கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

பின்னனிக்குப் பின்னால்…… கிளை 10

கஹட்டோவிட கிராமத்தின் அன்றாட சில நடப்புக்களைத் தொடர்பு படுத்தி இது எழுதப்படுகிறது. முழுக்க முழுக்க இதில் நிறைந்த கருத்தைத் தரும் குறைந்த சொற்பிரயோகங்களைப் பயன்படுத்தவே முனைந்தேன். அது எவ்வளவு தூரம் முடியுமாயிருக்கிறது என்பதைத் தீர்மானிப்பது நீங்கள்தான். ‘அவன் எழுதும் ஒரு கிராமத்துத் தரிசனம்;’ என்ற பிராதான தலைப்பின் கீழ் சிறு சிறு உப தலைப்புக்களைத் தாங்கியதாக இது அமைந்துள்ளது. இது பற்றிய உங்கள் எண்ணங்கள், கருத்துக்கள் எனது இந்த முயற்சியில் இன்னும் பல முன்னேற்றங்களைக் கொண்டு வரும் என்பது எனது கருத்தாகும்.

.................................................................................
கல்வியை ரசித்தவன் அறிஞனாகின்றான்.கவியை ரசித்தவன் கவிஞனாகின்றான். தத்துவத்தை ரசித்தவன் ஞானியாகின்றான். அறிவியலை ரசித்தவன் விஞ்ஞானியாகின்றான். ரசனைகளால் சமைந்ததே மனித வாழ்வு. புரிதல் மனிதனின் பொது மொழி ரசித்தல் மனிதனின் தனிமொழி. கருத்துக்களை ரசிப்பதனால் அவற்றுள் மறைந்திருக்கும் வலிகளைப் புரியலாம். காட்சிகளை ரசிப்பதால் கல்லாகிப்போன நெஞ்சங்களை நெகிழவைக்கலாம். காவியங்களும் ஓவியங்களும் ரசனையால் பிறந்தவைதான். சில ரசனைகளில் அர்த்தமில்லை என்பதற்காய் ரசனைக்கே அர்த்ததில்லாமற் போய்விடாது. எழுத்தை ரசிக்கும் ஒரு எழுத்தாளன் தன் கருத்தைக் கட்டுரையிலும் சொல்வான் கவிதையிலும் சொல்வான். கருத்துக்களே இங்கு கவனத்துக்குறியன. கவிதையோ கட்டுரையோவல்ல. எழுத்தில் அசிங்கத்தையும் கூறலாம். அழகையும் கூறலாம். ஓர் அறிஞன் புறக்கனிக்கப்படுவதால் அங்கே அறிவு புறக்கனிக்கப்படுகின்றது. விமர்சனங்களால் சில ரசனைகள் நசுக்கப்படுகின்றன. விமர்சிப்பதாய் கூறி சிலர் வஞ்சிக்கின்றனர். ரசனைகள் பசுமையானவை அவற்றை புண்படுத்தாதீர்ககள் பண்படுத்துங்கள். ரசனைகள் சுகந்திரமானவை அவற்றை சிறைப்படுத்தாதீர்கள் சீர்படுத்துங்கள். இதய ஆழத்தில் என்றோ புதையுண்ட பல ரசனைகளாளேயே மாறுகின்றன. உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத மனித ஜடங்களிடம் தம் இதயக்கிடக்கைகளைச் சொல்லி நொந்து போவதை விட இயற்கையை ரசித்து சில உள்ளங்கள் ஆறுதலடைகின்றன. வார்த்தைகளால் தம் உணர்வுகளைக் கூற முடியாத உள்ளங்கள் எழுத்தால் எத்திவைக்கின்றன. ரசனைகளுக்குப்பின்னால் இப்படியும் சில மறைந்து போயுள்ளன

0 comments:

Post a Comment