கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

أسلام عليكم ورحمة الله وبركاته

أسلام عليكم ورحمة الله وبركاته
أهنئكم بأطيب التهاني والتبريكات بمناسبة عيد الفطر السعيد. تقبل الله منا ومنكم صالح الأعمال. وكل عام وأنتم بخير...
EID MUBARAK
THAKABBALALLAHU MINNA WA MINKUM
............................................................................................................
கஹட்டோவிட மஸ்ஜித் ஜாமிஉத் தௌஹீதினால் ஏற்பாடு செய்யப்பட்ட பெருநாள் தொழுகை காலை 7.25மணியளவில் கஹட்டோவிட அல்பத்ரியா மஹாவித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது. பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட இப்பெருநாள் தொழுகையில் பள்ளி வாயில் இமாம் அஷ்ஷெக் மஸ்ஊத் ஸலபி அவர்கள் பெருநாள் குத்பாவை நிகழ்த்தினார். பெருநாள் தொழுகையின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.








யாருக்குப் பெருநாள்?

- உண்ண வசதியிருந்தும் உண்ணவில்லை.

- பருக பலவித பானங்களிருந்தும் பருகவில்லை.

- காலையில் எழுந்து டீ / காஃபி குடித்தால் தான் அன்றைய வேலையே ஓடும் என்ற

பழக்கமிருந்தும் குடிக்கவில்லை.

- புகை பிடித்தால்தான் சிந்தனை செயலாற்றும் என்ற நிலையிருந்தும் புகை

பிடிக்கவில்லை.
இவருக்குத்தான் இனிய பெருநாள்...!
- தன் ஆணவத்தை அடக்கி

- அலட்சியப் போக்கை அழித்து

- பகலில் பட்டினி கிடந்து

- இரவில் இறை வழிபாட்டில் ஈடுபட்டு

- பசி, தாகத்தால் இச்சையை வென்று

- இறை கடமைகளை நிறைவேற்றி

- தானத்தால் ஏழைகளின் கண்களை திறந்த
உண்மை முஸ்லிமுக்குத்தான் பெருநாள்...!
- வறியவர்களின் தேவைகளை கவனித்து

- பட்டினியையும், பசியையும் அடக்கி,

- நோன்பினால் ஈமானை பலப்படுத்தி

- ஆன்மிக பலத்தை நிலை நாட்டி

- ஒரு மாத கடுஞ்சோதனையை வென்று

- இறைவனுக்காக நோன்பிருந்த

- இறைமறையை ஓதி உணர்ந்த

- இறைகடமைகளை நிறைவு செய்த
உண்மை முஃமினுக்குத்தான் உன்னத பெருநாள்...
- ஏழைவரி(ஜகாத்)யை முறையாக அளித்து

- கருமித்தனத்தை அடியோடு ஒழித்து

- சிறியவர்களை போற்றி - பாராட்டி

- பெரியவர்களை மதித்து நடந்து

- அறிஞர்களுடன் பண்புடன் நடந்து

- செய்த பாவங்களுக்காக மன்னிப்பு கேட்டு

- இனி பாவமே செய்யமாட்டேன்

- என்ற உறுதி கொண்ட
உண்மை விசுவாசிக்குத்தான் உரிய பெருநாள்!
- எனது தொழுகை அல்லாஹ்வுக்கே!

- எனது தியாகச் செயல் அல்லாஹ்வுக்கே!

- எனது பொதுப்பணி அல்லாஹ்வுக்கே!

- எனது வாழ்வு அல்லாஹ்வுக்கே!

- எனது மரணம் அல்லாஹ்வுக்கே!

- என்று சத்தியப் பிரமாணம் எடுத்த
உண்மையளர்களுக்குத்தான் உண்மைப் பெருநாள்...!
உலக இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இதயங்கனிந்த ஈகைப் பெருநாள் இனிய நல்

வாழ்த்துக்கள்!

பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா


அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A (அரபிக்)., M.A (தத்துவமும் சமயமும்).,




கஹடோவிட பாலிகாவில் சிங்கள சகோதார்களுடனான இப்தார் நிகழ்வும் கலந்துரையாடலும்

கஹட்டோவிட கல்வி வட்டத்தினால் 3வது வருடமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிங்கள சகோதார்களுடனான இப்தார் நிகழ்வு இன்று 22.08.2011 ஆம் திகதி கஹட்டோவிட பாலிகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இஸ்லாமும் நோன்பும் என்ற தலைப்பில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் விசேட அதிதியாகக் கலந்து கொண்ட வறக்காப்பொளையைச் சேர்ந்த சகோதரர் முனாஸ் அவர்கள் மாற்றுமத சகோதரர்களால் கேட்கப்பட்ட கேள்விகளிற்கு விளக்கமளித்துப் பேசினார். மாலை 5.30மணியளவில் ஆரம்பித்த இந்நிகழ்வில் 20பேர்கள் கலந்து சிறப்பித்தனர். அல்லாஹ் இவர்களது கூலிகளைப் பொருந்திக் கொள்வானாக!

ஜனாஸா அறிவித்தல்

கஹடோவிடவைச் சேர்ந்த சகோதரர் ஸைனுல் ஆப்தீன் அவர்கள் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் பரீதா அவர்களின் கணவரும் மற்றும் பருஜ், பராஸ், ஜவ்ஸான், ஜவாத் ஜஸீம் ஆகியோரின் தகப்பனும் ஆவார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (22. 08 . 2011) காலை   11.00 மணியளவில் மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாயில் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அல்லாஹ் இவர்களின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக!

இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட 17வயது தமிழ்யுவதி

இறைவன் கூறுகிறான்: ‘என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள், நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்குப் பதிலளிக்கிறேன் - அல்குர்ஆன்

நாம் அல்லாஹ்விடம் கேட்கின்ற துஆக்களில் இந்தசகோதரியின்வேண்டுகொளையும் சேர்த்துக்கொள்வோம்.


You all! please make du'a for my mother and my brother that they should embrace islaam. If you have any friends give Da'wah to them. Be firm with what you believe. Please ask du'a for me. Assalaamu alaykkum wa rahmatullahi wa barakaatuh

ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு: 75 பேர் பலி




ஈராக்கின் தலைநகர் பாக்தாத் உட்பட பல்வேறு நகரங்களில் நேற்று நடந்த தொடர் குண்டு வெடிப்பு மற்றும் தற்கொலைத் தாக்குதல்களில் 75 பேர் பலியாகினர்.


பாக்தாத்தின் தெற்கில் 150 கி.மீ தொலைவில் உள்ள குத் நகரில் நேற்று நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 34 பேர் பலியாகினர்.

இதையடுத்து நஜாப், பக்குவுபா, பாக்தாத், கர்பாலா, கிர்குக், திக்ரித், ரமாடி ஆகிய நகரங்களில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. ஒட்டு மொத்தத் தாக்குதல்களில் 75 பேர் பலியாகினர்.
இத்தாக்குதல்களில் கார் வெடிகுண்டுகள், சாலையோர குண்டுகள், தற்கொலைத் தாக்குதல்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன. தியாலா மாகாணத்தில் மட்டும் ஏழு குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.
மிக அதிகபட்சமாக குத் நகரில் பலி நிகழ்ந்துள்ளது. ஈராக்கில் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக தங்கியுள்ள அமெரிக்கப் படையினர் இந்தாண்டின் இறுதிக்குள் முழுமையாக வெளியேறுவர் என முன்பே அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்திருந்தார்.

ஆனால் ஈராக்கின் பாதுகாப்பு குறித்து சந்தேகித்த அந்நாட்டு தலைவர்கள் 2012ம் ஆண்டு வரை அங்கு ஒரு சிறுபடைப் பிரிவாவது தங்கியிருக்க வேண்டும் என சமீபத்தில் தான் முடிவெடுத்தனர்.
ஈராக்கில் தொடரும் தாக்குதல்களைக் கட்டுப்படுத்தவும், பாதுகாப்புப் பணியில் மேலும் திறன் பெறவும் இந்த அமெரிக்கப் படை ஈராக் வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கும். இதையடுத்து நிகழ்ந்துள்ள திட்டமிட்ட மிகப் பெரிய தாக்குதல்கள் இவை. இத்தாக்குதல்களுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

றிஸானாவின் விடுதலைக்காகப் பிரார்த்திப்போம்!

