கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ஒரு பெற்றாரின் உளக்குமுறல். (எமக்கு ஈமைல் மூலம் வந்த ஒரு கருத்துரையை ஆக்கமாக பிரசுரித்துள்ளோம்)

அன்புள்ள இணையத்தள உரிமையாளர்களே,


கடந்த டிசம்பரில் சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பெற்றோர்களுள் ஒருவனாகிய எனது இந்த உளக்குமுறலை உங்களது தளங்களில் பிரசுரிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு இதனை எழுதுகின்றேன்.

எமது அல்பத்ரியா கல்வித் துறையில் முன்னனியில் திகழ வேண்டும் என்பதை அதிகம் விரும்புபவன் நான். அதன் பழைய மாணவர்களில் ஒருவனும் கூட. இதனால்தான் எனது மகனையும் இங்கு சேர்த்து O/L வரைக்கும் படிக்க வைத்து அதனூடாக சிறந்ததொரு பெறுபேற்றை எதிர்பார்த்தேன். ஆனால், அந்த எதிர்பார்ப்பே மண்ணாகிப் போனது.

பொதுவாக இம்முறை மாணவர்களும் சுமாராக உயர்வகுப்புக்குத் தகுதி பெற்றிருந்தாலும் ஒப்பீட்டு ரீதியில் பெண் பிள்ளைகளே நல்ல பெறுபேறுகளைப் பெற்றிருந்தனர். இப்பொது நியதி ஏன் மாறக்கூடாது ; ஏன் சமநிலையிலாவது இருக்கக்கூடாது ; இதற்கான மாற்று நடவடிக்கைகளை S.D.S. அல்லது பாடசாலை நிர்வாகம் ஏன் முன்வைக்கக் கூடாது?

இந்த எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காமல் மாணவர்களை திட்டித் தீர்த்ததுதான் பாடசாலை ஆசிரிய சமூகம் செய்த வருந்தத்தக்க செயலாகும். மாணவிகளை புகழின் உச்சாணிக் கொம்புக்கே ஏற்றிய ஆசிரியர்கள் அதே வகுப்பு மாணவர்களை நா கூசாமல் பாதாள உலகத்தினர் என்று அப்பட்டமாக பெயர் சூட்டி அழைத்தனர். குறித்த வகுப்புக்காக நடைபெற்ற அனைத்து பெற்றார் ஒன்றுகூடலிலும் ஆசிரியரால் குறிப்பாக அதிபரால் கூறப்பட்ட வாழ்த்துரை என்ன தெரியுமா? "இவனுக பாஸாகுவத நீங்க நனச்சும் பாக்க வானம். இந்த வகுப்பு ஒரு பாதாளக் கும்பல். இவங்க சரிவரவே மாட்டாங்க" என்பதுதான்.

இவ்வாறான வாழ்த்துரைகளோடு (பதுஆக்களோடு) எந்த மாணவன் தான் பரீட்சையில் சித்தியடைய முடியும்? இதனால் உண்மையில் மானசீகமாகக் கூட மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை இந்தப் படித்த வர்க்கத்தினர் (???) உணர்ந்து கொள்வார்களா?

எனக்கு இப்படி விசித்திரமான எண்ணம் ஒன்றும் தோன்றுகிறது. கலந்து படிப்பதில் ஆர்வம் காட்டும் பாடசாலை நிர்வாகத்தினர் மாணவிகளை மட்டும் அரவணைத்து ஆதரிக்கும் நிலையானது, மறைமுகமாக அல்பத்ரியாவிலேயே மற்றுமொரு பால்லிகாவை நடத்தி வருகிறார்களோ என்பதுதான் அந்த எண்ண அலை.

ஏன் மாணவர்கள் மட்டும் இப்படி ஓரவஞ்சனை செய்யப்படுகிறர்கள்? இப்படி ஓரங்கட்டப்படுவதாலும் திட்டித் தீர்த்து பெற்றோர் கூட்டங்களிலேயே பதுஆ செய்யப்படுவதாலும்தான் மாணவர்களின் பெறுபேறுகள் இப்படித் ஹரங்கெட்டுச் செல்கின்"றன என்பதை ஆசிரிய சமூகம் உணர்ந்து கொள்ளுமா?

