பிலிப்பைன்ஸ் சூறாவளியில் 10,000 பேர் பலி!! (வீடியோ)
பிலிப்பைன்ஸ் தாக்கிய தைப்பூன் ஹையான் என்னும் பெரும் சூறாவளியில் பத்தாயிரம் பேர் வரையில் உயிரிழந்திருக்கலாம் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். லெய்தே என்னும் தீவின் தக்லோபான் என்னும் நகர் இந்த சூறாவளியில் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இப்பிரதேசத்தில் மட்டும் ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் இதில் இறந்திருக்கலாம் என்று செஞ்சிலுவைச் சங்கம் மதிப்பிட்டுள்ளது.
சமர் மாகாணத்திலும் 200 பேர் வரை இறந்ததாகக் கூறப்படுகின்றது.
இதற்கிடையே அரசாங்க அமைச்சர் ஒருவர் பாதிக்கப்பட்ட பகுதிகளை விமானத்தின் மூலம் சென்று பார்த்திருக்கிறார்.
இராணுவமும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளுக்காக செல்ல முயற்சித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், வீதிகள் உடைந்தும் நீரில் மூழ்கியும் இருப்பதால், பாதிக்கப்பட்ட இடங்களைச் சென்றடைவது மிகவும் சிரமமாக இருப்பதாகக் கூறப்படுகின்றது.
0 comments:
Post a Comment