கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

இலங்கை முஸ்லிம்களுக்கு ஒரு முக்கிய அறிவித்தல்:

இலங்கையில் இருந்து வெளியாகும் வீரகேசரி என்னும் பத்திரிகை தொடர்ச்சியாக பாலஸ்தீன போராளிகளை கொச்சைப்படுத்தி “தீவிரவாதிகள்” என்றும் குழந்தைகளையும் பெண்களையும் ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கும் இஸ்ரேலிய தீவிரவாதிகளை “இஸ்ரேலிய இராணுவம்” என்றும் செய்தி வெளியிட்டு வருகிறது.
இதே வீரகேசரி பத்திரிகை தன் இனமான தமிழீழ விடுதலை புலிகளின் பெயரை எழுதும்போது மட்டும் விடுதலை புலிகள் என்றும், போராளிகள் என்றும் எழுதுகிறார்கள். ஆனால், பாலஸ்தீன முஸ்லிம் போராளிகளை தீவிரவாதிகள் என்று எழுதி தன் இனவெறியை காட்டுகிறார்கள்.
அதேநேரம், இதே பத்திரிகைதான் முஸ்லிம்களை இலக்காக கொண்டு விடிவெள்ளி என்னும் ஒரு இஸ்லாமிய பத்திரிக்கையை பிரசுரித்து வருகிறது.
பணம் சம்பாதிக்க மட்டும் முஸ்லிம்கள் தேவை. அதே நேரம் முதுகுக்கு பின்னால் இருந்து குத்துவதும் அதே முஸ்லிம்களுக்குத்தான்.
இந்த இனவாதிகளுக்கு படிப்பினை ஊட்ட அவர்களின் அனைத்து பத்திரிக்கைகளையும் புறக்கணியுங்கள். முடிந்தால் எல்லா முஸ்லிம்களுக்கும் இதனை தெரியப்படுத்துங்கள்.
(இது நம் தமிழ் சொந்தங்களுக்கு எதிரான கருத்து அல்ல )
தகவல் Muhammed Ikram Malik
மூலம். The Puttalam Times

இஸ்ரேலியப் படைகளுக்கு உதவியாக தம் படையினரை அனுப்பிய நாடுகளின் விபரங்கள்

Fairooz Mahath பலஸ்தீனப் போராளிகளின் மூலங்களில் இருந்து கிடைத்த தகவல்களின் படி

1) அமெரிக்கா – 2000 மேரியன்ஸ்

இவர்கள் கான்யூனிஸ் நகரின் கிழக்குப் பகுதியிலும் பைத் ஹானூன் நகரின் வடக்குப் பகுதியிலும் நிலை கொண்டுள்ளனர்.

2) பிரித்தானியா – 700 சிறப்பு உளவுப்படையினர்
இவர்கள் பைத் லாஹியாவின் வடகிழக்குப் பகுதியில் நிலை கொண்டுள்ளனர்.

3) எகிப்து – 1200 வீரர்கள் . இவர்கள் 777 என்றழைக்கப்படும் சிறப்புப் போர்ப் படையணியையும் எகிப்தின் இரண்டாம் காலாட்படையையும் சேர்ந்தவர்களாவர்.
இவர்கள் கரம் அபூ ஸாலிம் எனும் எல்லைக் கடவைக்கு அண்மையில் நிலை கொண்டுள்ளனர்.

4) சவூதி அரேபியா – 120 படையினர். தரைப்படையைச் சேர்ந்த இவர்கள் எகிப்திய இராணுவத்துடன் இணைந்து கரம் அபூ ஸாலிமுக்கு அருகில் நிலை கொண்டுள்ளனர்.

