கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

விரட்டியடிக்கபடவிருந்த முஸ்லிம்களை, செனரத் மன்னன் காப்பாற்றினான்

மகிந்த சிந்தனையில் என்பது சதவீதம் படுதோல்வியடைந்துள்ளதன் காரணமாக இன்று பண்டங்கள் வினியோகிக்கும் அரசியல் ஒன்று அறிமுகப் படுத்தப்பட்டு வருகிறதென கண்டி மாவட்டப் பாராளுமன்ற அங்கத்தவர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
கண்டி தங்கொல்லையில் இடம்(13.10.2014) பெற்ற ஊடக சந்திப்பொன்றிலே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

 ஜனாதிபதித் தேர்தலில் முதலாம் முறை தற்போதைய ஜனாதிபதி போட்டி இட்ட போது 'மகிந்த சிந்தனை' வெளியிடப்பட்டது. இரண்டாம் முறை போட்டியிட்டபோது 'மகிந்த சிந்தனையின் மிகுதிப் பாகம்' வெளியிடப்பட்டது. இப்போது மகிந்த சிந்தனைக்குப் பதில் பண்டமாற்று அரசியல் சாசனம் அறிமுகம் செய்யப்படுகிறது.

மக்கள் அரசிடம் கேட்டது மோட்டார் சைக்கிள்கள் அல்ல. நிறந்தர சமாதானத்தையே கேட்டனர். ஆனால் மகிந்த சிந்தனையில் கூறப்பட்டவைகளுக்கு மாற்றமான விடயங்களே இன்று நிறைவேற்றப்பட்டு வருகின்றன. மகிந்த சிந்தனையில் ஒவ்வொறு பிரதேச செயலாளர் பிரிவிலும் ஒரு தொழிற் சாலை வீதம் திறக்கப்பட்டு 500 பேர்கள் என்ற அடிப்படையில் தொழில் வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது நடந்துள்ளதா? கண்டியில் மட்டும் 20 தொழிற்சாலைகள் இழுத்து மூடப்பட்டுள்ளன. பல்லேகலையில் 3000 ஊழியர்கள் தொழில் புரிந்த ஒரு தொழிற் சாலை மூடப்பட்டுள்ளது.

மகிந்த சிந்தனையில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகக் கூறப்பட்டுள்ளது. முதல் வருடம் செலவிடும் பணத்தை போன்று அடுத்த வருடம் இருமடங்கும் அதற்கடுத்த வருடம் மும் மடங்குமாக வருடாவருடம் அதிகரிப்பதாகத் தெரிவித்த போதும் இன்று அது நடக்க வில்லை. பதிலாக கல்விக்கான செலவில் 30 முதல் 40 சதவீத செலவை பெற்றோர் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சர்வதேச ரீதியில் நேர்மையற்ற ஆட்சி செய்யும் நாடுகளில் இலங்கை மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. ஐ.நா.சபையில் மனித உரிமை மீறல் தொடர்பாக இலங்கைக்கு எதிராக மூன்று முறை பிரேரணைகள் கொண்டு வரப்பட்டன.

ஜர்மன் போன்ற நாடுகளில் மொத்த தேசிய செலவிற்கு அதிகமான வருமானம் காணப் படுகின்றது. அவ்வாறான நாடுகளில் இலவசமாக அல்லது குறைந்த விலையில் பொருட்களை வழங்க முடியும். ஆனால் இலங்கையைப் பொருத்தவரையில் கடந்த சில வருடங்களாக இலங்கை பெற்ற கடனுக்கான வட்டியையும், தவணைக்கட்டணத்தையும் செலுத்த எமது தேசிய வருமானத்தை விட அதிகரித்த பணம் தேவைப் படுகிறது. கடன் வாங்கி கடனை மீளச் செலுத்த வேண்டியுள்ளது. இந்நிலையில் எமக்கு இலவசம் என்ற ஒன்று தாக்குப் பிடிக்க முடியாதது.

சிலவருடங்களுக்கு முன் எரிவாயு சிலிண்டர் ஒன்று சுமார் 1000 ரூபாவாக இருந்தது. இந்த அரசு அதனை 2400 வாக உயர்த்தி தற்போது 250 ரூபாயைக் குறைத்துள்ளது. இதில் என்ன நியாயம் உண்டு?

பெற்றோல் ஒரு லீட்டருக்கான விலையை 85 ரூபாவால் அதிகரித்து தற்போது 5 ரூபாவால் குறைக்கப்பட்டதில் அர்த்தம் உண்டா?

