாஸ் - ஜதாகுமுல்லாஹு ஹைரா
0 comments:
Post a Comment