கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

குடும்பத்துடன் கனடாவில் அரசியல் தஞ்சம் பெற கோடீஸ்வர முஸ்லிம் வர்த்தகர் தீவிர முயற்சி!

 

இலங்கையின் கோடீஸ்வர முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் குடும்ப அங்கத்தவர்களுடன் கனடாவில் அரசியல் தஞ்சம் பெறுகின்றமைக்கு பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.

முஹமட் அஸிஸ் என்கிற இரத்தினக் கல் வியாபாரியே மனைவி மற்றும் ஐந்து பிள்ளைகளுடன் அரசியல் தஞ்சம் கோரி கனடா வந்துள்ளார்.

 இவர் கனேடிய எல்லையை வந்தடைந்தபோது 85.000 அமெரிக்க டொலர் பெறுமதியான இரத்தினக் கற்களை உடைமையில் வைத்து இருந்தார். அமெரிக்காவின் அரிஷோனா மாநிலத்தில் கடந்த வருடம் இடம்பெற்ற இரத்தினக் கல் வர்த்தக கண்காட்சியில் பங்குபற்றி விட்டு வந்திருக்கின்றார் என்று கூறி இருக்கின்றார்.

 கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் சபை இவரது அரசியல் தஞ்சக் கோரிக்கையை நிராகரித்து விட்டது. இருப்பினும் இவர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளார்.

 நீதிமன்றம் இவரது மேன்முறையீட்டை தொடர்ந்து செவிமடுக்க தீர்மானித்து உள்ளது. இலங்கையில் கோடீஸ்வர வர்த்தகர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று இவர் அடித்துக் கூறுகின்றார்.

 தமிழ் பேசும் கோடீஸ்வர வர்த்தகராக இருக்கின்றமையால் இரு தடவைகள் இலங்கையில் கப்பம் கோரிக் கடத்தப்பட்டார் என்றும் 250,000 அமெரிக்க டொலர் வரை கப்பமாக ஒரு முறை கொடுத்துள்ளார் என்றும் தெரிவித்து உள்ளார்.

 இந்நிலையில்தான் உயிரைக் காப்பாற்றிக் கொள்கின்றமைக்காக குடும்பத்துடன் சொந்த நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 அரசியல் அந்தஸ்து கிடைக்கும் என்கிற நம்பிக்கை இவருக்கு உண்டு. தற்போது தலைநகர் ரொரன்ரோவில் உள்ள கம்பனி ஒன்றில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றுகின்றார்.

0 comments:

Post a Comment