கடந்த மூன்று வருடங்களுக்கான வருமான வரியை எடுத்துப்பார்த்ததால் அரசுக்குச் செலுத்திய தொகை படிப்படியாகக் குறைந்துள்ளது. அப்படியாயின் வர்த்தகத்துறையில் வருமானம் வீழ்ச்சி கண்டுள்ளது என்பது தெளிவு.

வங்கிகள் இன்று அரசிற்குத்தான் கடன் வழங்குகின்றன. முன்பு முதலீடுகளுக்காகப் பொது மக்கள் வங்கிகளில் இருந்து கடன் எடுத்தனர். இன்று அரசியல் நோக்கங்களுக்காக அரசு கடன் எடுக்கிறது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை மாற்றுவதாக ஜனாதிபதித் தேர்தல்கள் இரண்டிலும் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதே நேரம் அக்காலத்தில் புலிப் பயங்கரவாதமும் இருந்தது. இப்போது அது ஒழிக்கப்பட்டு விட்டது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட முறையை ஏன் மாற்ற முடியாதுள்ளது.

இலங்கையில் வாழும் 40 சதவீத மக்களின் ஒரு நாள் வருமானம் இரண்டு அமேரிக்க டொலரையும் விடக் குறைவு. அதாவது ஒருநாள் வருமாணம் 260 ரூபாவிலும் குறைவு. 2006ம் ஆண்டிலிலிருந் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு சம்பள அதிகரிப்பு இல்லை. இன்று ஓய்வு பெற்றவர்கள் மிகச் சிறமத்திற்கு மத்தியில் வாழ்கின்றனர்.

முன்னர் ஓய்வுதியம் பெற்றவர்கள் தமது திரட்டிய வேதனைத்தை வங்கிகளில் முதலீடு செய்து 14 சதவீத வட்டியைப் பெற்றனர். இன்று 5 அல்து 6 சதவீதமான வட்டியே வழங்கப்பட்டு வருகிறது. இதுவும் ஓய்வூதியக் காரர்களுக்கு ஏற்பட்ட ஒரு சிரமமாகும்.

1978ம் ஆண்டு கட்டுநாயக்கா பெரு வீதியை அபிவிருத்தி செய்தோம். ஆனால் கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலயம் காரணமாக 100 தொழிற் சாலைகள் திறக்கப்பட்டன. இதன் காரணமாக கட்டு நாயக்கா வீதிக்கு செலவழித்த பணம் முழுவதையும் இரண்டு வருடங்களில் பெற்றுக் கொள்ள முடிந்தது. இன்று அமைக்கப் படும் பெருவீதிகள் கடன் பெற்றே அமைக்;கப்படுகின்றன. அவற்றால் முதலீடுகள் அதிகரிக்க வில்லை.

வியட்னாமை எடுத்துக் கொண்டால் வெளிநாட்டு முதலீடுகளாக மூன்று இலட்சம் கோடி அமெரிக்க டொலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் எமது நாட்டில் அப்படியான பாரிய வெளிநாட்டு முதலீடுகள் இல்லை.

இவ்அரசு இலங்கை தமிழ் மக்களுக்கு 13 பிளஸ் தருவதாக இந்தியாவிடம் வாக்குறுதி அளித்தது. அதாவது 13ம் திருத்தத்தற்கும் மேலதிகாமாக ஏதும் தருவதாக. ஆனால் இன ஒற்றுமையைக் கூட ஏற்படுத்த முடியாதுள்ளது.

கி.பி. 1300 முதல் ஒல்லாந்தர் போர்த்துக்கேயர் என்று வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வர ஆரம்பித்து விட்டனர். இவர்களுக்கு மத்தியில் பெருமளவு அராபிய முஸ்லீம் வர்த்தகர்களும் இலங்கைக்கு வந்து போயினர். அப்படி வந்த குடியேறிய முஸ்லீம்களை விரட்டி அடிக்க முற்பட்ட சமயத்தில்  செனரத் மன்னன் முஸ்லீமகளுக்குப் பாதுகாப்பு வழங்கி அவர்களை கண்டியில் குடி அமர்த்தினான். கண்டியை ஆண்ட இறுதி மன்னர்கள் வரிசையில் தமிழர்கள் இருந்தனர். ஒன்று மட்டுமே வித்தியாசம். அவர்கள் பௌத்த மதத்தைப் பின்பற்றிய தமிழர்களாக இருந்தனர்.