இப்போது வெளியாகியுள்ள பரீட்சைப் பெறுபேற்றில் ஒரு புதிய திருப்பமும் ஏற்பட்டுள்ளதை தொட்டுக்காட்டாமல் செல்ல முடியாது. பாதாள வகுப்பு என்றும் தேரமாட்டார்கள் என்றும் முத்திரை குத்தப்பட்ட O/L ஆண் வகுப்பில் பெரும்பாலானவர்கள், ஆசிரியர்களே மூக்கில் விரலை வைத்து வியக்கும் வகையில் பெறுபேறுகளைப் பெற்றிருப்பதுதான்.

18 comments:

old boy said...

நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்த வசனத்தின் அர்த்தம் என்ன

( பால்லிகாவை நடத்தி வருகிறார்களோ என்பதுதான் அந்த எண்ண அலை.)

மற்றுமொரு baalikaavaa அல்லது பாலியல் சம்பந்தமான ஏதாவதா? தயவுசைது விளக்குங்கள் எழுத்துக்கள் கொண்டு விளங்க நான் தமிழ் வித்துவான் அல்ல.

நன்றி

BlogEditor said...

இக்கட்டுரையை எவ்விதத் தணிக்கையும் செய்யாமல் எமக்கு கிடைக்கப்பெற்றதையே பிரசுரித்துள்ளோம். பாலிகா என்ற சொல்லிற்குப் பதிலாக தட்டெழுத்தில் ஏற்பட்ட தவறுதலாகவே பல்லிகா என்று தவறுதலாக பதியப்பட்டுள்ளது. இது சிறிய டைபிங் பிழை என்பது யாவருக்கும் புரியும். இதப் போய் தூக்கிட்டு இருக்கீங்களே சகோதரா..?

நலன் விரும்பி said...

மாணவர்களின் குறும்புத்தனங்களிற்கு ஆசிரியர்கள் இப்படித்தான் சொல்கிறார்கள். இது அல் பத்ரியாவில் மட்டுமல்ல. ஏன் இதைப் பெரிது படுத்தியிருக்கிறீர்கள். மாணவர்கள் சிறந்த பெறுபேற்றைப் பெற்றுள்ளார்கள். சந்தோசப்படுங்கள். தவறுகளை மன்னித்து மறந்து விடுங்கள். இனிவரும் காலத்தை சிறந்ததாக்க முயற்சியுங்கள்.

Anonymous said...

இது உண்மையான ஒரு விடயம். நீங்கள் ஒன்றை புரிந்துகொள்ளவில்லை. ஆசிரியர்களும் மனிதர்களே, அவர்களுக்கும் பல வேலைவெட்டி இருக்கு. மாணவர்கள் என்ன கேடுகேட்டாலும் பரவாயில்லை, தமது கடமையை செய்துவிட்டு (படிச்சி கொடுத்துவிட்டு) வீடு செல்வதுதான் அவர்களுக்கு முடியுமான விடயம். மேலும், சில ஆசிரியர்களே வீடு சென்ற பின்னரும் மாணவர்களை பற்றி சிந்திப்பார்கள். இப்போது உள்ள ஆசிரியர்களுக்கு கல்வியறிவு இருந்தாலும், எப்படி முன்னுதாரணமாக நின்று படித்துக்கொடுப்பது என்று தெரியாது. பெண் பிள்ளைகளுடன் மிக நெருக்கமாக பழகுவது... மற்ற ஆண் மாணவர்களை கடுப்படைய வைக்கிறது. இதுவே, ஆசிரியர்களுக்கும் ஆண் மாணவர்களுக்கும் நீண்ட இடைவெளியை ஏற்படுத்துகிறது. சில ஆசிரியர்கள் பணத்திலே குறியாக இருப்பார்கள், சிலர் கற்றுக்கொடுப்பார்கள்... யார் ஒழுக்கத்தை சொல்லிக்கொடுப்பது??? யார் ஒழுக்கமாக வாழ்ந்து காட்டுவது??? மாணவர்கள் யாரை பின்பற்றுவது?????
ஆசிரியர்களோ படங்களை பார்த்துவிட்டு, நாடகங்களை பார்த்துவிட்டு அந்த யோஷினையிலேயே பாடம் நடத்துவார்கள், பின் ஓய்வு நேரத்தில் discussion அந்த படங்களைப்பற்றி. முதலில் அதிபரை திருத்துங்கள், பின் அவரே ஆசிரியர்களை திருத்துவார்கள், பின் ஆஷிரியர்கலே மாணவர்களை திருத்துவார்கள்.
ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும். திரு வள்ளுவர்.
ஒழுக்கமே கல்வியை வாழ வைக்கும்,
மரியாதை எதிர்பார்ப்பவன் மரியாதை செலுத்தியே அதை பெறவேண்டு.- அப்துல் கலாம். இது, சில ஆசிரியர்களுக்கு பொருந்தும்.
நன்றி.

