கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கஹட்டோவிட அல் பத்ரியாவில் மௌலவி நவ்பர்; கபூரியின் உரை




கடந்த வாரம் கஹட்டோவிட அல் பத்ரியா மஹாவித்தியாலயத்தில் மௌலவி எஸ்.எச்.எம் நவ்பர் கபூரி அவர்களின் ஒரு விசேட உரை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வுரையில் மாணவர்கள் கல்வி கற்பதன் அவசியத்தையும் அதன் மாhக்க ரீதியான நிலைப்பாட்டையும் குறிப்பிட்டுக் காட்டியதுடன் ஆசிரியர்கள் எவ்வாறு கற்றல் செயற்பாட்டில் ஈடுபடல் வேண்டும் என்பதையும் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் விளக்கிக் கூறினார். மேலும் மாணவர்களின் கல்வியில் பெற்றர்களிற்கு இருக்க வேண்டிய பங்களிப்பு என்ன என்பதையும் சுட்டிக் காட்டினார். இஸ்லாமிய நெறிமுறைகளில் இருந்து தூரமாகிச் செல்லும் எமது இன்றைய இளைஞர்களிற்கு இவ்வாறான வழிகாட்டல்களை வழங்குவது பாடசாலையின் கடமையாகும். வெறுமனே சடவாதக் கல்வியை மற்றும் போதிக்கும் இன்றைய காலகட்டத்தில் மார்க்க ரீதியான வழிகாட்டல்களை மாணவர்களிற்கு வழங்க மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சி மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றென பலரும் கருத்துத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலைகள் மற்றுமின்றி எமதூரின் தலைமைகளும் இதுபோன்ற சிறந்த ; உரைகளை சமூக நலன் கருதி ஏற்பாடு செய்வது காலத்தின் தேவையாகும். இதைவிடுத்து அனாகரீகமான உரைகளிற்கு பள்ளி வாசல்கள் பயன்படுத்தப்படுவது வேதனைக்குறிய விடயமாகும். அண்மையில் எமதூரில் நிகத்தப்பட்ட கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களை உள்ளடக்கிய ஒரு உரை புத்தி ஜீவிகள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்தாக அறிய முடிகிறது. எனவே எமதூரின் பொறுப்பு வாய்ந்த தலைமைகள் இவ்வாறானவர்கள் எவ்வாறு மேடைகளைப் பயன்படுத்தல் வேண்டும் என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.

மேலும் அண்மையில் நிகழ்ந்த விபச்சார நிகழ்வுகள் எமது ஊரின் இளைஞர்களின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது? எனவே ஊரின் நலன் கருதி ஒரு சிறந்த திட்டமிடலுடன் செயற்பட அனைவரும் முன்வருவது காலத்தின் தேவையாகும்.

1 comments:

athiradipadai said...

அஸ்ஸலாமு அலைக்கும்
நீங்கள் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதை மனதார வரவேற்கிறோம் ஆனால் ..... போன்ற ....வைத்து மாணவர்களுக்கு கல்வி பற்றிய விழிப்புணர்வை எற்படுத்தினால் நிச்சயமாக அது மாணவர்களுக்கு பயனளிக்காது எனவே ...் ஊருக்குத் தான் உபதேசிப்பான் ...... இனி இவனைப் போன்ற அயோக்கியர்களை அழைக்காமல் இருக்குமாறு பணிவாக வேண்டுகிறேன்.

குறிப்பு பெயர்களை குறிப்பிட்டு
விமர்சிக்கும் போது சிறந்த வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தவும்.

Post a Comment