அமேரிக்க ஜனாதிபதியே அங்கு உயர் பதவிக்கான அதிகாரிகளை சிபாரிசு செய்வார். அதனை செனட் சபை அங்கீகரிக்க வேண்டும். இலங்கையில் ஜனாதிபதியே அதனை நியமிக்கிறார். எவரது அங்கீகாரமும் தேவையில்லை. ஏன்னெனில் அங்கீகரிப்பவர் ஜனாதிபதியால் நியமிக்கப்படும் அமைப்பாக இருக்கிறது. இலங்கை அரசியல் அமைப்பின் 17 வது திருத்தம் மூலம் சுயாதீன ஆணைக்குழுக்களின் அதிகாரம் பறிக்கப்பட்டு விட்டது.

ஊடக வியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதில் அளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.-

மக்கள் விடுதலை முன்னணி 1970 களில்  கிளர்ச்சியில் ஈடுபட்டன. ஆனால் அந்த ஜே.வி.பி.உடன் ஸ்ரீமாவோ அம்மையார் உற்பட பல அரசியல் தலைவர்கள் பேச்சு வாhத்தை நடத்தினார்கள். அதில் தவறு இல்லை. அதேபோல் விடுதலைப் புலிகளும் கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டன. ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணி அவ்வாறு கிளர்ச்சிகளில் ஈடுபட்வில்லை. எனவே தமிழர் விடுதலை கூட்டணியுடன் பேச்சு வார்த்தைநடத்துவதில் எந்தத் தவறும் இல்லை. கட்டாயம் நடத்தத்தான் வேண்டும்.

ஊவா தேர்தல் ஐ.தே.க. ஐப் பொருத்தவரை மிக முக்கிய தேர்தலாகும். ஏனெனில் ஐ.தே.க.விட்டும் வெளியேறிய பலர் இப்போது எம்முடன் இணைந்து வருகின்றனர். அத்துடன் எமது வாக்குப் பலத்தை 40 சதவீதமாக உயர்த்தித்தந்தள்ளது. இன்னும் எமக்குத் தேவை வெறும் 10 சதவீதம் மட்டுமே, அதனை அடைவது மிகச் சுழபமாகும். மேலும் அரசு தனது முழுப் பலத்தையும் ஊவாவில் பிரயோகித்து கைக்கடிகாரம், கைத் தொலைபேசி, மின் உபகரணம், உள் ஆடை, வெளி ஆடை, வேட்டி, சாரி, வரட்சி நிவாரணம் என்று அரச பணத்தை இரைத்தே அந்த வாக்குகளைப் பெற்றுள்ளன. எனவே எதிர்காலத்தில் எமக்கு அது சவாலாக அமையாது.

நாட்டின் சட்டம் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். ஆனால் அரச ஆதரவாளர்களுக்கு ஒரு சட்டமும் எதிரணியினருக்கு வேறு சட்மும் இருக்க முடியாது. பிரித்தானியாவின் இலங்கைத் தூதுவர் தாக்கப்பட்ட சம்பவம் முழு உலகிலும் இலங்கை ஒரு பயங்கரவாத நாடு என்பதை தெளிவு படுத்தி விட்டது. இலங்கையின் சட்டம் பற்றி நோனிஸ் தெரிந்து வைத்தில்லை போலும். ஆதனால்தான் அவருக்கு நியாயம் கிடைக்கவில்லை. அவர் நியுயோர்க் பொலீசில் முறைப்பாடு செய்திருந்தால் அதற்கு தீர்வு கிடைத்திருக்கும்.

புலம் பெயர்ந்த மக்கள் (டயஸ்போரா) பற்றி பேசப்படுகிறது. தமிழ் மக்கள் மட்டுமல்ல மல்ல சிங்கள டயஸ்போராவும் உண்டு. இவர்கள் பயங்கரவாதிகள் அல்ல. இவர்கள் எமது நாட்டின் வளங்கள். அவர்களது சேவையை நம் நாடு பெறவேண்டும். இந்தியாவைப் பொருத்தவரை இந்தியப் பிரஜைகள் எவ்வளவு காலம் சென்று நாடு திரும்மினாலும் அவர்களது முதலிட்டை இந்தியா வரவேற்கிறது. எனவே எமது நாட்டிலிருந்து புலம் பெயர்ந்த சகல மக்களையும் ஒன்றிணைத்து எம்நாட்டில்; அவர்கள் முதலீடு செய்ய ஊக்கு விக்க வேண்டும். அவர்கள் வைத்தியர்களும், பொறியியலாளர்களும் துறைசார்ந்த நிபுணர்களும் பாரிய முதலீட்டாளர்களுமேயாவார்கள் என்று தெரவித்தார்.

(JM.Hafeez)

0 comments:

Post a Comment