கஹடோவிட ஸாவியா வீதி புணரமைப்பு
கஹட்டோவிட பிரதான சந்தியிலிருந்து ஸாவியா நோக்கி வரும் பாதை திருத்தற் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சகோதரர் நா ஸர் அவா்களின் வேண்டுகோளிற்கிணங்க அமைச்சா் ஸரன குணவா்தன அவா்களின் நிதி ஒதுக்கீட்டில் இப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. பல வருடங்களாக திருத்தப்படாமல் இருந்த இப்பாதை திருத்தப்படுவதுடன் அகலமாக்கும் பணிகளும் நிறைவு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. பாதையின் புதிய அமைப்பு வாகனப் போக்குவரத்துக்கு மிகவும் சிறந்ததாக இருப்பதாக ஊா்மக்கள் திருப்திப் பட்டுள்ளதுடன் இம்முயற்சியை மேற்கொண்ட அனைவருக்கும் அவா்கள் தமது நன்றியைத் தெரிவிக்கின்றனர்.
0 comments:
Post a Comment