கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

சிங்கள மொழியில் வெளிவரும் தப்ஹீமுல் குர்ஆன் - அதி உன்னத வரலாற்றுப் பணியாகும்.

அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன், இலங்கை ஜமாத்தே இஸ்லாமி அறிஞர் மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்களின் தப்ஹீமுல் குர் ஆன் தப்ஸீர் ஐ சிங்கள மொழியில் 12 பாகங்களில் மொழி பெயர்த்து இஸ்லாமிக் புக் ஹவுஸ் நிறுவனமூடாக வெளியிட்டுள்ளது. அதன் உத்தியோக பூர்வ வெளியீட்டு வைபவம் எதிர் வரும் வியாழக் கிழமை 16 பெப்ருவரி 2012 அன்று பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. பிரதம அதிதியாக பிரதமர் டி மு ஜயரத்ன கலந்து சிறப்பிக்கவுள்ளார்.


இலங்கை இஸ்லாமிய வரலாற்றில் அல்குரானுக்கான விரிவுரையோன்று முழுவதுமாக சிங்கள மொழியில் வெளிவருவது இதுவே முதற் தடவையாகும், முன்னாள் பேராதனை பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளரும் இலங்கை ஜாமாத்தே இஸ்லாமியின் முன்னாள் அமீரும், செரண்டிப் ஆய்வு நிறுவனம் ,ஆயிஷா சித்தீகா , தன்வீர் அகாடெமி ஆகியவற்றின் ஸ்தாபக தவிசாளருமான அறிஞர் மௌலவி எ எல் எம் இப்ராஹீம் அவர்களின் தலைமயிலான ஒரு குழுவினர் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் மொழிபெய்யர்ப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். 1989 ஆம் ஆண்டில் அதன் முதற்பாகம் வெளிவந்த போதும் சுமார் ஒரு தசாப்த காலம் அந்த புனித பணி இடை நின்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். மௌலவி மாஹிர், ஷரீபுத்தீன் ஆசிரியர்,சகோதரர் இஸ்மாயில் யூசுப் , (பிரபோதய) நஜிமுதீன் ஆசிரியர் உற்பட பல்வேறு அறிஞர் குழாம் இந்த உயரிய பணியில் ஈடுபட்டதாக அறியக் கிடைத்தது. அல்லாஹ் அவர்கள் அனைவரினதும் பணியை அங்கீகரித்து இனமையிலும் மறுமையிலும் சிறந்த கூலியைக் கொடுப்பானாக.

அல்லாஹ்வின் கலாமை இந்த மண்ணின் மொழியில் கொண்டுவருவது என்பது நிகரில்லாத ஒரு உயரிய பணியாகும், அந்த வகையில் இலங்கை அறிஞர் எ.எல்.எம் இப்ராஹீம் அவர்கள் அன்று 1989 ல் ஜமாத்தின் அமீராக இருந்த தொடங்கி வைத்து இன்றுவரை தனது சகாக்களுடன் முழுமூச்சுடன் உழைத்து அந்த மகத்தான பணியை கூட்டாக நிறைவு செய்துள்ளார்கள். 1937 ஆம் ஆண்டு ஹெம்மாத கமையில் பிறந்து 1948 ல் மகரகம கப்பூரிய்யாஹ் அரபுக் கல்லூரியில் நுழைந்த முஹம்மது இப்ராஹீம் இத்தகையா மகத்தான சேவைகளை அமைதியாக ஆர வாரமின்றி முன் நின்று செய்து முடிப்பார் என அன்று அவரது ஆசான் உமர் ஹசரத் அவர்கள் கூட நினைத்திருக்க மாட்டார்கள்.

ஜாமியாஹ் நலீமியாஹ் எனும் இஸ்லாமிய பல்கலைக் கழகத்தை மர்ஹூம் நளீம் ஹாஜியார் அவர்கள் ஸ்தாபிக்க எண்ணம் கொண்ட பொழுது அறிஞர் எ.எம் எ அசீஸ் அவர்களின் தலைய்மையில் அமைக்கப் பட்ட 10 பேர் கொண்ட தூதுக் குழுவில் நீதிபதி அமீன், மர்ஹூம் தாசீம் அல்-அஸ்-ஹரி , மர்ஹூம் மஸ்-ஊத் ஆலிம், கலாநிதி ஷுக்ரி, ஹிபதுல்லாஹ் ஹாஜியார் போன்றோருடன் மொலவி எ.எல் .எம் இப்ராஹீம் அவர்கள் இருந்தது மாத்திரமல்லாது நலீமிய்யாவின் முதலாவது பாடத்திட்டத்தை வரைந்தவரும் கூட என்பதனை பலரும் அறிந்திருக்க மாட்டார்கள்.

இஸ்லாஹிய்யாஹ் ஆண்கள்/பெண்கள் கல்லூரிகள், ஆயிஷா சித்தீகா பெண்கள் கலாபீடம், சிங்கள மொழி மூல இஸ்லாமிய கற்கைகள் நிறுவனம் தன்வீர், செரண்டிப் இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனம் என்பவற்றின் ஸ்தாபக தவிசாளராக /உறுப்பினராக, மாத்திரமன்றி அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, முஸ்லிம் கவுன்சில் மற்றும் இன்னோரன்ன இஸ்லாமிய நிறுவனங்கள் கலையகங்கள் என மொலவி இப்ராஹீம் அவர்களது பணி தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் www.tanzil.info தன்சில் இன்போ போன்ற இணையத்தளங்களில் இந்த சிங்கள மொழிமூல அல்-குரான் மொழி பெயர்ப்பு இடம் பெற வேண்டும்.

இலங்கை முஸ்லிம் புத்திஜீவிகள் சிவில் தலைவர்கள், இஸ்லாமிய அறிஞர்கள் வரிசையில் மொலவி இப்ராஹீம் அவர்கள் முன்னணி வகிக்கின்ற உதாரண புருஷராகும். அல்லாஹ் அவரது உயரிய தூய எண்ணங்களை அங்கீகரித்து அவருக்கு நீண்ட ஆயுளையும் தேக ஆரோக்கியத்தையும் வழங்க வேண்டும்.

தப்ஹீமுல் குர் ஆனை சிங்கள மொழிக்கு கொண்டு வந்த சகல அறிஞர்கள் ஜமாஅத் மற்றும் இஸ்லாமிக் புக் ஹவுஸ் பணியாளர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு, அல்லாஹ்வின் கலாம் இஸ்லாமிய தஹ்வாப் பணி இந்த மண்ணில் வாழும் சகல பிரஜைகளையும் சென்றடைய்யவும் மொழி பெயர்ப்பின் நோக்கம் நிறைவேறவும் நல்ல மனம் படைத்த சகலரும் முயல வேண்டும் அதற்கான தூய எண்ணங்களையும், வளங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் எமக்கு அருள் வானாக.

0 comments:

Post a Comment