5) எமிரேட்ஸ் – 200 படையினர் வரையுள்ள இவர்கள் தேசிய பாதுகாப்பு படைப்பிரிவையும் உளவுத்துறையையும் சேர்ந்தவர்களாவர்.
கரம் அபூ ஸாலிமுக்கு அருகில் சவூதி மற்றும் எகிப்து படையினருக்கு நெருக்கமாக நிலை கொண்டுள்ள இவர்கள் போர் நடவடிக்கைகளில் அன்றி உளவுப் பணிகளிலேயே ஈடுபடுத்தப்படுகின்றனர்.

ஊடகவியலாளர் முஹம்மத் நாஸர் வெளியிட்டுள்ள இத்தகவல்கள் ஏற்கனவே ஹமாஸ் தரப்பினால் சூசகமாக சொல்லப்பட்டவையாகும்.

 இது குறித்து பின்னர் நாம் விரிவாக செய்திவெளியிடுவோம் என்று மட்டுமே ஹமாஸ் சொல்லியிருந்தது.
அவர்கள் வசமுள்ள தகவல்கள் இங்கு கசியவிடப் பட்டிருக்கலாம் என்று நம்ப முடிகிறது.

முஹம்மட் பஹ்மி-

srilankamuslim web

Pendrive வை RAM ஆக பயன்படுத்தி கணினியின் வேகத்தை அதிகரிக்கும் வழிமுறைகள்

கணினியில் பல தொழில்நுட்பம் வந்துவிட்ட நிலையில் அவற்றின் பயன்பாடுகளை பயன்படுத்த தேவைப்படும் நினைவாற்றலின் அளவை எண்ணி பார்க்கும் போது பகல் கனவாகவே உள்ளது.
இப்பிரச்சனையை கணனியின் RAM அளவை அதிகரிக்கும் பொழுது சரி செய்யலாம். ஆனால் RAMன் விலை அதிகமென்பதால் நாம் பயன்படுத்தும் Pendriveவை RAM ஆக மாற்றி பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் வழிமுறைகள்:
1. பயன்படுத்தும் Pendriveவில் உள்ள அனைத்து தகவலையும் நீக்கிவிட்டு Pendriveவை கனணியின் USB portல் பொறுத்தவும். (Minimum 2 GB).
pendrive_002
2. MY COMPUTER யை Right click செய்து அந்த menuவில் உள்ள PROPERTIES யை click செய்யவும். அப்போது ஓபனாகும் புதிய விண்டோவில் advanced system setting என்பதை கிளிக் செய்யவும்.
3. அடுத்ததாக தோன்றும் system properties menu வில் உள்ள advanced என்ற tab யை click செய்யவும்.
pendrive_004
4. அடுத்ததாக தோன்றும் window வில் performanceக்கு கீழேயுள்ள setting யை click செய்யவும்.
pendrive_005
5.Performance window வில் மீண்டும் advance டேபுக்கு சென்று virtual memmory-க்கு கீழாக உள்ள change யை click செய்யவும்.
pendrive_006
6. தோன்றும் அடுத்த window வில் உள்ள உங்களின் pendrive தோற்றத்தை select செய்து custom size யை தெரிவு செய்யவும்.
pendrive_007
7. Initial Size:1020 ,Maximum size:1020 என மாற்றம் செய்யவும். இந்த அளவை உங்களின் pendive அளவை பொறுத்து மாற்றி அமைக்கலாம்.
pendrive_008
8. set என்பதை click செய்யவும்.
pendrive_009
9. கடைசியாக ok செய்தவுடன் கனணியை restart செய்யவும்.
pendrive_010
இதன் இறுதியில் உங்கள் கணினியின் செயல்படும் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஹமாஸ் கைது செய்து கொண்டு சென்றது இஸ்ரேலிய பாதுகாப்பமைச்சரின் மிக நெருங்கிய உறவினரான இராணுவ சிப்பாயை.

