கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

மால்வேர்(Malware ) என்றால் என்ன?



தொழில் நுட்ப ரீதியில் பார்த்தால், வைரஸ் என்பது மால்வேர் ஒன்றின் துணை இயக்கம் தான். இருப்பினும், இரண்டு சொற்களும் ஒரே பொருளையே குறிக்கின்றன.

மால்வேர் புரோகிராம் என்பது (Malware (malicious software)) உங்கள் கம்ப்யூட்டர் அல்லது மொபைல் சாதனம் ஒன்றின் இயக்கத்தினைக் கெடுக்கும் வகையில் எழுதப்பட்ட டிஜிட்டல் குறியீடுகள் அடங்கிய புரோகிராம் ஆகும். நாம் விருப்பப்படாத அல்லது மேற்கொள்ள விரும்பாத செயல்பாடுகளை இவை நம் சாதனங்களில் மேற்கொள்ளும். எடுத்துக் காட்டாக, மொத்தமாக உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து மெயில்களை அனுப்புவது, வங்கிக் கணக்கு குறித்த தகவல்களைத் திருடுவது போன்ற செயல்கள் இதில் அடங்கும். ட்ரோஜன், வோர்ம் மற்றும் ரூட்கிட் (Trojans, worms, and rootkits) ஆகியவை மால்வேர் புரோகிராம்களாகும். தொழில் நுட்ப ரீதியில் வைரஸ் என்பதுவும் இதுவே தான். உயிரியல் அறிவியலில், ஒரு வைரஸ் எப்படி நம் உடம்பின் செல்களைத் தாக்கி, அவற்றின் செயல்பாடுகளில் பாதகம் ஏற்படுத்துகிறதோ, அதே போல, இந்த வைரஸ்களும் நம் கம்ப்யூட்டரின் செயல்பாடுகளுக்குத் தீங்கு விளைவித்து மாற்றுகின்றன.

முன்பு செயல்பட்ட வகையில் எழுதப்படும் வைரஸ் புரோகிராம்கள் இப்போது அவ்வளவாகக் காணப்படுவதில்லை. இதனை உருவாக்கும் தீய எண்ணம் கொண்டவர்கள், தற்போது மால்வேர் புரோகிராம்களையே உருவாக்கி நம் கம்ப்யூட்டர் செயல்பாடுகளில் விளையாடுகின்றனர்.

வைரஸ்கள் முன்பு போலக் காணப்படுவதில்லை என்றால், ஏன் மக்கள் அது பற்றி இன்னும் பேசி வருகின்றனர்; அச்சப்படுகின்றனர் என நீங்கள் எண்ணலாம். ஏன் இன்னும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை நம்பி இருக்கிறோம் என்ற கேள்வியும் இங்கு எழலாம்.

1980 மற்றும் 1990 ஆம் ஆண்டு காலங்களில், கம்ப்யூட்டர்கள் மக்களிடையே மெல்ல மெல்லப் பரவி, வாழ்க்கையோடு இணையத் தொடங்கின. அப்போது வைரஸ் புரோகிராம்கள், பெரிய அளவிலான மால்வேர் புரோகிராம்களாக உருவாக்கப்பட்டு செயல்படுத்தப் பட்டன. அப்போது, மால்வேர் என்ற அனைத்தையும் உள்ளடக்கிக் கூறும் சொல் பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது. அதனால் தான், மால்வேர் புரோகிராம்கள் வரத் தொடங்கிய காலத்தில், மக்கள் அவற்றையும் வைரஸ் என அழைக்கத் தொடங்கினார்கள். அப்படியே அந்த சொல் நிலைத்துவிட்டது.

இதனால் தான், நாம் கம்ப்யூட்டரில் செயல்படுகையில், பின்னணியில் இயங்கி, நம் சாதனத்தையும், செயல்பாட்டினையும் அனைத்து வகை மால்வேர் புரோகிராம்களிலிருந்து காப்பாற்றுபவற்றை ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் என அழைக்கிறோம்.

0 comments:

Post a Comment