கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ஹிஜ்ரி 1435-ம் முஸ்லிம் உம்மாவும் !

       
 
 
 
 
ஹிஜ்ரி 1435 இலும் காலடி எடுத்து வைத்துள்ளோம் ! அரசியல் அநாதைகளாக, குப்பார்களால் அவன் விரும்பியவாறு அத்துமீறப்பட முடியுமானவர்களாகவே இம்முறையும் ஹிஜ்ரி ஆண்டுக்குள் நுழைந்துள்ளோம். ஆனால் ஹிஜ்ரா எனும் வரலாற்று வடிவம் இதற்கு எல்லாம் மாற்றமானது. அது இஸ்லாமிய இலட்சிய வாதத்தின் அரசியல் இராஜதந்திர வெற்றியின் அடிப்படை ஆகும் .    இஸ்லாமிய வாழ்வியலின் நடைமுறை சாத்தியம் ஹிஜ்ராவில் இருந்து பாதுகாப்புப் பெறுகிறது , சுதந்திரமாக அமுல் படுத்தப் படுகிறது . ஆனால் நாமோ பூரண இஸ்லாத்தை வைத்துக்கொண்டு பாதுகாப்பற்றவர்களாக ,அதை அமுல் படுத்த சுதந்திரம் அற்றவர்களாக இருக்கிறோம் .
 
விமர்சனங்களை ஒதுக்கிவிட்டு பார்த்தால் கடந்த ஹிஜ்ரி வருடம் பங்களாதேசில் 2500 இற்கும் மேற்பட்ட உலமாக்கள் அவர்கள் இஸ்லாத்தை பேசினார்கள் என்ற ஒரே காரணத்துக்காக கொல்லப்பட்டார்கள் ! இஸ்லாத்தை நேசித்த ஒரே காரணத்துக்காக எகிப்தில் ஒரே இரவில் 7000 இற்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் !ஈராக்கில் ,செச்சினியாவில் , சிரியாவில் ,பர்மாவில், இந்தியாவில், ஆப்கானில், மாலியில் ... என ஒரு நீண்ட சோக வரலாறு ஹஜ்ரி 1342 ரஜப் 28 அன்று இந்த உம்மத்தின் ஒரே தலைமையான கிலாபா அரசு வீழ்த்தப் பட்டதன் பின் தொடர்கிறது .
 
ஆனால் அல்ஹம்துலில்லாஹ் சிரியாவின் சுப செய்தி இந்த ஹிஜ்ரி 1435 இற்கு மீண்டும் அதே வரலாற்று உயிரோட்டத்தை தரும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது .அதிர்ந்து போயுள்ள குப்ரிய ஏகாதிபத்தியங்களும் ,அதன் வெட்கங் கெட்ட முஸ்லீம் பெயர்தாங்கி கைக்கூலிகளும் இப்போது தமது வாழ்வா சாவா என்ற போராட்டத்தை தொடக்கியுள்ளனர் . சிரியாவில் நாம் அதை எமது கருத்து வேறுபாடுகளை தாண்டிய உளப்பூர்வமான சகோதரத்துவத்தின் மூலம் நிரூபித்து, இஸ்லாத்தின் பேருண்மையை வெளிப்படுத்தியதன் மூலமே அது சாத்தியமானது .
 
இழப்புகள் எமக்கு புதிதான ஒன்றல்ல . ஆனால் எதற்காக இழக்கிறோம் ?யாருக்காக இழக்கிறோம்? என்பதை முஸ்லீம் உம்மத் தெளிவாகவே புரிந்து கொள்ள வேண்டும் .சத்தியத்தின் கொடி வீழ்ந்து விடாமல் இருக்க துண்டிக்கப்பட்ட கையை கழட்டி வீசிவிட்டு களம்புகுந்த வரலாற்றைக் கொண்டவர்கள் நாங்கள் !
 
அல்லாஹ்வின் தூதரின் (ஸல் ) பாதத்தில் ஒரு சிறு முள் தைப்பதை விட தூக்குமரம் ஏறுவதில் சுவைகண்ட எம் முன்னோர்களின் தூய இலட்சிய சிந்தனை எமக்கில்லையா ? கலீபா ஆனாலும் தவறான முடிவெடுக்கும் போது மிம்பரில் இருந்த போதும் தட்டிக்கேட்ட தாய் வழி வந்தவர்கள் நாங்கள் ! இப்படி மறக்கப்பட்ட வரலாற்றில் புதைந்துள்ள உண்மைகளை உணர்ந்து நுபுவத்தின் வழியில் இஸ்லாத்தை இகாமத் செய்யும் இலட்சிய நகர்விட்காய் இந்த ஹிஜ்ரி 1435 இல் தயாராவோமா ?
 
 
 
கைபர்தளம்.

0 comments:

Post a Comment