நடைபாதை கடையில் பிள்ளைக்கு பொருட்கள் வாங்கும் பாராளுமன்ற உறுப்பினர்…
இலங்கை , இந்தியா போன்ற நாடுகளில் அரசியல்வாதி, அதுவும் நாட்டை ஆளும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் என்றால் அவரின் ஆடம்பர வாழ்க்கை தான் எமக்கு நினைவுக்கு வரும்.. சிறு பொருள் ஒன்றை கொள்வனவு செய்ய, செல்லப்பிரானிக்கு மருந்தெடுக்க வெளிநாட்டுக்கு பறந்தவர்கள் என முந்தைய பல ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் அவ்வாறு பந்தாவாக இருந்ததே அதற்கு காரணம்,

அதன் ஒரு காட்சியாக JVP பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹதுன்நெத்தி அவர்கள் நடை பாதை கடையொன்றில் தன பிள்ளைக்கு விளையாட்டு சாமான்களை (முன்பள்ளியில் சிறுவர் தின நிகழ்வுக்கு தேவையான பொருட்கள்) கொள்வனவு செய்தது புகைப்படமாக சமூக வலைகளில் வெளியாகி பலரை ஆச்சர்யப்படுத்தி உள்ளது.
JVP கட்சி ஏற்கனவே எளிமைக்கு பெயர்போன ஒரு கட்சி என்ற நிலையில் இந்த புகைப்படங்கள் அதனை மேலும் உறுதி செய்கின்றன.
0 comments:
Post a Comment