Anonymous said...

இனிவரும் காலமா? அது எப்ப? மௌததான பொரஹா? 10 வருஷமா இப்படித்தான் செல்லியது ? இவனுகளுக்கு ஈகிலாலதான் அடிச்சொனம். நானும் இந்த ஸ்கூல்ல படிச்சவன்தான். எங்குளுக்கும் ஒரே பெற்றார் கூட்டம் வெச்சாங்க. இப்பதான் எங்களுக்கு வெளங்கிய. படிச்சிகொடுக்க தெரியாமத்தான் பெற்றார்கள கூப்பிட்டு புள்ளகள பத்தி போட்டு கொடுக்கிய. ஒரு ஆசிரியர்தான் புள்ளகளுக்கு நல்லது கேட்டத வெளங்க படுத்தோணம். உம்மா வாப்பமாருக்கு அது முடியுமென்றால் ஸ்கூலுக்கு ஏன் அனுப்போனம்? முதல்ல இந்த கூட்டம் போடுறத நிப்பாட்டிட்டு, புள்ளகள ஷரியாக்கிற வாளியப்பார்க்க சொல்லுகோ எங்கட டீச்சர் மாருக்கு.

Anonymous said...

according to me we cant blame only the teachers.if we compare results of before 15 yrs and now it shows very big difference.environment of education is changing day by day.parents should get more care of their children.i mean to say, they have to watch every single movement of their beloved child.u may not know what he does out of home.i really wonder they are so many boys & girls have got membership in facebook.15 yrs ago there is no facebook,twitter,.....etc.nowadays students have many ways to spend their valuable time.my humble request to all parents,sit wz ur beloved child for a while talk about what teaching of islam.every education has to be based on islam.

நலன் விரும்பி said...

ஆசிரியர்களைக் குறை சொலவதில் எந்தப் பிரயோசனமும் இல்லை. பிள்ளைக் ஒரு நாளில் 5 மணித்தியாலங்கள் மட்டுமே ஆசிரியர்களுடன் உள்ளார்கள். ஏனைய நேரம் பெற்றாரின் கண்கானிப்பில்தான் உள்ளார்கள். பெற்றார் தமது இயலாமையை ஆசிரியர்கள் மேல் போடுவது முட்டாள்தனம்.

Anonymous said...

pen maanavikalthaan petraarudan weettil iruppathu, athanaalthaan awarkal mattume nalla peruperukalai eduththullaarkal. aan maanawarkal padukkawum thinnawum mattumthaan weettukku powaarkal. ithu eppadiyirukku?

old boy said...

என்ன blog எடிட்டர் அவர்களே நீங்களும்தான் சும்மா வழமையா உள்ள பிரச்சினைய தூக்கிப்புடிச்சிட்டு போட்டு இருக்கிறீங்க

அந்த பொடியன் நல்லாப் படிக்காட்டி அதற்கு SDS , ஆசிரியர்களை திட்டுவதில் அர்த்தம் என்ன

வீட்டுச்சூழலும் ஒரு காரணம் தானே வீட்டுல டிவி, வானொலி ,சினிமா

நீங்கள் சொல்றதப்பாத்தா அல்பத்ரியாவைய்யும் BAALIKA SDS க்கு பொருப்புக்கொடுத்தால் சரி எல்லாப் பொடியனுகளும் நல்லா ரிசல்ட் எடுப்பனுகள் அதோட உங்கள் வெப் குழுவினது நோக்கமும் நிறைவேறும் அதோடு மாணவர்கள் படித்தமாதிறியும் இருக்கும்.

