கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

உலக நாடுகளில் இஸ்லாம்மை தடைசெய்த முதல் நாடாக மாறியுள்ளது !!!! (செய்தியின் உண்மைத்தன்மை)



வாஷிங்டனில் அங்கோலா நாட்டு தூதுவர் இந்த செய்தியை மறுத்துள்ளார். அவர்களும் இணையதளம் செய்திகள் மூலமாகதான் இதை கேள்விப்படுவதாக கூறியுள்ளனர். 

 சரியான அரசு ஆவணங்கள் இல்லாததால் பள்ளி ஒன்று இடிக்கப்பட்டதாகவும் அதை தொடர்ந்து இந்த செய்திகள் பரவியதாகவும் சொல்லப்படுகிறது.

இணையத்தை தேடும் போது, இதுவும் வதந்தி அடிப்படையில் வந்த செய்தியாகவே தோன்றுகின்றது. குறித்த நாட்டில் பெரும்பான்மை கிறிஸ்தவர்களுக்கும் 1% இற்கும் குறைவான முஸ்லிம் சமூகத்துக்கும் இடையில் முறுகல் நிலை உள்ளது என்பது உண்மையே. ஆனால் இப்படி ஒரு முடிவை தமது அரசாங்கம் எடுக்காது என்றும், தமக்கு அப்படி ஒன்றை அறிவிக்கவில்லை என்றும் அமெரிக்காவில் உள்ள அங்கோலா நாட்டு உயர்ஸ்தானிகர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

அநேக சமூக வலைதளங்களில் இந்த செய்தியுடன் பரப்பப்பட்ட பள்ளி ஒன்று இடிந்து விழுவது 2008 ஆம் ஆண்டில் இஸ்ரேல் நாட்டில் எடுக்கப்பட்டது என்று International Business Times கருத்து தெரிவித்துள்ளது.  ஒரு செய்தி "அங்கு சொல்கிறார்கள், இங்கு சொல்கிறார்கள்" என்று துவங்கினால், அது ஒரு வதந்திகான முழு தகைமைகளையும் கொண்டது எனலாம்.
 பொறுப்புள்ள முஸ்லிம் சமூகம் என்கிற வகையில் சில "பரபரப்பான" செய்திகளை ஆர்வத்துடன் பதிவிடுவதற்கு முன்பு, குறித்த செய்தி "பரபரப்பாக" பேசப்படுவதற்கான காரணம் என்ன என்பவற்றை ஆராய்ந்து பதிவிட்டால் "வதந்தி" பரப்பிய பாவத்திலிருந்து நாமும் விடுபடலாம்.
 IBL இன் முழு செய்தி இதோ:

http://www.ibtimes.com/angola-denies-it-banned-islam-destroyed-mosques-1484898

2 comments:

Unknown said...

உங்கள் செய்தியிலும் தவரு இருக்கின்றது....

நீங்கள் அங்கோலா முஸ்லிம்களிடம் விசாரித்து பார்த்தீங்களா..

.. International Business Times உண்மையான் முஸ்லீம்களின்
இனையத்தளமா...


இதோடு சம்பந்தப்பட்ட சில புகைப்படங்கள் 2 நற்களுக்கு முன்பே
இனையத்த்ளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது...அது பழைய செய்தி
என்றால் அந்த செய்தியை நீங்கள் பார்த்தீர்களா...

அங்கோலாவில் தற்போது 2.5 % முஸ்லிம்கள் இருக்குன்றனர்
அங்கோலா முஸ்லிம் மார்க்க அமைப்புக்களிடம்
விசாரித்துப்பாருங்கள்

மகிந்தவும் இஸ்ரேல் போல பொதுபலசேனாவை இயக்கி
இலங்கையின் 24 பள்ளிகளை உடைத்த பின் இன்னும் மறுப்பு
தெரிவித்துக்கொண்டே இருக்கின்றான்...இது போன்ற பல உதாரணம் உ
கூரலாம்

பொதுபலசேனாவை போன்றோர் அங்கோலாவில் இல்லாமலா
போய்விடும்.....

VANJOOR said...

தங்கள் நாட்டில் இஸ்லாத்திற்கு தடை விதிக்கப்பட்டதாக வந்த செய்திகளில் உண்மை இல்லை என்று அமெரிக்காவில் உள்ள அங்கோலா தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாஷிங்டனில் உள்ள அங்கோலா தூதரக செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,

மத விவகாரங்களில் தலையிடாத நாடு அங்கோலா.
எங்கள் நாட்டில் ஏராளமான மதங்கள் பின்பற்றப்படுகின்றன.
மக்கள் தங்களுக்கு பிடித்த மதத்தை பின்பற்றும் சுதந்திரம் உள்ளது.

எங்கள் நாட்டில் கத்தோலிக்கர்கள், ப்ராடஸ்டன்ட்கள், பாப்டிஸ்ட்கள், இஸ்லாமியர்கள் உள்ளனர்.

எங்கள் நாட்டில் இஸ்லாத்துக்கு தடை விதிக்கப்படவில்லை, மசூதிகள் இடிக்கப்படவில்லை என்றார்.


READ: http://tribune.com.pk/story/637133/just-media-rumours-angola-denies-it-banned-islam


READ: http://www.news.com.au/world/angola-government-denies-it-tried-to-ban-islam/story-fndir2ev-1226768582895

Post a Comment