KMYF இளைஞர்களினால் வதுபிடுவல சக்கர மேசைகள் வைத்தியசாலைக்கு அன்பளிப்பு -வரவேற்க்கப்படவேண்டிய முன்மாதிரி
அல்குர்ஆன் 5 : 8
அறிவு, விளையாட்டு, ஆன்மீகம் , ஒழுக்கப் பண்பாடுகள் , வைத்தியம், சுகாதாரம் சமூக நடத்தை போன்ற அனைத்துத் துறைகளிலும் வழிநடாத்தக்கூடிய பல இயக்கங்கள் எமது ஊரில் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவர்களும்
இதுபோன்ற செயற்பாடுகளிக்கு முன்னுரிமையளிப்பதன் மூலம் இஸ்லாம், முஸ்லிம்கள் பற்றிய
நலலெண்ணங்களை அவர்களை சென்றடைய வாய்ப்பாக அமைத்துக்கொள்ளலாம்.
அடுத்து பள்ளிவாயில்கள் நிலைமை
ஊரில் செல்வந்தர்களாக இருப்பவர்கள், நிர்வாகத்திற்கு வருகிறார்கள். பள்ளியை விஸ்தரிப்பது, அழகுபடுத்துவது, பெயின்ட் அடிப்பது மற்றும் ஒரு
சில ஆன்மீகம் கடமைகளொடு அவர்களுடைய பணிகள் முடிந்துவிடுகின்றன. இன்றிருப்பது
போன்று வெறும் மார்க்க நிறுவனமாக இல்லாமல், மிக விரிவான சமூகப்
பணிகளை பள்ளிவாயில்கள் வரலாற்றில் ஆற்றியிருக்கின்றன. இஸ்லாமிய சமூக அமைப்பின் மத்திய
நிலையம் பள்ளிவாசல் ஆகும். சமூக, சட்டத்துறை, அரசியல், பரிபாலனம், சமூகசேவை உள்ளிட்ட பல்வேறு பணிகளை பள்ளிவாயில்கள் இருந்துதான் ஆற்றி
வந்திருக்கின்றது என்பது மாநபி அவர்களுடைய அழகான வழிகாட்டல்.இறுதியாக Kahatowita Muslim Youth Front உங்களது முயற்சிகளை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக. முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டு வருகின்ற பல்வேறு பிரச்னைகளை முறையாகத் தீர்ப்பதானால், இது போன்ற அவசியமான இஸ்லாமிய வரையரைகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் முஸ்லிம்களாகிய நம் கவனம் செலுத்தவேண்டும்.
2 comments:
இதில் பிரதி தேர்தல் ஆணையாளர் முஹம்மட் மற்றும் சகோதரர் ஷில்மி ஆகியோரும் கலந்து சிறப்பித்துள்ளனர். போடோக்களையும் இணைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். பள்ளிவாசல்கள் //இஸ்லாமிய சமூக அமைப்பின் மத்திய நிலையம் பள்ளிவாசல் ஆகும்.// முஸ்லீம் சமூகத்திலிருந்து மறக்கடிக்கப்பட்ட விடயம். ஜதாகுமுல்லாஹ்
Abdullah
எதை எடுத்தாலும் விமர்சிக்கமுற்படும் நீங்கள் இதைவிமர்சிக்காமல் விட்டுவிட்டதே முக்கியமான விடயம்தான்.
Post a Comment