இன்று காலை மற்றுமொரு இஸ்ரேலிய படையை சேர்ந்தவனை ஹமாஸ் இராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.
23 வயதுடைய லெப்டினன்ட் Hadar Goldin என்பவரையே ஹமாஸ் கைது செய்துள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.இந்த செய்தியை பிரித்தானிய  சனல்4  ஊர்ஜிதம் செய்துள்ளது.
israel-funeral_0
இதில் விசேடம் என்ன தெரியுமா?
கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய் இஸ்ரேலிய பாதுகாப்பமைச்சர் மோசே யாலேனின் மிக நெருங்கிய உறவினர் (மைத்துனர் உறவு முறை) ஹமாஸ் படையால் கடத்தப்பட்ட  லெப்டினன்ட் Hadar Goldin பிரித்தானிய யூத குடியேற்றவாசி என்பது குறிப்பிடத்தக்கது.
Lieutenant Hadar Goldin, 23, who is believed to have been kidnapped, is thought to be from a family of British Jewish immigrants and the third cousin of Israeli Defence Minister Moshe Yaalon
சுரங்க ஒழிப்பு நடவடிக்கையின் போது குறித்த சிப்பாய் ஹமாஸ் இயக்கத்தினாரால் சுரங்கப்பாதை ஊடாக காஸா பகுதிக்குள் கடத்தப்பட்டுள்ளார்.  ஹமாஸ் வீரர்களுடன் களத்தில் தாக்குபிடிக்க முடியாத  யூத xxxxxxxx கள்  மீண்டும் ஒருமுறை பாலஸ்தீன அப்பாவிகளை குறிவைத்து தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளமை  யூத xxxxxxxx  களின் கோழைத்தனத்தினை  மீண்டும் ஒருமுறை உலகத்துக்கே பறைசாற்றியுள்ளது.
இதனால் காஸா விவகாரம் மிகவும் சூடு பிடித்துள்ளது.ஹமாஸ் இராணுவத்தினரின் தாக்குதலில் இதுவரை 61 இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
Razana Manaf

உங்கள் லேப்டாப் பேட்டரிகள் பழுதடையாமல் தடுக்க எளிய வழிகள்!

லேப்டாப்புகள் வந்த பிறகு மேசை கணினிகளின் விற்பனை கணிசமாக குறைந்துவிட்டது. அந்த அளவிற்கு லேப்டாப்புகள் மக்களின் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த லேப்டாப்புகள் சிறப்பாக இயங்க வேண்டும் என்றால் அதன் பேட்டரி மிகுந்த சக்தியுடன் இருக்க வேண்டும். லேப்டாப்புகளின் பேட்டரியை எவ்வாறு பராமரிப்பது? என்பதற்கான சில வழிமுறைகளை இங்கே காணலாம்.
1. லேப்டாப்பின் திரைக்குதான் அதிக மின்சாரம் தேவைப்படுகிறது. எனவே கரண்ட் இல்லாமல் பேட்டரியில் லேப்டாப்பை இயக்கும்போது அதன் திரையின் பிரகாசத்தை குறைத்து வைத்துக்கொள்வது அதிக மின்சாரத்தை சேமிக்க முடியும். அதுபோல் லேப்டாப் ஸ்டான்பை மோடில் வைத்திருக்கும்போது, ப்ளூடூத் மற்றும் வைபை போன்ற இணைப்புகள் மற்றும் யுஎஸ்பி ப்ளாஷ் ட்ரைவ்கள் போன்ற இணைப்புகளை துண்டித்துவிடுவது நல்லது. மின் சிக்கனம் மட்டுமின்றி பேட்டரியின் ஆயுள் காலமும் அதிகரிக்கும்.

2. எப்போது சார்ஜ் செய்ய வேண்டும் : நீண்ட நேரம் தொடர்ந்து லேப்டாப்பின் பேட்டரியை சார்ஜில் வைக்கக் கூடாது. குறிப்பாக பேட்டரி 15%க்கும் குறைவான சார்ஜ் இருக்கும் போது மட்டும் மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டும். குறிப்பாக பேட்டரி முழு சார்ஜில் இருக்கும் போது அதை மீண்டும் சார்ஜில் வைத்தால் பேட்டரி மிக விரைவாக பலவீனமாகிவிடும்.

