கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

அல்பத்ரியாவிற்கு கணினிகள் அன்பளிப்பு

கஹட்டோவிட அல்பத்ரியா மஹாவித்தியாலயத்திற்கு 10கணினிகள் கொழும்பைச் சோ்ந்த ஒரு தனவந்தரால் அன்பளிப்புச் செய்யப்பட்டது. ஆசிரியர்கள் சிலரின் அயராத முயற்சியின் விளைவாக இக்கணினிகளி் பாடசாலைக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன. தகவல் தொழிநுட்பம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஒரு பாடமாக அங்கீகரி்க்கப்பட்டதை அடுத்து பல பாடசாலைகளில் இப்பாடம் போதிக்கப்படுகிறது. எமது பாடசாலையிலும் தற்போது தகவல் தொழிநுட்பத்தைப் போதிக்கப்  பற்றாக் குறையாக இருந்த கணினிப் பிரச்சினை  ஓரளவு தீர்ந்துள்ளது எனலாம். பாலிகாவித்தியாலயத்திற்கும் கணினிகளைப் பெற்றுக்கொள்வதற்காக குறிப்பிட்ட தனவந்தருடன் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. எது எப்படியிருப்பினும் மாணவர்கள் தமக்குக் கிடைக்கின்ற இவ்வாறான வசதிகளை உரிய முறையில் பயன்படுத்தி தமது கற்றல் நடவடிக்கைகளைச் சிறப்பாக செய்வது கட்டாயமானது.
அல்லாஹ் இந்த நலன் விருமபியின் இச்சேவையை அங்கீகரித்து அவருக்கு இம்மையிலும் மறுமையிலும் நற்பாக்கியங்களை நல்குவானாக!

1 comments:

வேளி-ஊர்வாசி said...

மாஷாஅல்லாஹ் இந்த தனவந்தருடைய சேவையை அல்லாஹ் அங்கீகரிக்கவேண்டுமென்று அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றேன். அத்தோடு உங்களது சேவையும் எம்போன்ற வெளிநாட்டுல் வசிக்கின்ற எமது ஊர்வாசிகளுக்கு மிகப்பிரயோசனமாக இருக்கின்றது விசேசமாக ஊரில் நடக்கின்ற ஜனாஸா அறிவித்தல்களை எம்முன் முதன்மையாக கொண்டுவருவது உங்களது சேவைதான் என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லையென்று நினைக்கிறேன. இன்னும் பலவிடயங்களை சுட்டிக்காட்ட நினைக்கிறேன் ஆனாலும் எழுதுவதற்கு பயமாக உள்ளது இங்கே வருகின்ற கருத்துக்களைப் பார்க்கும் போது. ”முக்கியமாக தமிழ் பிழை” சிலவேளை தமிழ் பிழைபிடிக்கவே இங்கு ஒரு கூட்டம் காத்திருக்கிறது என்பது வெளிச்சம்....

Post a Comment