சவூதியில் குற்றவாளியாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள றிஸானா நபீக் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்ப்பதாக றிஸானா நபீக்கின் தாயார் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இவரது விடுதலை தொடர்பாகப் பேச அரச உயர் மட்ட தூதுக்குழு சவூதி சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

றிஸானா நபீக்கின் விடுதலைக்காக செயற்பட்டு வரும் திருகோணமலைமாவட்ட மக்கள் மன்ற பிரதிநிதி ஜிஹாஜ் றிஸானாவின் விடுதலைக்காக இப்புனித ரமழான் மாதத்தில் அனைவரும் பிராத்திக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரமலான் மாதம் தொடர்பான ஆதாரமற்ற செய்திகள்

ரமலான் மாதம் மிகச் சிறந்த மாதம் என்பதும் அம்மாதத்தில் செய்யப்படும் அமல்கள் சிறப்புக்குரியவை என்பதற்கும் திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளில் ஏராளமான சான்றுகள் உள்ளன.

அதே வேளையில் நபிகளாரின் பெயரில் இம்மாத சிறப்பு பற்றியும் இம்மாதத்தில் நோற்கப்படும் நோன்பின் சிறப்பு பற்றியும் இட்டுக்கட்டப்பட்ட பலவீனமான செய்திகளும் கணிசமாக இடம் பெற்றுள்ளது. இதை பல ஆலிம்கள் பயான்களிலும் கூறிவருகிறார்கள். எனவே இதன் உண்மை நிலையை தெளிவுபடுத்த, இட்டுக்கட்டப்பட்ட, பலவீனமான ஹதீஸ்களில் முக்கியமானவை இக்கட்டுரையில் இனம் காட்டப்படுகிறது.

ரமலான் என்று கூறாதீர்?
ரமலான் என்று கூறாதீர்கள்!ஏனெனில் அது அல்லாஹ்வுடைய திருமாங்களில் ஒன்றாகும். எனவே நீங்கள் ஸஹ்ரு ரமலான் (ரமலான் மாதம்) என்று கூறுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : பைஹகீ (7293)

இச்செய்தியின் மூன்றாவது அறிவிப்பாளர் முஹம்மத் பின் அபீ மிஃஷர் என்பவர் பலவீனமானவர் என்பதை இதை பதிவு செய்த இமாம் பைஹகீ அவர்களே இந்த ஹதீஸில் கீழே குறிப்பிட்டள்ளார்கள்.



ரமலான் மாதத்தை அடைந்தவர் பாவம் மன்னிக்கப்படுகின்றன?
ரமலான் மாதத்தின் முதல் நாள் காலையை அடைந்த எந்த முஸ்லிம்களின் பாவத்தையும் அல்லாஹ் மன்னிக்காமல் விடுவதில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக், நூல்கள் : தாரிக் பக்தாத் பாகம் : 5, பக்கம் : 90, அல்இலலுல் முதநாஹிய்யா

இச்செய்தியில் இடம் பெற்றிருக்கும் இரண்டாவது அறிவிப்பாளர் ஸியாத் பின் மைமூன் என்பவரும் மூன்றாவது அறிவிப்பாளர் ஸல்லாம் அத்தவீல் என்வரும் பெரும் பொய்யர், இவர்களை இமாம் புகாரீ, நஸயீ, மற்றும் தாரகுத்னீ ஆகியோர் கடுமையாக விமர்சனம் செய்ததை இதை பதிவு செய்தவர்களில் ஒருவரான இமாம் இப்னுல் ஜவ்ஸீ தனது அல்இலலுல் முதநாஹிய்யா என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள்.



