கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

மர்வானையும் தட்டிக் கேட்ட ஸஈத் அல் குதிரிகள் எமது ஊரிலும் தேவை

ஆட்சியாளர் மர்வான் ஒரு முறை பெருநாள் தினத்தன்று பெருநாள் தொழுகைக்கு முன்னதாக பெருநாள் குத்பாவை ஒத முற்பட்டார். அவ்வேளை அச்சபையில் இருந்த ஸஈத் அல் குத்ரி (ரழி) அவர்கள் மர்வானின் ஆடையைப் பிடித்திழுத்து நீ ஸுன்னாவை மாற்ற முற்படுகிறீரா என்று கேட்டு மர்வானின் இச்செய்கையைக் கண்டித்தார். மார்க்கத்தில் பித்அத் ஒன்று அரங்கேறுவதை உடனே தட்டிக் கேட்டார். பெருநாள் குத்பாவும் தொகையும் நபியவர்கள் எவ்வாறு காட்டித் தந்தார்களோ அவ்வாறே அமைதல் வேண்டும்.

மர்வான் இந்த நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்த முயன்றது போல் கடந்த ஞாயிறன்று(06.11.2011) எமது ஊரில் பெருநாள் தொழுத ஒரு குழுவினர் ரஸுலுல்லாவின் நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தி ஒரு புதிய பித்அத்தை அறிமுகப்படுத்தினர். பெருநாள் தொழுகையும் அதன்பின்னரான உரையையும் நபியவர்கள் மைதானத்திலேயே நடைமுறைப் படுத்திக் காட்டினார்கள் என்பது சிறுபிள்ளையும் அறிந்துள்ள விடயமாகும். எனினும் இக்குழுவினரோ பெருநாள் தொழுகையை ஒரு ஊரில் தொழுதுவிட்டு அடுத்த ஊரிலுள்ள அக்குழுவினரின் பள்ளி வாசலில் ஜும்ஆவை நடாத்தினர். இந்த நடைமுறைக்கு நபியவர்களின் முன்மாதிரியும் அங்கீகாரமும் உள்ளதா? நபியவர்கள் எந்த இடத்தில் பெருநாள் தொழுதார்களோ அதே இடத்திலேயே குதபா உரையையும் நிகழ்த்தினார்கள்.  நபியவர்கள் காட்டித் தராத இந்நடைமுறை மார்க்கமாகுமா?  மனதுக்கு வந்தவிதமாக மார்க்க விடயங்களை நிறைவேற்றுவதால் இன்று நபியவாகள் காட்டித்தந்நத நடைமுறைக்கும் நமது நடைமுறைக்கும் பாரிய வித்தியாசங்கள் உள்ளன.  தீனென்பது அல்லாஹ்வின் கட்டளையும் நபியவர்களின் வழிகாட்டலுமேயாகும். எனவே எமது எந்த அமலாயினும் அது நபியவர்களின் வழிகாட்டலின் பிரகாரமே அமைத்துக் கொள்ளல் வேண்டும். எமது எதிர்கால  சந்ததிகள் மார்க்கத்தை அறிந்து பின்பற்றுபவர்களாக மிளிர அல்லாஹ் அருள் புரிவானாக!

2 comments:

Anonymous said...

நன்றி இந்தவிடயத்தை ஞாபகப்படுத்தியதற்கு ஆனால் இந்த மடையர்கள் கூட்டத்திடம் நபிவர்களின் ஸூன்னாவை எதிர்பார்ப்பது மடத்தனமானது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாதிபியா தக்கியாவில் ஒரு B.A யினால் நிகழ்தப்பட்ட உரையை நீங்களும் கேட்டிருப்பீர்கள் என்ன அலகான செற்பிரயோகங்கள் மூதேவி, மாடு....

Anonymous said...

Yes, Really that B.A is a Foolish B.A.

Post a Comment