BlogEditor said...

brother old boy, இது எமது வாசகர் ஒருவரின் கருத்தேயன்றி எமது கருத்தல்ல என்பதை நாம் கட்டுரையின் ஆரம்பத்திலேயே சொல்லியுள்ளோம். இதை தாங்கள் புரிந்து கொள்ளவில்லை. ஊடகத்தைப் பொருத்தவரையில் வாசகரின் கருத்துக்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்குறோம். பாலிகா எஸ் டி எஸ்ஸுடன் எமது இணையத்தள குழுவினரை தாங்கள் சம்பந்தப்படுத்தியுள்ளீர்க்ள. எதை எதைனுடன் சம்பந்தப்படுத்த வேண்டும் என்ற அறிவே இல்லாத உங்களைப் போன்றவர்களின் கருத்துக்களால் தான் எமது சமூகம் இன்னும் பின்னிற்கிறது. எனினும் மார்க்க ரீதியாக பெண்கள் கலப்புப்பாடசாலையில் படிப்பது ஹறாமானதுதான் என்பது எல்லாத் தரப்பு இமாம்களினதும் பத்வா என்பதில் நாமும் உடன்படுகிறோம்.

CNC Job Offers said...

யோவ் மிஸ்டர் அனோனிமஸ், என்னய்யா இது? ஆண் மாணவர்களைப் போட்டுத் தாக்கியிருக்கிறீர்? உமக்கு மனசாட்சியே இல்லையா? மாணவிகளைத் ..........பண்ணுகிறார்கள். கொஞ்ச காலத்துக்கு முன் ஒரு வயோதிபத் .... இருந்தார். அவர் உயர் தர .....கொடுப்பார்; சிலபோது அதற்கு மேலேயும் செல்வார். இதற்கு அந்த அனுவபசாலியிடம் பயின்ற இன்றுள்ள சில ஆசிரியைகளே சான்று. போதாக்குறைக்கு; நீ ......மாதிரி" என்றும் கூறிக் கொள்வாராம். ............ இதற்கும் ஒருபடி மேலே சென்று இன்னும் சிலர் தம்மிடம் பயின்ற ....... கொண்டார்கள். இதனாலும்தான் மாணவிகள் முன்னேற்றம் அடைந்தனர்.

ஆனால் இப்படி மாணவர்களை எவரும் அரவணைக்காததால், அவர்களோடு நெருங்கிப் பழகாததால் ஆசிரியர்களின் இந்த ஓர வ்ஞ்சனை கண்டு அவர்கள் ஆசிரியகளொடு முரண்பட்டார்கள்; கூத்தடித்தார்கள்; குழப்பம் விளைவித்தார்கள். பெற்றோர்களும் ஆசிரியர்கள் பக்கம் நின்றதால் இன்னும் வெறுப்படைந்தார்கள். அந்த வெறுப்பின் விளைவு வகுப்பறையில் வெளிப்பட்டது. உள்வியல் தெரியாத உத்தமர்கள் அவர்களைப் பாதாளக் கோஷ்டியினர் என நாமமிட்டுப் பரிகசித்து ஏளனம் செய்தனர். இந்த மனோனிலையில் அவர்கள் எப்படி அய்யா பாஸ் பண்ணுவார்கள்?

மறுபக்கமாக நமது ......தனது .... அரையில் இருந்து கொண்டே பெரிய மாணவர்களோடு சேர்ந்து ........சம்பவங்க்களும் உண்டு. மறுத்தால் .....................

குறிப்பு

மேற்படி கருத்தில் பிரசுரிக்க முடியாத சில ஆபாச வார்த்தைகள் இருந்ததனால் நாம் தனிக்கை செய்துள்ளோம். கருத்து எழுதுவபவர்கள் ஆவேசத்தைத் தவிர்த்து அறிவு புர்வமானதாக எழுதினால் பலருக்கும் பிரயோசனமானதாக இருக்கும்

Testing said...

