கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

KMYF இளைஞர்களினால் வதுபிடுவல சக்கர மேசைகள் வைத்தியசாலைக்கு அன்பளிப்பு -வரவேற்க்கப்படவேண்டிய முன்மாதிரி

 நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
அல்குர்ஆன் 5 : 8
 
எமதூரின் சில இளைஞர்கள் ஒன்றினைந்து உருவாக்கிய Kahatowita Youth Front என்ற அமைப்பினர் முஹர்ரம் மாதப் புதுவருடப் பிறப்பை முன்னிட்டு வத்துப்பிடிவல வைத்தியசாலைக்கு நோயாளிகளின் பயன்பாட்டிற்காக 20 சக்கர மேசைகள் வழங்கவுள்ளனா். இந்நிகழ்வு நேற்று 13.11. 2013 அன்று வதுபிடுவல ஆதார வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றுள்ளது. இவா்களின் இந்த முன்மாதிரிமிக்க செயற்பாட்டை நாம் பாராட்டும் அதேவேளை, இவர்களுடைய இம்முயற்ச்சி மாற்றுமத சமூகங்கத்துடனான நல்லுறவை வளர்த்தெடுக்க முன்னுதாரனமாக ஓர் அடியை எடுத்து வைத்திருக்கிறது என்றும் கூறலாம்.

அறிவு, விளையாட்டு, ஆன்மீகம் , ஒழுக்கப் பண்பாடுகள் , வைத்தியம், சுகாதாரம் சமூக நடத்தை போன்ற அனைத்துத் துறைகளிலும் வழிநடாத்தக்கூடிய பல இயக்கங்கள்  எமது ஊரில் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவர்களும் இதுபோன்ற செயற்பாடுகளிக்கு முன்னுரிமையளிப்பதன் மூலம் இஸ்லாம், முஸ்லிம்கள் பற்றிய நலலெண்ணங்களை அவர்களை சென்றடைய வாய்ப்பாக அமைத்துக்கொள்ளலாம்.
அடுத்து பள்ளிவாயில்கள் நிலைமை ஊரில் செல்வந்தர்களாக இருப்பவர்கள், நிர்வாகத்திற்கு வருகிறார்கள். பள்ளியை விஸ்தரிப்பது, அழகுபடுத்துவது, பெயின்ட் அடிப்பது மற்றும் ஒரு சில ஆன்மீகம் கடமைகளொடு அவர்களுடைய பணிகள் முடிந்துவிடுகின்றன. இன்றிருப்பது போன்று வெறும் மார்க்க நிறுவனமாக இல்லாமல், மிக விரிவான சமூகப் பணிகளை பள்ளிவாயில்கள் வரலாற்றில் ஆற்றியிருக்கின்றன. இஸ்லாமிய சமூக அமைப்பின் மத்திய நிலையம் பள்ளிவாசல் ஆகும். சமூக, சட்டத்துறை, அரசியல், பரிபாலனம், சமூகசேவை உள்ளிட்ட பல்வேறு பணிகளை பள்ளிவாயில்கள் இருந்துதான் ஆற்றி வந்திருக்கின்றது என்பது மாநபி அவர்களுடைய அழகான வழிகாட்டல்.

இறுதியாக Kahatowita Muslim Youth Front உங்களது முயற்சிகளை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக. முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டு வருகின்ற பல்வேறு பிரச்னைகளை முறையாகத் தீர்ப்பதானால், இது போன்ற அவசியமான இஸ்லாமிய வரையரைகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் முஸ்லிம்களாகிய நம் கவனம் செலுத்தவேண்டும்.

 

2 comments:

Anonymous said...

இதில் பிரதி தேர்தல் ஆணையாளர் முஹம்மட் மற்றும் சகோதரர் ஷில்மி ஆகியோரும் கலந்து சிறப்பித்துள்ளனர். போடோக்களையும் இணைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். பள்ளிவாசல்கள் //இஸ்லாமிய சமூக அமைப்பின் மத்திய நிலையம் பள்ளிவாசல் ஆகும்.// முஸ்லீம் சமூகத்திலிருந்து மறக்கடிக்கப்பட்ட விடயம். ஜதாகுமுல்லாஹ்
Abdullah

Anonymous said...

எதை எடுத்தாலும் விமர்சிக்கமுற்படும் நீங்கள் இதைவிமர்சிக்காமல் விட்டுவிட்டதே முக்கியமான விடயம்தான்.

Post a Comment