3. லேப்டாப் மின் இணைப்பில் இருக்கும் போது அதன் பேட்டரியை அகற்ற வேண்டாம். அதுபோல் பேட்டரி இல்லாமல் நீண்ட நேரம் லேப்டாப்பை மின் இணைப்பில் வைத்து இயக்க வேண்டாம். பேட்டரியை ரிசார்ஜ் செய்வது நல்லது.

4. ஒரு வாரத்துக்கு மேல் லேப்டாப்பில் வேலை இல்லை என்று தெரிந்தால் அல்லது துணை பேட்டரி இருந்தால் பேட்டரியின் சார்ஜ் அளவை 50%க்கும் குறைவாக வைத்து அதை மிதமான தட்பவெப்ப நிலையில் வைத்திருப்பது நல்லது. அதுபோல் லேப்டாப்பை நீண்ட நேரம் காரில் வைத்திருக்காமல் இருப்பது நல்லது. ஏனெனில் அதிக நேரம் லைப்டாப்பை காரில் வைத்திருந்தால் விரைவில் லேப்டாப் சூடாகிவிடும்.

5. பொதுவாக எல்லா லேப்டாப்புகளும் லித்தியம் பேட்டரிகளைக் கொண்டுள்ளன. எனவே பேட்டரியின் தன்மைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு நாளும் அதை முறையாக முழு சார்ஜில் வைத்திருப்பது, மற்றும் அதன் சார்ஜை 40 முதல் 50 சதவீதத்திற்கும் குறையாமல் வைத்திருப்பது நல்லது.

6. பேட்டரியை தேவைக்கேற்ப சார்ஜில் வைத்திருப்பதால் காலப்போக்கில் பேட்டரியின் திறன் பலவீனமடையும். எல்லா எலக்ட்ரானிக் சாதனங்களிலும் இந்த யதார்த்தம் இருக்கிறது. பேட்டரி பலவீனமடையும் போது அது லேப்டாப்பின் ஆயுளையும் பலவீனப்படுத்தும். ஆக உண்மையிலேயே பேட்டரி பலவீனமடையும் போது புதிய பேட்டரியை மாற்றுவது நல்லது. அப்போது லேப்டாப்பின் ஆயுள் கெடாமல் இருக்கும்.

தேசிய சூறா சபையின் கூட்டத்தில் அமைச்சர் ராஜித சேனாரட்ன உரையாற்றுகிறார்..!

தேசிய சூரா பேரவையின் கூட்டத்தில் இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன உரையாற்றவுள்ளார்.

 எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 13ம் திகதி தேசிய சூரா பேரவையின் கூட்டம் கொழும்பில் நடைபெறவுள்ளது.

 தேசிய சூரா பேரவை பிரிவினைவாதத்தை தூண்டி வருவதாகவும் இதனால் அந்த அமைப்பை தடை செய்ய வேண்டுமெனவும் சிங்கள பௌத்த கடும்போக்கு அமைப்பான பொதுபல சேனா இயக்கம் கோரி வந்தமை குறிப்பிடத்தக்கது. சூரா பேரவையை தடைசெய்யுமாறு பொதுபலசேனா இயக்கம் அரசாங்கத்திடம் நேரடியாகவே கோரிக்கை விடுத்திருந்தது.

