கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

"தன்னை கற்பழிக்க முயன்றவனை கொலை செய்த பெண்ணுக்கு ஈரானில் மரண தண்டனை" அதிர்ச்சி, சந்தேகம், குழப்பம்...உண்மை சில தகவல்கள்.

ஈரான் அரசு, நேற்று... ஒரு கொலைக்குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்ட அந்நாட்டின் ஒரு பெண்ணை (வயது 26) தூக்கிலிட்டு மரண தண்டனையை நிறைவேற்றியது.
ஆனால்...
மேற்கத்திய (மற்றும் அதன் நம்மூர் ஆதரவு) மீடியாவில் எல்லாம் செய்தியின் தலைப்பு என்னவென்றால்... "தன்னை கற்பழிக்க முயன்றவனை கொலை செய்த பெண்ணுக்கு ஈரானில் மரண தண்டனை" என்றுதான்...!
எனக்கோ... அதிர்ச்சி, சந்தேகம், குழப்பம்...உண்மை ஆறியும் ஆவல்.
பின்னர் பல்வேறு அரபிய - ஈரானிய ஊடங்களை படித்த பின்னர்தான் முழுச்செய்தியை அறிந்தேன்.
அதாவது...
ஈரானிய அரசின் இரகசிய உளவாளி Morteza Abdolali Sarbandi (வயது 47) என்பவர். இவரின் வீடுதான் இவருக்கு அலுவலகம். 2007 ம் ஆண்டு, தன் அலுவலகத்துக்கு இன்டீரியர் டெகொறேஷன் செய்ய ஒரு நிறுவனத்தை நாடியுள்ளார். அங்கிருந்து Reyhaneh Jabbari என்ற ஒரு பெண்மணி (அப்போது வயது 19) அவ்வேலைக்கு வந்துள்ளார்.
அங்கே அந்த ஈரானிய இரகசிய உளவாளியை இப்பெண் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டார். பின்னர், கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்ட போது... 'தன்னிடம் அந்த ஹவுஸ் ஓனர் பாலியல் வல்லுறவு செய்ய முயன்றதால்தான் கொலை செய்தேன்' என்றார்.
கொல்லப்பட்டவரின் மூத்த மகன் சொன்னது என்ன என்றால், "அக்கத்தி தங்கள் வீட்டில் உள்ளதல்ல". விசாரணையில் அது அப்பெண்ணால் இரண்டு நாட்களுக்கு முன்னர் வாங்கப்பட்டுள்ளது என்று சாட்சிகள் மூலம் தெரியவந்தது. பின்னர், அப்பெண் கத்தி கொண்டு வந்ததை ஒப்புக்கொண்டார். காரணம், இன்டீரியர் டேகொறேஷனுக்கு வெட்ட கிழிக்க என்று கத்திக்கு தேவை உள்ளது என்றார். ஏற்கத்தக்கதுதான். ஆனால்... முதலில் அதை சொல்லாமல் மறைத்தது ஏன் என்ற கேள்வி பிறந்தது.
பின்னர் புதிய திருப்பமாக, கொலைக்கு சற்று முன்னர், அவரது மொபைல் மூலம் வேறொரு ஆணுக்கு SMS சென்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அதில் அப்பெண், "நான் அந்தாளை கொலை செய்யப்போகிறேன்" என்று மெசேஜ் அனுப்பியுள்ளார். ஆக, திட்டமிட்டு கொலை செய்யும் நோக்கத்துடனேயே அங்கே சென்றுள்ளார் என்று ஊர்ஜிதம் ஆகியது. SMS அனுப்பியது தான் தான் என்றும் அப்பெண் கோர்ட்டில் ஒப்புக்கொண்டார்.
ஆனால், அந்த சிம்முக்குரிய நபரை கண்டு பிடிக்கமுடியவில்லை. சிம்கார்ட் தவறான முகவரி என கண்டுபிடிக்கப்பட்டது. போலிஸ், எவ்வளவோ கேட்டும், அந்த நபரின் அடையாளத்தை அப்பெண் கடைசி வரை சொல்ல மறுத்து விட்டார்.
கொல்லப்பட்டவர் ஈரானிய உளவாளி என்பதால் இப்போது பெரிய அளவில் சந்தேகம் வலுக்கிறது. ஒரு கட்டத்தில், யாரோ இன்னொருவர் கொன்றார், என்று அப்பெண் பல்டியும் அடித்தார். அவரையும் யாரென்று அப்பெண் சொல்லவில்லை.
ஆறு மாதம் முன்னர் உலக நாடுகளின் விமர்சனத்துக்கு இடையே... அப்பெண்ணுக்கு "மரண தண்டனை தீர்ப்பும், மேலும், கொல்லப்பட்டவரின் குடும்பம் அப்பெண்ணை (நஷ்ட ஈடு வாங்கிக்கொண்டோ / வாங்காமலோ) மன்னித்தால், குற்றத்தில் இருந்து விடுதலை" என்றும் கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
"எங்கள் அப்பா உங்களிடம் தகாத முறையில் நடக்க வில்லை... 'நான்தான், அப்படி பொய் சொன்னேன்...' என்று மட்டுமாவது சொல்லி விடுங்கள், (இதுதான் நஷ்ட ஈடு) உங்களை நாங்கள் மன்னித்து விடுகிறோம்..." என்று கூட கொல்லப்பட்டவரின் மகன்கள் கூறினர்.
ம்ஹூம்....அப்பெண் இப்படி சொல்லக்கூட மறுத்து விட்டார். சொல்லி இருந்தால்... இந்நேரம் உயிரோடு இருந்திருப்பார். ஆனால்... என்னாகி இருக்கும்..? புதிய வழக்கு ஒன்று போடப்பட்டு... "அப்புறம் ஏன் திட்டமிட்டு கொன்றாய்... உங்களுக்குள் என்ன பகை... அந்த SMS பார்ட்டி யார்... எந்த நாட்டுக்காவது ரகசிய ஏஜென்டா... உனக்கும் அவனுக்கும் எப்படி தொடர்பு......" போன்ற பல்வேறு விடைதெரியாத கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லியாக வேண்டி இருந்திருக்கும்..!
ஏழு வருஷமாக, இவ்வழக்கில் இப்படியான விடை அவிழா மர்மங்கள் நிறைந்து இருக்கையில்தான்... நேற்று அப்பெண் தூக்கிலிடப்பட்டுள்ளார். அதை எல்லாம் ஏன் விசாரிக்கவில்லை..? எனவே, ஈரான் அரசு மீதும் கொஞ்சம் டவுட்டாக உள்ளது..!

மொஹமட் ஆசிக் (முகநூல்)

0 comments:

Post a Comment