ரமலான் சீராகிவிட்டால்...
''ரமலான் (மாதம் நற்காரியங்கள் செய்வதன் மூலம்) சீராகிவிட்டால் அந்தவருடம் (முழுவதும்) சீராகிவிடும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : ஷ‎ýஅபுல் ஈமான் (பைஹகீ) பாகம் : 3, பக்கம் 340)

இச்செய்தியில் இடம் பெறும் ஆறாவது அறிவிப்பாளர் அபூமுதீஃ என்ற அல்ஹகம் பின் அப்துல்லாஹ் அல்பல்கீ என்பவர் இடம் பெற்றுள்ளார் இவர் பலவீனமானவர். எனினும் அப்துல் அஸீஸ் பின் அபான் அல்பல்கீ என்பவர் இடம் பெற்றிருப்பதே சரியானதாகும் என்று கூறும் இமாம் பைஹகீ அவர்கள் இவரும் பலவீனமானவர் என்று அதே நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

ரமலானின் முதல் பகுதி அருளாகவும் நடுப்பகுதி மன்னிப்பு வழங்கப்படக்கூடியதாகவும் இறுதிப்பகுதி நரகத்திலிருந்து விடுதலை கிடைக்கப்பெறக்கூடியதாகவும் இருக்கிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : இப்னு குஸைமா (பாகம் : 3 பக்கம் : 191),ஷுஅபுல் ஈமான் (பைஹகீ), பாகம் : 3,306)

இந்த ஹதிஸின் அறிவிப்பாளர் தொடரில் அலி பின் ஸைத் பின் ஜ‎ýத்ஆன் என்பவர் இடம் பெருகிறார் இவரை அஹமத் பின் ஹன்பல் போன்றோர் விமர்சித்துள்ளனர். (நூல் மீஸானுல் இஃதிதால் பாகம் 5 பக் 156) மேலும் இதன் அறிவிப்பாளர் தொடரிலே யூஸ‏þப் பின் ஸியாத் என்பவர் இடம் பெற்றுள்ளார் இவரைப்பற்றி புகாரீ அவர்கள், ''ஹதீஸ் துறையில் நிராகரிக்கப்பட்டவர்'' என்றும் தாரகுத்னி அவர்கள், ''பொய்யான செய்தியை அறிவிப்பதில் பிரபல்யமானவர்'' என்றும் இன்னும் பல்வேறு அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர். (நூல் லிஸானுல் மீஸான் பாகம் 6 பக் 321.)

ஈடு இணையற்ற நோன்பு
நோயோ தக்க காரணமோ இன்றி ரமலானில் ஒரு நாள் நோன்பை விட்டுவிட்டால் காலமெல்லாம் நோன்பு நோற்றாலும் அதற்கு ஈடாகாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),நூல் திர்மிதி (655)

இந்த செய்தியை பற்றி ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் புகாரியின் விரிவுரை

நூலான பத்ஹுல் பாரியில் குறிப்பிடும் போது இந்த செய்தியில் மூன்று குறைபாடுகள் உள்ளன.1. அறிவிப்பாளரில் குளறுபடிகள்2. இதில் இடம் பெறும் அபுல் முதவ்விஸ் என்பவரின் விவரம் தெரிவில்லை. 3. இதன் இரண்டாவது அறிவிப்பாளர் அபூஹ‎ýரைரா (ரலி) அவர்களிடம் செவியுற்றாரா? என்பதில் ஐயம் உள்ளது என்று கூறி இந்த செய்தி பலவீனமானது என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்கள்.


