அப்படியானால் இவர்கள் யார்? !!!
இன்றைய தினம் நீ ஒரு சவூதி மார்க்கத்தை பின்பற்றுபவனாக இருந்தால் சிரியாவின் விவகாரத்தில் நேற்றுவரை இருந்த நிலைப்பாடுகளை மாற்றிக்கொள் ! அது இஸ்லாமிய போராட்டம் எனும் நிலையில் இருந்து மகத்தான சவூதி மன்னரின் கட்டளையின் பெயரில் அது வெறும் உள்நாட்டு யுத்தமாக ,சிரிய அரசுக்கெதிரான கிளர்ச்சியாக மட்டுப்படுத்தப் பட்டுள்ளது .
சிரியாவின் அரசுக்கெதிரான போரில் பாதிக்கப்படும் முஸ்லீம் சிவிலியன்கள் தொடர்பில் அனுதாபப்படலாம் ஆனால் அந்த அநியாயத்தை செய்யும் அரசுக்கு எதிராக போராட்டத்தில் பங்கு கொள்ளவோ ,ஆதரவு அளிக்கவோ முடியாது .அவ்வாறு செய்வது சவூதி மன்னரின் நியாயங்களின் படி தண்டனைக்குரிய குற்றமாகும் .
ஓநாயாக இருந்து பார்த்தால் தான் ஓநாயின் நியாயம் புரியும் என்பார்கள் ! சிரியாவில் சகோதர இரத்தம் ஓட்டப்படுவதை காட்டி நேற்று அங்கு சென்று போராடி மரணிப்பது சஹாதத் அதனால் ,ஜன்னதுல் பிர்தௌஸ் என நேற்றுப் பேசிய நாவுகள் ,இன்று சிரிய முஸ்லிமின் இரத்தத்தை தக்காளி சட்னியாகவும் , அங்கு சிதறும் சதைகளை 'பிஸ்ஸா பீஸ்' களாகவும் பேசத் தூண்டும் அளவுக்கு U TERN ஏன் !?
இஸ்லாத்தின் பெயரால் ,இஸ்லாமிய நியாயத்தால் சிரிய விவகாரத்தில் திட்டமிட்டு இவர்கள் வீசிய 'பூமராங் ' பக்குவமாக இலக்கை தாக்கி கைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பை அந்தப் போராட்டம் மண்கவ்வ வைத்துள்ளது . இப்போது அது இவர்களது கழுத்தை சீவ வருகிறது .என்ன செய்யலாம் !? முடிவு அதே இஸ்லாத்தை வைத்து .......
1. அந்தப் போராட்டத்தை கொச்சைப் படுத்துவது .
2. குறித்த போராட்டத்தை இஸ்லாமிய போராட்டம் அல்ல என நிறுவுவது
3. குறித்த போராட்டத்தை முற்றாக நசுக்குவது .
இந்த வகையில் தனது நகர்வுகளை மிக அவசரமாக மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இன்று சவூதி மன்னராட்சி இருக்கிறது .எந்த 'கிலாபா ' என்ற கட்டமைப்பில் இருந்து முடியாட்சியை இலக்காக கொண்டு கிளர்ச்சி செய்து பிரிந்து வந்தார்களோ ,அதே 'கிலாபா ' தொடர்பான கோட்பாட்டு எதிர்வு கூறல் சிரியாவில் இருந்து வருவதுதான் இந்த U TERN போடுவதற்கான ஒரே காரணமாகும் .
1. சிரியாவின் அதிகாரத் தலைமையை மாற்றுதல் .
2. சிரிய இராணுவ பலத்தை சிதைத்தல் ,பலவீனப்படுத்தல் ,கட்டுப்படுத்தல் .
3. அரேபிய மன்னராட்சி ,முதலாளித்துவ மேற்குலகு என்பவற்றோடு ஒத்துப் போகும் ஒரு சிரிய தேசிய அரசை நிறுவுதல் .
என்ற திட்டங்களின் கீழ்தான் சவூதி மன்னராட்சி அதன் உளவுப் பிரிவுத் தலைவரான பந்தர் பின் சுல்தானின் நேரடி கண்காணிப்பின் கீழ் சிரிய விவகாரத்தில் சவூதி அரேபியர்களின் பங்களிப்பை வரையறுத்தது .வழமை போலவே C .I .A தனது பங்களிப்பை சரியாகவே செய்திருந்தாலும் இலக்கை அடைய முடியவில்லை . எனவே தமது
DI FENCE பற்றி அதே 'பத்துவா ' மேட்டரை வைத்தே டீல் பண்ண மன்னரிசம் முடிவெடுத்தது .
இஸ்லாத்தின் பெயரை சொல்லி மன்னர் கிரீடத்துக்குள் ஒழித்து வைத்திருக்கும் ரெடிமேட் 'பத்துவாக்களை', சவூதியின் அமெரிக்கன் பேஸ் இல் இருந்து விர்ர் என்று யெமன் முஸ்லிமை கொல்லப் புறப்படும் 'டிரோன் ' விமானத்துக்கு சல்யூட் அடித்து சொல்லிப்போகும் அஷ் செயக்கூட்டம் , இதனை எதிர்ப்பவர்களுக்கும் இரண்டு மார்க்கத் தீர்ப்புகளை வைத்துள்ளது 1.கவாரிஜ் 2. ஷியா !? அப்படியானால் பசர் அல் அசாத் யார் ?என்று இவர்களிடம் கேட்டு விடாதீர்கள் ! இப்போது அவர் இவர்களது நண்பன் ! அப்படியானால் இவர்கள் யார் !?
0 comments:
Post a Comment