கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

எமது ஊர்பாடசாலைகளில் 12 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி



இம்முறை வெளியான ஐந்தாம் ஆண்டுப் புலமைப் பரிசில் பரீட்சையில் கம்பஹா மாவட்டத்தில் கஹடோவிட அல்பத்ரியா ம.வி மாணவன் 187 புள்ளிகளை ஏடுத்து தமிழ் மொழி மூலத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். அதேவேளை கஹடோவிட பாலிகா மகளிர் பாடசாலையில் அதிகூடியபுள்ளியாக 185 புள்ளி  மாணவி ஒருவராலும் பெறப்பட்டுள்ளது

கடந்த காலங்களை விட இம்முறை எமது ஊரில் கூடுதலான மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள். அல்பத்ரியா ம.வி இல் 5 மாணவா்களும், பாலிகா மகளிர் பாடசாலையில் 7 மாணவிகளும் சித்தியடைந்துள்ளார்கள். கம்பஹா மாவட்ட கல்வி வலயத்தில் முதல் இடத்தை பெற்று எமது ஊர் பாடசாலைக்கு பெருமை சேர்த்த  மாணவன் மருத்துவ பரிசோதகர் சகோதரர் சில்மி அவர்களின் செலவப் புதல்வர் ஆவர்.

1 comments:

F.NIHAZA said...

மாஷா அல்லாஹ்
பெற்றோர்க்கும்...பாடசாலைக்கும்
நமது ஊருக்கும்...பெருமை தேடித்தந்தமை நழச்சயமாக
பாராட்டத்தக்க விடயம்தான்...

Post a Comment