இப்படியும் சில நல்ல உள்ளங்கள்

கடந்த 24.04.2013 ஆம் திகதியன்று அதிகாலை 5.15 மணியளவில் நடந்த ஒரு சிறு விபத்து சிங்கள சகோதரர்களிலும் சில நல்ல உள்ளங்கள் உள்ளனர் என்பதைப் படம் பிடித்துக்காட்டியது.
ருக்கஹவிலப்பகுதியில்
இருந்து கஹடோவிடாவை நோக்கி வந்து கொண்டிருந்து பாடசாலை சேவை வேனை அதற்குப்பின்னால்
வந்த ஒரு லொறி தவறான பக்கத்தால் முந்த எத்தனித்த போது வேனின் வலது பக்கக்கண்ணாடியில்
மோதி கண்ணாடி உடைந்து விட்டது. லொறியை ஓட்டிக்கொண்டு வந்தவர் புத்தளப் பகுதியைச்  சேர்ந்த ஒரு முஸ்லிமே, விபத்துக்குப் பின்னர் கண்ணாடிக்கு
ஏற்பட்ட சேதத்திற்காக 1000 ரூபா ஐ முஸ்லிம் சகோதரர் அந்த மாற்றுமத சகோதரரிடம் கொடுத்தார்,
அந்த 1000 ரூபா ஐ ஏற்க மறுத்த அந்தப் பெரும்பாண்மை இன சகோதரர் தனது வேணின் உடைந்த கண்ணாடிக்க
புதிய ஒரு கண்ணாடியை மாத்திரம் வாங்கித்தந்தால் போதும் என்று பெருமனதுடன் கூறினார்.
கண்ணாடியின் விலை 650 ரூபா மாத்திரமே என்றும் தனக்கு மேலதிக பணம் தேவையில்லையென்றும்
கூறினார். மேலும், முஸ்லிம் சாரதியின் மீது தவறிருந்தும் அதற்காக சற்றும் கோபப்படாமல்
சிறந்த முறையில் கதைத்த அந்தப் பெரும்பாண்மை இன சாரதியின் முன்மாதிரி பாராட்டத்தக்கதாகும்.
பொதுபல சேனாபோன்று இயக்கங்கள் எமது ஊர் பாலம், சந்திவரை வந்திருந்தாலும், இப்படியும்
நல்ல உள்ளங்கள் அவர்களுக்கு மத்தியல் உள்ளதை நாம் ஓரளவு சந்ததோசத்துடன் ஏற்றுக்கொள்ளத்தான்
வேண்டும்.
இந்த சம்பவம் எமது
கஹடோவிடாச் சந்தியில் நடைபெற்றது.
உங்களது இனணயம்
மூலம் பகிர்ந்துகொள்விர்கள் என்று என்னுகிறேன்.
0 comments:
Post a Comment