பரிந்துரை செய்யும் நோன்பு?
அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) அறிவிக்கிறார்கள் நோன்பும் குர்ஆனும் கியாம நாளில் அடியானுக்கு பரிந்துரை செய்யும் நோன்பு இறைவனிடத்தில் முறையிடும் : என் இறைவனே! இந்த அடியானை நான் பகலில் உணவை விட்டும் ஆசைகளை விட்டும் தடுத்துவிட்டேன். இவருடைய விஷயத்தில் என்னுடைய பரிந்துரையை ஏற்றுக்கொள்வாயாக! என்று கோரும். குர்ஆன் கூறும் : (யா அல்லாஹ்!) இரவு நேரங்களில் அவனுடைய தூக்கத்தை தடுத்துவிட்டேன் ஆகவே இவர் விஷயத்தில் என்னுடைய பரிந்துரையை ஏற்றுக்கொள்வாயாக என்று கோரும். அவை இரண்டின் பரிந்துரையும் ஏற்றுக்கொள்ளப்படும் என நபி (‏ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் அஹ்மத் (6337)

இந்த ஹதிஸின் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறம் ''இப்னு லஹிஆ'' என்பவர் மனன சக்தியில் குறைவுடையவர் என்றும் பலவீனமானவர் என்றும் பல அறிஞர்கள் குறை கூறியுள்ளனர்.(தஹ்தீபுத் தஹ்தீப்)


ரமலான் மாதத்தில் வாழச்செய்வாயாக!
அனஸ் (ரலி) அவர்கள் அறிக்கிறார்கள் : நபி‏ (ஸல்) அவர்கள் ரஜப் மாதம் வந்து விட்டால் ''யா அல்லாஹ் ரஜப் மாதத்திலும் ஷஃபான் மாதத்திலும் எங்களுக்கு பரகத் செய்வாயாக!' எங்களுக்கு ரமலான் மாதத்தையும் அடையச்செய்வாயாக!'' என்று பிரார்த்தனை செய்வார்கள்.
அறிவிப்பவர் அனஸ் (ரலி)
நூல் அஹ்மத்(2228) பஸ்ஸார், தப்ரானி

இதன் அறிவிப்பாளர் தொடரில் ஸாயிதா பின் அபீர்ருகாத் என்பவர் இடம் பெருகிறார் இவரைப்பற்றி இமாம் புகாரீ அவர்கள் ஹதீஸ் துறையில் நிராகரிக்கப்பட்டவர் என்று விமர்சனம் செய்துள்ளார். (மீஸானுல் இஃதிதால் பாகம் : 3 பக்கம் : 95)


மாதத்தின் தலைவர்?
அபீ ஸயீத் அல் குத்ரீ (ரலி) அறிவிக்கிறார்கள் : மாதங்களில் தலைவர் ரமலான் மாதமாகும் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
நூல் (தப்ரானி கபீர் பாகம் 9 பக் 205 ஷுஅபுல் ஈமான் பாகம் : 3 பக்கம் :314.)

இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெரும் யஸீத் பின் அப்துல் மலீக் என்பவர் இடம் பெறுகிறார்.இவர் பலவீனமானவராவார்.மேலும் இதை பதிவு செய்த இமாம் பைஹகீ அவர்களே இதன் அறிவிப்பாளர் தொடரில் பலவீனம் இருக்கிறது என்று கூறியுள்ளார்கள். இதே செய்தி தப்ரானீ அவர்களின் அல்முஃஜமுல் கபீரில் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களின் சொந்த கூற்றாக பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் இது அறிவிப்பாளர் தொடர் துண்டிக்கப்பட்டதாகும் என்று இமாம் ஹைஸமீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.



மதீனாவில் நோன்பு நோற்பது
மதீனாவில் நோன்பு வைப்பது மதீனா அல்லாத மற்ற ஊர்களில் ஆயிரம் நோன்பு வைப்பது விட சிறப்பானதாகும். மேலும் மதீனாவில் ஜும்ஆவை நிறைவேற்றுவது மற்ற ஊர்களில் நிறைவேற்றும் ஆயிரம் ஜும்ஆவை விட சிறப்பானதாகும் என் நபி ஸல் அவர்கள் கூறினார்கள் என்று பிலால் பின் ஹாரிஸ் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் தப்ரானீ - கபீர் பாகம் : 1, பக்கம் : 372

இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெரும் அப்துல்லாஹ் பின் கஸீர் என்பவர் இடம் பெற்றுள்ளார் இவரும் பலவீனமானவர்.(லிஸானுல் மீஸான் பாகம் : 3, பக்கம் : 329)


