கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

பள்ளிவாசல் ஒலிபெருக்கியில் தேர்தல் பிரசாரம் செய்தோருக்கு அழைப்பாணை



அக்கரைப்பற்று மாநாகர சபை தேர்தலில் போட்டியிடும் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிற்கு மாத்திரம் வாக்களிக்குமாறு 'அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம்' என்ற பெயரைப் பயன்படுத்தி அக்கரைப்பற்றுப் பிரதேச பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கிகள் மூலமாக வேண்டுகோள் விடுத்த மூன்று நபர்களை நாளை செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் ஆஜராகுமாறு அக்கரைப்பற்று நீதவான் ரி. சரவணராஜா உத்தரவிட்டுள்ளார்.


குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு நாளை 15 ஆம் திகதி அறிக்கையொன்றினை சமர்ப்பிக்குமாறு அக்கரைப்பற்று பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் முதன்மை வேட்பாளரான அஷ்ஷெய்க் எஸ்.எல்.எம். ஹனீபா (மதனி) மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று அமைப்பாளர் யூ.எல். உவைஸ் ஆகியோர் மேற்படி விடயம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடொன்றை செய்திருந்தனர்.

எஸ்.எல்.எம். அலியார், ரி.எஸ். ஆதம்லெப்பை, ஏ.எல். அப்துல் ரஷிட் ஆகிய நபர்கள் அக்கரைப்பற்றுப் பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கிகள் மூலமாக 'அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம்' எனும் பெயரை பயன்படுத்தி ஒவ்வொரு தொழுகைக்கு பின்னரும் தேசிய காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு கூறுவதாகவும், பள்ளிவாசல்களில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்படுவதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழுகைக்காக செல்லும் வாக்காளர்களிடம் தேசிய காங்கிரஸுக்கு வாக்களிக்குமாறு கட்டளையிடப்படுவதாகவும், இதனால் கருத்துச் சுதந்திரம் மீறப்படுவதாகவும் அந்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி முறைப்பாட்டினை அக்கரைப்பற்றுப் பொலிஸார் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் வழக்காக பாரப்படுத்திய போதே, குற்றம் சுமத்தப்பட்ட நபர்களை நாளை திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும், குறித்த விடயம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையொன்றினை சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

1 comments:

Anonymous said...

கஹட்டோவிடாவில் ஒரு 24 மணித்தியால ஆதல் பொட் ஒண்டு உள்ளது அதைப்பற்றி சிறிது ஆராய்ந்து எழுதமுடியுமானால் எழுதுங்கள், புதிய A to Z கட்டிடத்தில் அமைந்துள்ள பலஹை தொளில்சைகின்றஇடத்துக்குள் ஒரு அறையில் பெரிய நீலப்பெண் ஒன்றின் படம் ஒட்டப்பட்டு அதற்கு எமது ஊரைசேர்ந்த சிலரும் சென்று அந்த போட்டோவைப்பர்த்த்துக்கொண்டு பகலிலும் இரவிலும் கஞ்சா , குடு , போதல் என்பவற்றோடு அதை நடாத்துகின்ற அன்னியனோடுசேர்ந்து ஒரு ஆதல் பொட் நடைபெறுகிறது.


இந்த செய்தியினை ஆதலாக எடுக்காமல் சீரியஸ் ஆக பாருங்கள்

Post a Comment