கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

மெய்சிலிர்க்க வைக்கும் இந்நிகழ்வைப் பார்ப்பதற்கு 3 நிமிடங்களை ஒதுக்குங்கள்



பிறவியிலிருந்தே ஊனமுற்றிருக்கும் இவரது வயது 77 ஆகும். தனது வாழ்நாளில் இதுவரை தவழ்ந்த நிலையிலேயே மஸ்ஜிதுக்கு போய் கூட்டாக தொழுகையை நிறைவேற்றி வருகின்றார்.

இதுதான் இவர் ஒரு நாளைக்கு 10 முறை மஸ்ஜிதுக்கு சென்று வரும் பாதை.

77 வருடங்களாக மஸ்ஜிதுக்கு போய் கூட்டுத் தொழுகையில் கலந்து திரும்புவதில் எந்த ஒரு சிரமமும் இல்லை என்கின்றார். மாறாக கூட்டுத் தொழுகையில் கலந்துகொள்வது தனக்கு மிகப்பெரிய இன்பம் என்று கூறுகின்றார். இது இவர் வாழ்நாள் முழுவதும் மஸ்ஜிதுக் சென்று வரும் பாதை. அதிகமான நேரங்களில் அவரது தேவைகளை அவராகவே நிறைவேற்றிக்கொள்கின்றார். இது தொழுகையில் இன்பம் கொண்ட இவரது வாழ்க்கை!.

அன்புக்குரியவர்களே! இதை பார்வையிட 3நிமிடங்கள் மாத்திரம் ஒதுக்கிவிட்டு, உங்களை ஒரு கணம் சுய விசாரனைக்கு உற்படுத்துங்கள்: எந்தக்குறையுமற்ற அழகிய ஓர் உடலை எனக்குத் தந்த அல்லாஹ், அவனைத் தொழுவதற்காக ஒரு நாளில் மிக சொற்ப நேரத்தையே என்னிடத்தில் கேட்கின்றான். அதை நான் மனப்பூர்வமாக ஒதுக்கி ஐவேளைத் தொழுகைகளை உரிய முறையில் நிறைவேற்றுகின்றேனா? எனது வாழ்நாளில் தொழுகையில் எத்தனை எத்தனை அலட்சியங்கள்?.

அல்லாஹ் தனது திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்:

الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُمْ بِذِكْرِ اللَّهِ أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ

"(நேர்வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள், மேலும், அல்லாஹ் நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன, அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்துகொள்க!" (13: 28).

"தொழுகை பிரகாசமாகும்" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ மாலிகுல் அஷ்அரிய் (ரலி) அவர்கள், முஸ்லிம்).

தமிழ் வடிவம்: அஸ்ஹர் ஸீலானி
Jaffna Muslim 

0 comments:

Post a Comment