கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

முஹியத்தீன் ஜும்ஆப் பள்ளி வாசலில் யெமன் நாட்டு அறிஞரின் குத்பா உரை

கஹட்டோவிட முஹியத்தீன் ஜும்ஆப்பள்ளியில் இன்று (17.12.2010) ஆம் திகதி வெள்ளிக்கிழமை குத்பா உரையை யெமன் நாட்டிலிருந்து வருகை தந்திருக்கும் அஷ்ஷைக் ஸாலித் அவ்வாத் அவர்கள் நிகழ்த்தினார். இவரின் உரையில் ஹிஜ்றா தரும் படிப்பினைகளை அழகாக விளங்கப்படுத்தியதுடன் பொறுமை பற்றியும் அடுத்த முஸ்லிமுடன் நடந்து கொள்ள வேண்டிய முறைகளைப்பற்றியும் தெளிவு படுத்தினார். இவரின் உரையை தொழுகை முடிந்ததும் அஷ்ஷைக் இஜ்லான் காஸிமி அவர்கள் தமிழிற்கு மொழியாக்கம் செய்தார்.

8 comments:

ஊரான் said...

குத்பா சிறந்ததுதான். உங்களது இணையத்தளத்திற்கு நன்றி......

எனினும் இந்த குதபாவை நிகழ்த்தியவர் தஃவா சப்போடராக இருந்ததாக ஒரு சிலர் பேசிக் கொள்கின்றனர். ஏனெனில் இவர் தொழுவித்து முடிந்ததும் உடனே எழுந்து அஸரை ஜம்உ செய்ததாம். அவர் தொழுது முடியும்வரை அமைதியாக இருந்து விட்டு தொழது முடிந்தபின்னர் கூட்டு துஆ ஓதச் சொன்னார்களாம். எனினும் அவர் ஓத பின்வாங்கி வேறொருவருக்கு ஓதுமாறு தனக்குப்பின்னால் இருந்த ஒருவருக்கு செய்கை செய்தாராம். பின்னால் இருந்தவர் ஒரு பாமரர். அவர் பின்னால் திரும்பிப்பார்த்து தடுமாற நிலைமையப் புரிந்து கொண்ட அவரின் உதவியாளராக இருந்த எமது நாட்டு அறிஞர் நிலைமையைச் சமாளித்ததாகவும் பலர் கூறுகிறார்கள். மேலும் இந்த நடைமுறையை அவதானித்த பலர் தாம் காலம் காலமாகப் பின்பற்றி வந்த நடை முறை பற்றி சிந்நிக்கிறார்கள் என்றும் அறியக் கிடைக்கிறது. ஊரின் எல்லாவிடயங்களையும் வம்பளக்கும் உங்களுக்கு இந்த விடயங்கள் கிடைக்கவில்லையா? அல்லது வேண்டு மெண்டே இருட்டடிப்புச் செய்கிறீர்களா?

ana said...

அதுமட்டுமா? தொழுது முடிந்ததன் பின்னர் தஃவா பாள்ளியில் இமாம் மக்களை நோக்கி திரும்பி உற்காருவதைப் போன்று இவரும் திரும்பி உற்காந்தாராம்.

அப்துல் said...

சிந்திக்கக் கூடியவர்களுக்குத்தான் இந்த குர்ஆன், நபி ஸல்லல்லாஹீ அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்கை முன்மாதிரியாக இருக்கும். இந்த மௌலவிமார், பள்ளி நிருவாகிகள் சிந்திப்பவர்களாக இருந்தால் அல்லாஹ்வுடைய தன்டனையில் இருந்து பாதுகாப்புப் பெறலாம்.

Colombo said...

I dont know about your people. but if you inform about this activities to special vistor, ulamas and chief people during the coming time, some time they would be stop their visit to those type of Sheaisum (Jahilisham) Masjid.
Allah know the best.

nolimit said...

இந்த அறிஞரைப் போன்று மற்றும் பலர் இன்னுமொரு பிதுனாவை தொடங்க வரஇருக்கின்றதாம் அடுத்தவாரமலவில.

மண்ணின் சொந்தம் said...

”சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது. அசத்தியம் அழிந்தே தீரும்” - இது அல்குர்ஆனின் வார்த்தை. யமன் நாட்டு அறிஞர் குர்ஆன் ஹதீஸை சரியாக அமுல் படுத்தியுள்ளார். அறிஞரின் இந்த செயலுக்கு பித்அத்களை சுன்னத்தாக்கும் நம் நாட்டு ஆலிம்கள் என்ன சாமாளிப்புப் பதில் வைத்திருக்கிறார்களோ தெரியாது.....

BlogEditor said...

அன்பான வசகர்களிற்கு தயவு செய்து பிற இணையத்தளங்களில் வருகின்ற கஹட்டோவிட சம்பந்தமான செய்திகளை பிரதி பண்ணி எமது இணையத்தளத்திற்கு ஆக்கங்களாகவோ கருத்துக்களாகவோ அணுப்ப வேண்டாம்.

himas said...

ஒவ்வோத்தருக்கும் ஒவ்வொருவிதமான பொழுதுபோக்குகள். ஏனென்றால் பெரியபள்ளி விடயங்களை போடுகின்றபோதேல்லாம் உங்களது தளத்தில் கொம்மேன்சு கொட்டிக்கொண்டு வருது.

Post a Comment