நோன்பு ஏற்றுக் கொள்ளப்படாது
அபூஹ‎ýரைரா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள் : யார் ரமலான் மாதத்தை அடைந்து அவர் சென்ற ரமலானின் நோன்பை களாச் செய்யவில்லையானால் அவரின் நோன்பை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளமாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (நூல் : தப்ரானீ அவ்ஸத், பாகம் : 3, பக்கம் : 321)

இந்த ஹதிஸின் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறம் ''இப்னு லஹிஆ'' என்பவர் மனன சக்தியில் குறைவுடையவர் என்றும் பலவீனமானவர் என்றும் பல அறிஞர்கள் குறை கூறியுள்ளனர்.(தஹ்தீபுத் தஹ்தீப்)


அரஃபா மலையளவு பாவம்
அபூ துஃமா என்பவர் அறிவிக்கிறார் : நான் இப்னு உமரிடம் இருக்கும் போது ஒரு மனிதர் வந்து அப்துர் ரஹ்மானே! நான் பயணத்திலும் நோன்பு வைப்பதற்கு சக்தி பெற்றுள்ளேன் (நான் நோன்பு நோற்கலாமா?) என கேள்வி கேட்டார். அதற்கு இப்னு உமர் அவர்கள் யார் அல்லாஹ்வுடைய அனுமதியை ஏற்றுக்கோள்வில்லையோ அவன் மீது அரபா மலை அளவு பாவம் ஏற்பட்டுவிடும் என்று அல்லாஹ்வின் தூதர் கூற செவியுற்றுள்ளேன்.
நூல் அஹ்மத் (5135), தப்ரானீ கபீர்

இந்த ஹதிஸின் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் ''இப்னு லஹிஆ'' என்பவர் மனன சக்தியில் குறைவுடையவர் என்றும் பலவீனமானவர் என்றும் பல அறிஞர்கள் குறை கூறியுள்ளனர்.(தஹ்தீபுத் தஹ்தீப்)


மாலையில் பல் துலக்குதல்
அலி ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள் நீங்கள் நோன்பு வைத்தால் காலையில் பல் துலக்கிவிடுங்கள் மாலையில் துலக்காதீர்கள்! ஏனெனில் மாலைநேரத்தில் உதடுகள் காய்ந்த நிலையில் நோன்பாளி இருந்தால் கியாம நாளில் அவருடைய இரண்டு கண்களுக்கு மத்தியில் ஒளி உன்டாகும் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
நூல் : தப்ரானி கபீர் பாகம் : 4, பக்கம் : 78)

இதில் அபுஅம்ரு என்ற கைஸான் என்பவர் இடம் பெறுகிறார். இவரை ஏராளமான அறிஞர்கள் பலவீனமானவர் என்று விமர்சித்துள்ளார்கள். (மீஸான் அல் இஃதிதால் பாகம் 5 பக் 205)


இரண்டு ஹஜ்ஜின் நன்மைகள்
யார் ரமலான் மாதத்தில் பத்து நாட்கள் இஃதிகாப் இருக்கிறாரோ அவர் இரண்டு ஹ‎‎ஜ், மற்றும் இரண்டு உம்ரா செய்தவர் போன்றவராவார் என நபி (‏ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் ஹஸன் (ரலி), நூல் : ஷ‎ýஅபுல் ஈமான், பாகம் : 3, பக்கம் : 425

இதில் முஹம்மத் பின் ஸாதான் என்பவர் இடம் பெறுகிறார். இவருடைய ஹதீஸ்கள் நிராகரிக்கப்படவேண்டியவை என்று புகாரீ அவர்கள் உட்பட பலர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். மேலும் இச்செய்தியில் இடம் பெறும் மற்றொரு அறிவிபப்பாளர் அன்பஸா பின் அப்துர் ரஹ்மான் என்பவரையும் இமாம் புகாரீ அவர்கள் போன்றோர் இவருடைய ஹதீஸ்கள் நிராகரிக்கப்படவேண்டியவை என்று கூறியுள்ளனர்.. (தஹ்தீப் தஹ்தீப் பாகம் 8 : பக்கம் : 143, பாகம் : 9, பக்கம் : 145)