அல் பத்ரியாவில் ஆசிரியர்கள் அனைவரும் நல்ல முறையில் மாணவர்களை நெறிப்படுத்துகின்றனர். ஆனால் மாணவர்கள் தான் தவறான முறையில் செயற்படுகின்றனர். இதனை சமூக ரீதியல் அவதானிக்கையில் அனைத்து ( பித்னாக்களும், தவறான விடயங்கயையும்) மாணவர்கள் தாம் வாழ்கின்ற குடும்பச்சூழலில் தான் கற்கின்றனர். உண்மையில் இங்கு ஆசிரியர்களை தவறானவர்கள் என்பது சுட்டிக்காட்டுவது மிக தவறாகும். ஆசிரியர்கள் தனது இயலுமைக்கு அப்பால் சென்று நல்ல விடயங்களை கற்பித்தாலும் கூட மாணவர்களின் அலட்சியக்காரணமாக அவர்கள் தவறான பாதையில் வழிதவறி செல்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது ( இங்கு அலட்சியம் என்பது மாணவர்கள் தவறான முறையில் இஸ்லாம் கூறாதா விடயங்களை பின்பற்றுவதாகும் அதாவது சினிமா, விளையாட்டு, தடுக்கப்பட்ட பாவனைப்பொருட்கள் பாவனையாகும்.).

இதனை தடுப்பதற்காக கட்டாயம் பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் கவனற்திற் கொண்டு எதிர்கால மாணவ சமூகத்தை கட்டீயொழுப்ப முன்வாருங்கள். அவ்வாறு முடியாத பொது பாடசாலை நலன்புறிச்சங்கத்துக்கு பாடசாலையை ஒப்படையுங்கள். ( இந்த அபிவிருத்திச், நலன்புறிச் சங்கங்களின் உறுப்பினர்கள் அமானிதமானவர்கள் இவர்கள் முன்மாதிரியானவர்கள் இவர்களின் செயற்பாடுகளுக்கு அல்லாஹ் மறுமைநாளில் நிச்சயமா கூலி வழங்குவான் )

அதே ஒருவன் said...

அமானிதம் காத்ததாக நீங்கள் கூறும் அந்த மகான்கள்தான் அணங்கு (பெண்)களின் பின்னால் சுற்றித்திரிந்த வள்ளல்கள். இதை மிஸ்டர் ரிம்ஸான் உணர்வாரா????????

brother said...

அஸ்ஸலாமு அழைக்கும்

மாணவர்கள் படிக்காததற்கு, எல்லாரும் தான் காரணம், அதில் ஆசிரியர்களை திட்டுவதில் அர்த்தம் இல்லை

அவர்களும் ஒரு காரணமாக இருக்கலாம் அதோடு, குடும்ப சூழல், நண்பர்கள், முதியவர்கள், பள்ளிகள் , பழைய மாணவர்கள் , பெற்றோர்கள் என பல காரணங்கள் இருக்கலாம் இதனை விட்டுப்போட்டு ஆசிரியர்களை திட்டுவதில் ஒரு அர்த்தமும் இல்லை.

இதற்கு அனைவரும்தான் காரணம் எண்டு அந்த தகப்பனுக்கு எடுத்துக்கூறி விளக்குவது தளத்தயாரிப்பாலர்களின் கடமைய்யல்லவே அவ்வாறு இல்லாவிடில் இது சம்பந்தமாக உரிய பாடசாலை அபிவிருத்தி சங்க, ஆசிரியர்களை உரிய முறையில் அறியச்செய்வது உங்கள் கட்டாயக்கடமை.

Anonymous said...

என்ன கொப்பி பேஸ்ட் பண்ணி புளொக் செய்தவர்கள் எல்லாம் இப்போ சொந்த புளக்க விட்டுட்டு அடுத்தவர்கள் புளக்கிற்கு வந்துட்டாங்க. நல்லம்...!

Kahatofathima said...

Exam result of a student depends on many,
* student him/her self
* parents
* Teachers
* Other environmental factors.
All these groups will be questioned by Almighty Allah in Qiyamah.
In kahatowita all above factors have contributed.
My suggestion is to make separate school for boys & girls.If this happen, Insha allah we can dream a colorful Kahatowita in recent future.Join with us to make this dream true.

BlogEditors said...

what kahatofathima has said is quiet correct. Even our blog editors welcome separating school for boys and girls. Mixing boys and girls is one of the main factors which involve in spoiling education. Must consider this point.

Anonymous said...

Better to arrange a voting system to clear, weather kahatowita people like to separate boys and girls schools.
Better this blogger starts this voting program.

Post a Comment