கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

முஸ்லிம் பெண்களின் ஆடையை நாமும் பின்பற்ற வேண்டும் -வஜிர தேரர்

முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடைகள் ஒழுக்கமிக்கது முஸ்லிம் மாணவிகள் அணியும் ஆடை சிறந்தது. இதனை நாமும் பின்பற்ற வேண்டும் என சிறுவர் நிலையப் பணிப்பாளர் கலாநிதி ஹுனுபலாக வஜிர ஸ்ரீ நாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.

சகல சமய ஆய்வு வட்டம் கொழும்பு நிப்போன் ஹோட்டலில் நடத்திய செய்தியாளர் மகாநாட்டில்லே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் .
அவர் மேலும் கூறியதாவது, அண்மையில் முஸ்லிம் நாடொன்றுக்கு நான் விஜயம் செய்திருந்தேன். அங்கு முஸ்லிம் பெண்கள் அணிந்திருந்த ஆடைகள் என்னை வெகுவாகக் கவர்ந்தது. இந்த ஆடை முறையை நாமும் பின்பற்ற வேண்டும். முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடை முறை அழகானது. இந்த நல்ல விடயங்களை நாம் பின்பற்ற வேண்டும்.
 
சிங்களவர்கள் இந்த நாட்டில் ஒரு காலத்தில் 90 வீதம் வாழ்ந்தார்கள். இன்று அது 70 வீதமாகவுள்ளது. சனத்தொகை குறைய முஸ்லிம்களோ, தமிழர்களோ காரணமல்ல. பல்வேறு காரணங்களினால் எமது சமூகத்தவர்களது சனத்தொகை குறைந்துள்ளது. எமது மக்கள் மத்தியில் நிகாய பேதம், குலபேதம் போன்ற வேறுபாடுகள் இருக்கின்றன. நாம் சனத்தொகை பெருக்கத்தில் கட்டுப்பாடுகளைச் செய்கின்றோம்.
 
முஸ்லிம்கள் என்பவர் யார்? முஸ்லிம்கள் ஆண்கள் மட்டுமே இங்கு வந்தார்கள். அவர்கள் எமது பெண்களையே மணமுடித்தார்கள். அவர்களுக்கு எமக்குப் போன்றே இந்த நாட்டின் சகல உரிமைகளும் இருக்கின்றன. ஜெனிவாப் பிரச்சினையின் போது முஸ்லிம் நாடுகளே எமக்கு உதவின். அமெரிக்க எமக்கு உதவவில்லை.
 
இஸ்லாத்தில் நல்ல பண்புகள் உள்ளன. மற்றப் பெண்களைப் பார்ப்பது ஹராம், வட்டி எடுப்பது ஹராம் இவை நல்ல விடயங்கள். ஹராம், ஹலால் என்று பேசிப்பேசி இருக்காது நல்லவற்றை நாம் பின்பற்ற வேண்டும் என்றார்.

0 comments:

Post a Comment