''யார் ரமலானை மக்காவில் அடைந்து, (அ‏ங்கே) நோன்‹ வைத்து இயன்ற அளவு இரவு தொழுகை தொழுகிறாரோ மக்கா அல்லாத மற்ற ஊர்களில் நோன்‹ வைத்த நன்மையை விட ஆய‎Šரம் மாதங்கள் நோன்‹ வைத்து தொழுத நன்மைகள் கŠடைக்கின்றன'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : இப்னுமாஜா 3108

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் அப்துர் ரஹீம் பின் ஸைத் அல் அம்மீ என்பவர் இடம் பெறுகிறார். இவர் ஹதீஸ் துறையில் ஏராளமான அறிஞர்கள் இவரை பலவீனமானவர் என்பதை பலவித வார்த்தைகளில் தெளிவுபடுத்தியுள்ளார்கள். (தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் : 6, பக்கம் : 273)

ஒவ்வொரு பொருளுக்கும் ஸகாத் (கடமை) இருக்கிறது. உடலுடைய ஸகாத் நோன்பாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர் : அபூஹ‏‎ýரைரா (ரலி), நூல் : இப்னு மாஜா (1735)

இந்த ஹதீ‏ஸின் அறிவிப்பாளர் தொடரில் 'மூஸா பின் உபைதுல்லாஹ்' என்பவர் இடம் பெறுகிறார். இமாம் அஹ்மத், நஸயீ, இப்னு அதீ, இப்னு மயீன் ஆகியோர் பலவீனமானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள். (மீஸாலுல் இஃதிதால் பாகம் 6, பக்கம் : 551)


நோன்பு துஆ
அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள் நபி ஸல் அவர்கள் நோன்பு திறக்கும் போது ''அல்லாஹும்ம லக்க ஸும்த்து வஅலா ரிஸ்கிக்க அஃப்தர்த்து'' (யா அல்லாஹ் உனக்காக நோன்பு நோற்றேன் உன்னுடைய உனவை கொண்டு நோன்பு திறந்துவிட்டேன்)

இது அபூதாவூத் என்ற கிதாபில் இடம் பெற்றுள்ளது அது பலவீனமான முர்ஸல் வகையைச் சார்ந்தாகும்.

இதே செய்தி தப்ரானியின் அவ்ஸத் மற்றும் சகீர் ஆகிய நூல்களிலும் இடம் பெறுகிறது. இதில் தாவூத் பின் சிப்ரிகான் என்பவர் இடம் பெறுகிறார் இவர் பலவீனமானவர்.

இதே கருத்தில் தப்ரானி கபீர் என்ற நூலிலும் சில மாற்றங்களோடு இடம் பெற்றுள்ளது. அதில் அப்துல் மலிக் பின் ஹாரூன் என்பவர் இடம் பெறுகிறார் இவரும் பலவீனமானவரே.


பித்ரா இல்லாமல் நோன்பு கூடாது?
ரமலான் மாதம் (அதாதவது அம்மாதத்தின் நோன்பு) வானத்திற்கும் பூமிற்கும் மத்தியில் தொங்கவிடப்பட்டிருக்கும். பித்ரா தர்மம் கொடுக்கும் வரை அது (அல்லாஹ்விடம்) உயர்த்தப்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள் : அல்இலலுல் முதநாஹிய்யா, கன்ஸ‎ýல் உம்மால், அல்ஜாமிவுஸ் ஸகீர்.)

இச்செய்தியில் இடம் பெறும் ஐந்தாவது அறிவிப்பாளர் முஹம்மத் பின் உபைத் என்பவர் யாரென அறியப்படாதவர் என்று இச்செய்தி பதிவு செய்த இமாம் இப்னுல் ஜவ்ஸீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இதை ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் தனது ஸிஸானுல் மீஸான் என்ற நூலிலும் உறுதி செய்துள்ளார்கள்.