கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

இஸ்லாமிய பாரம்பரிய முறைப்படி அபுதாபி மசூதிக்குச் சென்ற எலிசபெத் மகாராணி படங்களுடன்

ஐந்து நாள் அரசு முறைப் பயணமாக வளைகுடா நாடுகளுக்குச் சென்றுள்ள எலிசபெத் மகாராணி நேற்று அபுதாபியில் உள்ள மிகப்பெரிய மசூதிக்குச் சென்றார். அங்கிருந்த இஸ்லாமிய மாணவர்களை சந்தித்து கலந்துரையாடவும் செய்தார்.

 நேற்று மகாராணியும் இளவரசர் பிலிப்பும் லண்டனிலிருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலம் அபுதாபி சென்று சேர்ந்தவுடன் உடனடியாக நாட்டின் மிகப்பெரிய மசூதியாகக் கருதப்படும் ஷேக் சயேத் மசூதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
 
இந்த மசூதியின் சிறப்பம்சம் இதில் விரிக்கப்பட்டுள்ள தரை விரிப்புக்கள் 35-டன் எடை கொண்டது என்பது தான். 1,200 ஈரான் பெண்கள் இணைந்து இரண்டு வருடங்களாக கைகளாலேயே இந்த தரை விரிப்புக்களை தயாரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
 
அங்கிருந்த மற்ற பெண்கள் அனைவரும் இஸ்லாமிய பாரம்பரிய உடையில் இருந்ததால் மகாராணிக்கும் இதற்கென அவர் உடையுடன் பொருந்தக் கூடிய வகையில் அங்கி சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
 
மசூதிக்குள் சென்றவுடன் பாரம்பரிய முறையில் ஷூக்களை கழற்றி விட்டு வெறும் கால்களுடன் தலையிலும் இஸ்லாமிய பாரம்பரிய உடைகளுடன் நேற்று முழுதும் காணப்பட்டார்.
 
நிழற்படங்களுக்கு இங்கே சொடுக்கவும். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=14559:2010-11-25-04-47-04&catid=43:2010-01-01-15-58-29&Itemid=401 

0 comments:

Post a Comment