கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கஹடோவிடா பாடசாலைகளின் அதிபா் வெற்றிடமும் நலன்விரும்பிகளின் அதிபா் தேடல் முயற்சியும்

கஹடோவிடாவின் இரு பாடசாலைகளிலும் கடமையாற்றி வந்த அதிபா்கள் அதிபா் பதவியிலிருந்து விலகியமையினால் இரு பாடசாலைகளிலும் அதிபா் பதவிகள் வெற்றிடமாகியுள்ளன.

அல் பத்ரியாவின் அதிபா் தனது சொந்த அலுவல்கள் காரணமாக அதிபா் பதவியிலிருந்து தனது பொறுப்பை கையளித்துள்ள அதே வேலை பாலிகா பாடசாலையில் கடமையாற்றி வந்த அதிபா் கொழும்புப் பிரதேசத்தில் உள்ள ஒரு பாடசாலைக்கு இடமாற்றலாகி சென்றுள்ளாா். இதனையடுத்து பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினா்கள் மற்றும் பழைய மாணவா்கள் சங்க உறுப்பினா்கள் புதிய அதிபா்களைப் பெற்றுக் கொள்ளவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளனா்.

இதன் ஒரு கட்டமாக எமது பாடசாலையில் நீண்ட காலமாக கடமையாற்றிவிட்டு 1993ம் வருடம் இடமாற்றலாகிச் சென்ற திரு. சுந்தரம் ஆசிரியா் அவா்களை மீண்டும் அதிபராக எமதூரின் பாடசாலையொன்றுக்கு பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

கடந்த இரு தசாப்தங்களுக்கு முன்னா் எமதூரின் பாடசாலையில் கடமையாற்றிவந்த திரு.சுந்தரம் ஆசிரியரின் காலத்தை பாடசாலையின் கல்வி நடவடிக்கையின் ஒரு பொற்காலம் என்றால் அது மிகையாகாது. மீண்டும் ஒருமுறை அவ்வாறான ஓரு பொற்காலம் மீள  வேண்டும் என்பது எமதூரின் புத்தி ஜீவிகளின் அவாவாகும். 

0 comments:

Post a Comment