கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

பகிரங்கமாக இளைஞர்கள் இருவர் மது அருந்திய சமபவம்




கஹடோவிடவில் உள்ள இரவுநேர ஹோட்டலின் முன்னால் நேற்று முன்தினத்தன்று இரவு 9.15 மணியளவில் பகிரங்கமாக சிங்கள இளைஞர்கள் இருவர் மது அருந்திய சமபவம் ஒன்று இடம் பெற்றது.


ஒரு முஸ்லிம் ஊரில் எமது இளைஞர்கள் நடமாட்டம் அதிகமான நேரத்தில் இச்சம்பவம் இடம் பெற்றது. எமது ஊரின் பள்ளிவாயிலின் முக்கிய தர்மகர்த்தாக்களும் இச்சம்பவம் நடைபெற்றது என்பதற்கான சாட்சியாளர்களாக இருந்தார்கள்.

ஹோட்டலின் உள்ளே குடிக்க வேண்டாம் என ஹோட்டல் உரிமையாளர் உத்தரவு விட்டதும் வெளியே வந்து போத்தலை கையில் வைத்துக்கொண்டு மாறி மாறி குடித்துக் கும்மாளம் அடித்தனர். பைட்டுக்காக கொத்து ரொடியையும் சுவைக்குச் சேர்த்துக்கொண்டுதான் மதுவை அந்த சிங்கள இளைஞர்கள் அருந்தினர்.
இந்த இஸ்லாம் தடுத்த பாவச்செயலைத் தடுக்க கலிமாச் சென்ன எந்த முஸ்லிமும் அந்த நேரத்தில் முன்வரவில்லை. குறைந்த பட்சம் இது முஸ்லிம்கள் உள்ள ஊர், எம்முடைய கலாச்சாரம் இதற்க்கு அனுமதிப்பதில்லையென்ற வார்த்தைகளை கனிவுடன் கூற யாருக்கும் திராணி இருக்கவில்லை.

இன்று குடிப்பவன் நாளை பாதையில் செல்பவர்களுக்கு தேவையில்லாத வார்த்தைகளை பிரயோகிப்பான். இதன் போது ரோசம் கொண்டு இனப்பிரச்சினைகளுக்கு தூபமிடுவார்கள். முலம் எங்கே என ஆராய்ந்து இப்போதே நடவடிக்கை எடுக்க உரிய பொறுப்புதாரர்கள் தவறிவிடுவார்கள் என்றிருந்தால் நிலைமை புதாகரமாக இடமிருக்கிறது.

ஒரு சில ரூபா இலாபத்துக்காக எமது சிங்கள சமுகத்துடன் உள்ள சுமுக உறவு பாதிக்கப்பட்டு முருகல் நிலைக்கு காரணமாக அமைய இது போன்ற நடவடிக்கைகளை விட்டுவைக்கக் கூடாது

எமது ஊரில் நிறுவாக கட்டமைப்புடன் சம்பந்தப்பட்டவர்கள் பள்ளிவாயில்கள், சீர்திருத்த ஜமாஅத்துக்கள் இயக்கங்கள் போன்ற அமைப்பை சேர்ந்தவர்கள் பெரும்பாவங்கள் விடயத்திலும் அஜஸ்மன்ட் செய்கிறார்களா என பொதுமக்கள் அங்கலாய்த்துக்கொள்ள இடம்வைக்கக் கூடாது.
இது சில்லரைப்பிரச்சினையல்ல. பெரும்பாவம் இன்று ஹோட்டலுக்கு வெளியே நாளை பாடசாலைகளுக்குள் அடுத்த நாள்  எமது இளைஞர்களின் கைகளிலும்.....
இது தனிப்பட்ட ஹோட்டல் காரனுடன் தொடர்புபட்டதல்ல. ஒரு முஸ்லிம் ஊரில் எமத கலாச்சாரத்துடன் தொடர்புபட்டது. எமது கலாச்சாரம் குர்ஆனும் சுன்னாவும் என்பது மறந்து விட மாட்டோமே சிந்திப்போம் செயல்படுவோம்.

தகவல்..
ஜதாகுமுல்லாஹ் ஈமைல் அனுப்பிய சகோதரருக்கு நன்றி.

0 comments:

Post a Comment