 பொதுபல சேனா இயக்கத்தின் நடவடிக்கைகளை பகிரங்கமாக விமர்சனம் செய்து வரும் ராஜித சேனாராட்ன கூட்டத்தின் பிரத பேச்சாளராக பங்கேற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

jaffnamuslim

இலங்கையில் முஸ்லிம் கிராமங்கள் இருக்கக் கூடாது - பயங்கரவாதி ஞானசார

இலங்கையில் தமிழ், முஸ்லி்ம் கிராமங்கள் இருக்கக் கூடாது என்பதாக பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் வலியுறுத்தியுள்ளார்.
பொதுபல சேனா அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடல் ஒன்றின்போது இந்தக் கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

வாக்கு வங்கியைக் கருத்திற் கொண்டு அரசாங்கம் இலங்கையின் பல பிரதேசங்களிலும் தனி தமிழ், முஸ்லிம் கிராமங்கள் இருப்பதை கண்டு கொள்வதில்லை, ஆனால் இனி வரும் காலங்களில் அவற்றை மாற்ற வேண்டும்.

ஒவ்வொரு கிராமங்களிலும் சிங்கள மக்கள் கலந்து வாழும் நிலை உருவாக்கப்பட வேண்டும், அதற்கேதுவாக எதிர்காலத்தில் தமிழ், சிங்கள கிராமங்களின் பெயர்களும் மாற்றப்பட் வேண்டும், இந்த செயற்திட்டத்தை பௌத்த பிக்குகளின் ஆசியுடன் பொதுமக்கள் முன்னெடுக்க வேண்டும்.

சட்டரீதியாகவோ, சட்டத்திற்குப் புறம்பான வழியிலோ அனைத்துப் பிரதேசங்களிலும் சிங்கள மக்கள் பரந்து வாழும் நிலை உருவாக்கப்பட வேண்டும், இதற்காக மகாநாயக்க தேரர்களின் வழிகாட்டுதலையும் பெற்றுக் கொள்ள முயற்சிக்கப்படும், அவர்கள் எதிர்த்தாலும் இந்தச் செயற்திட்டம் தடையின்றி முன்னெடுக்கப்படும் என்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

இச் செயற்திட்டத்தை முன்னெடுக்கும் வகையிலான பயிற்சி மற்றும் செயலமர்வுகளை நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கவும் பொதுபல சேனா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைகலப்பில்முடிந்த MoonStart ஈத்தின உதைபந்தாட்டப் போட்டி



புனித ஈகைத்திருநானை முன்னிட்டு ஓகடபொள “மூன் ஸ்டார்“ விளையாட்டுக் கழகத்தினால் உதைபந்தாட்ட  போட்டியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரண்டு அணிகளுக்கிடையில் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கையில் ஒரே அணியை்ச் சோ்ந்த இருவருக்கிடையில் ஏற்பட்ட சிறு பிரச்சினை கைகலப்பில் முடிவடைந்து பொலிஸ்நிலையம் வரை சென்றுள்ளதாக அறியக் கிடைக்கிறது.

நேற்று 31.07.2014ம் திகதி இடம்பெற்ற இப்போட்டியில்  தமது அணியில் விளையாடிக் கொண்டிருந்த ஒருவரின் விளையாட்டு வழுவானது என்பதை இன்னுமொரு வீரர் சுட்டிக் காட்டும்போது ஏற்பட்ட வாய்ச்சண்டை பின்னா் கைகலப்பாக மாறி சக வீரரை தனது உதைபந்தாட்ட சப்பாத்துக்காலால் தாக்கவே காயமடைந்த வீரர் மயக்கமுற்று விழுந்துள்ளார். மயக்கமுற்ற வீரரை உடனடியாக வதுபிடிவல வைத்தியாசாலக்கு எடுத்துச் சென்று வழுக்கி விழுந்து காயம் ஏற்பட்டதாக பதியப்படதாகவும் பின்னா் காயத்துக்குள்ளானவரின் சகோதரர் விசயமறிந்து ஆஸ்பத்திரிக்கு விரைந்து நடந்தத விடயத்தை வைத்தியா்களிடம் கூறவே, பொலிஸில் புகார் பதியப்படதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சகவீரரைத்தாக்கிய நபரை பொலிஸார் தேடுவதாகவும் அறிய முடிகின்றது.