கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ஜனாஸா அறிவித்தல்

கொச்சிவத்தையைச் சேர்ந்த அல்ஹாஜ் H.L.M. றியாழ் அவர்கள் காலமானார். அன்னார் காலஞ்சென்ற நூர் நழீரா அவர்களின் அன்புக் கணவரும் ஜிப்ரி ,பாருக் ,உவைஸ், ரிஸ்வி, பாத்திமா பீவி, ஆசிரியைகளான சித்தி பௌஸியா, அஸ்மா ஆகியோரின் தந்தையும் நிஸ்தார் ,அஜ்வாத், மாஹிர் ஆசிரியர் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

 அன்னாரின் ஜனாஸா இன்று (2010.10.30) சனிக்கிழமை இரவு 10.00 மணியளவில் முஹியித்தீன் ஜூம்ஆப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து பர்ஸஹவுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி வைப்பானாக!

காஷ்மீர் விவகாரத்தில் அருந்ததி ராய் பேசியதில் எந்தக் குற்றமும் இல்லை :தொல்.திருமாவளவன்

சென்னை : காஷ்மீர் விவகாரத்தில் அருந்ததி ராய் பேசியதில் எந்தக் குற்றமும் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீர் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை தெரிவித்த உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராயின் குரலை நெறிக்க முயற்சி செய்யும் மத்திய அரசின் செயல்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம்.பாஜகவை திருப்திப்படுத்துவதற்காக காங்கிரஸ் அரசு இப்படி செயல்படுவது வெட்கக் கேடு. காஷ்மீர் மக்கள் விடுதலையை விரும்புகின்றனர் என்பது எல்லாரும் அறிந்த உண்மை.அங்கு 2 இஸ்லாமிய பெண்கள் கற்பழிக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பிறகுதான் அவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் அருந்ததி ராய் பேசியதில் குற்றம் எதுவுமில்லை. யாரையும் தூண்டுவது போலவும் அவர் பேசவில்லை. காஷ்மீர் மக்கள் மற்றும் ஜனநாயக நாட்டமுள்ளவர்களின் எண்ணத்தின் எதிரொலிதான் அவரது கருத்தில் பிரதிபலிக்கிறது.காஷ்மீர் விவகாரத்தில் இருந்த மெளனத்தை உடைத்த அருந்ததி ராயை நான் பாராட்டுகிறேன். அவருக்கு இந்த விவகாரத்தில் முழு ஆதரவு அளிக்கிறோம்.ஜனநாயக அமைப்புகள், தலைவர்கள், அவருக்கு உறுதுணையாக இருந்து பேச்சுரிமையை காப்பாற்ற முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.

உலகக்கிண்ணப் புகழ் ஒக்டோபஸ் உயிரிழந்தது


உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடரின்போது சரியான எதிர்வுகூறல்கள் பலவற்றினால் புகழ்பெற்ற, போல் எனும் ஒக்டோபஸ் விலங்கு உயிரிழந்துள்ளதாக ஜேர்மன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஜேர்மனியின் ஒபர்ஹெஸன் கடல் உயிரினப்பூங்காவில் இந்த ஒக்டோபஸ் விலங்கு வசித்து வந்தது. இன்று காலை அவ்விலங்கு உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக மேற்படி நீரியில் பூங்கா விடுத்த அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒக்டோபஸுக்காக நினைவுச் சின்னமொன்றையும் நிர்மாணிக்கவுள்ளதாகவும் அப்பூங்கா அறிவித்துள்ளது.
உலகக்கிண்ண இறுதிப்போட்டி, அரையிறுதிப் போட்டிகள் உட்பட 8 முக்கிய போட்டிகளில் வெற்றிபெறும் அணி எது என்பதை போட்டிகளுக்கு முன்பாகவே மேற்படி ஒக்டோபஸ் சரியாக எதிர்வுகூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த போட்டிகளில் பங்குபற்றும் நாடுகளின் தேசியக்கொடிகள் பொறிக்கப்பட்ட இரு கண்ணாடிப் பெட்டிகளில் வெற்றி பெறப்போகும் அணியின் கொடிபொறித்த பெட்டியை தனது தொட்டிக்குள் இறக்குவதன் மூலம் மேற்படி ஒக்டோபஸ் எதிர்வு கூறியது. இந்த எதிர்வுகூறல் செயற்பாடுகளை உலகெங்குமுள்ள பல தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பியமை குறிப்பிடத்தக்கது.

விற்பனையில் முன்னணி வகிக்கும் 'கர்காரேயைக் கொன்றது யார்?' புத்தகம்.


புதுடெல்லி:ரகசிய உடன்படிக்கையின் காரணமாகவோ அல்லது காழ்ப்புணர்வினாலோ தேசிய ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்ட 'Who Killed Karkare' (கர்காரேயைக் கொன்றது யார்?) புத்தகம் விற்பனையில் முன்னணி வகிக்கிறது. புத்தகம் வெளியிட்டு 7 மாதத்திற்குள் 4-ஆம் பதிப்பிற்கு தயாராகி வருகிறது அப்புத்தகத்தின் வெளியீட்டு நிறுவனம். மும்பைத் தாக்குதல் நடைபெற்று ஓராண்டு நிறைவுற சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு அதாவது 2009 அக்டோபர் மாதத்தில் தான் மஹாராஷ்ட்ரா மாநில காவல்துறை ஐ.ஜியாக பணிபுரிந்து ஓய்வுபெற்ற எஸ்.எம்.முஷ்ரிஃப் எழுதிய 'கர்காரேயைக் கொன்றது யார்?' என்ற ஆங்கில புத்தகம் வெளியிடப்பட்டது.

டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஃபரோஸ் மீடியாதான் இப்புத்தகத்தின் வெளியீட்டு நிறுவனம். இந்தியாவில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளைக் குறித்த புலனாய்வுகள், புலனாய்வுத் துறைகளின் பங்கு, மும்பைத் தாக்குதலின் பின்னணிகள், அதைக் குறித்த புலனாய்வு உள்ளிட்ட விஷயங்களை இப்புத்தகத்தில் காணலாம். இந்தியாவில் நடைபெற்ற எல்லாக் குண்டுவெடிப்புகளுக்கும் காரணம் 'இஸ்லாமிய தீவிரவாதம்' என்று தீவிரமாக நடைபெற்று வரும் பிரச்சாரத்திலிருந்து வித்தியாசமாக இந்தியாவில் நடந்த பெரும்பாலான குண்டுவெடிப்புகள் மற்றும் தாக்குதல்களுக்கு பின்னணியில் பிராமண லாபி செயல்படுவதாக அப்புத்தகத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் எஸ்.எம்.முஷ்ரிஃப். ஐ.பி மற்றும் ஊடகங்களின் மீதான தங்களின் ஆதிக்கத்தை பயன்படுத்தி அவர்கள் இதனை சாத்தியமாக்குவதாகவும் அப்புத்தகம் கூறுகிறது.

போலீஸ் வாழ்க்கையின் அனுபவங்கள், பத்திரிகை குறிப்புகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்துதான் இப்புத்தகத்தை எழுதியுள்ளார் எஸ்.எம்.முஷ்ரிஃப்.இந்தியாவின் முக்கிய ஊடகங்களின் 'உண்மையான' முகத்தை வெளிப்படுத்துவதால் தான் தேசிய ஊடகங்கள் இப்புத்தகத்தை புறக்கணிக்க காரணமாகயிருக்கலாம் என சுதந்திர பத்திரிகையாளரான சுபாஷ் கடாடே தெரிவிக்கிறார்.மேலும் தேசிய முக்கிய ஊடகங்களுக்கும் ஐ.பிக்கும் இடையிலான ரகசிய தொடர்பை இப்புத்தகம் வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக கூறுகிறார் சுபாஷ் கடாடே.

இப்புத்தகத்தின் 3-வது பதிப்பு தற்பொழுது விற்பனையில் உள்ளது. நான்காவது பதிப்பை வெளியிடுவதற்கு தயாராகி வருகிறார்கள் பதிப்பகத்தார். உருது, தமிழ் (விடியல் வெள்ளி மாத இதழில் தொடராகவும் வெளிவருகிறது), கன்னடம், மலையாளம்(தேஜஸ் பப்ளிகேஷன்) ஆகிய மொழிகளில் வெளிவந்துள்ளது.
மராத்தி, குஜராத்தி,ஹிந்தி,பெங்காளி ஆகிய மொழிகளில் விரைவில் வெளிவர இருக்கிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் 10 to 20 புத்தகங்களுக்கு ஆர்டர் வருவதாக தெரிவிக்கிறார் பதிப்பகத்தின் மாஸின் கான். மாஸின் கானின் சக பத்திரிகையாளரான கவுசர் கூறுகையில், "ஹைதராபாத்தில் சமீபத்தில் நடந்த NCPUL புத்தக கண்காட்சியில் அதிக விற்பனையான புத்தகம் who killed karkare ஆகும். புத்தக கண்காட்சியைப் பற்றிச் செய்தி வெளியிட்ட எந்தவொரு பத்திரிகையும் அதிகம் விற்பனையான இப்புத்தகத்தைப் பற்றி எவ்வித விமர்சனத்தையும் வெளியிடவில்லை" என ஆதங்கப்படுகிறார்.
கவுசர் மேலும் கூறுகையில், தேசிய அளவிலான முக்கிய ஊடகங்களுக்கு மாற்றீடாக கருதப்படும் தெஹல்கா மற்றும் எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி கூட இப்புத்தகத்தைக் குறித்து ஒரு செய்தியையும் வெளியிடாதது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கிறார்.

ஆனால் மும்பைத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஏ.சி.பி.அசோக் காம்தேவின் மனைவி வினிதா காம்தே எழுதிய 'To the last Bullet' என்ற புத்தகத்தை தேசிய முக்கிய ஊடகங்கள் கொண்டாடுகின்றன.
பயங்கரவாதத்தின் அரசியலையும், புலனாய்வில் ஏற்பட்டுள்ள பழுதுகளையும் சுட்டிக்காட்டும் 'who killed karkare' யை புறக்கணிக்கும் தேசிய பத்திரிகைகளுக்கு காம்தேவின் தனிப்பட்ட வாழ்க்கை அனுபவத்தையும், மும்பை போலீசுடனான கசப்பான அனுபவங்களையும் கூறும் 'To the last Bullet' புத்தகம் விருப்பமானதாக மாறியது எவ்வாறு என்பது தனக்கு புரியவில்லை என்கிறார் வெளியீட்டாளரான மாஸின்.

சமீபத்தில் 'தி ஹிந்து' பத்திரிகையின் விஜயவாடா பதிப்பில் மக்கள் அதிகம் விரும்பும் புத்தகங்களின் பட்டியலில் 'who killed karkare' புத்தகத்தையும் உட்படுத்தியிருந்தனர்.

கர்காரே படுகொலை: பதில் அளிக்க போலீசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!!!


கர்காரே படுகொலை:பதில் அளிக்க போலீசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!!!
மும்பை,அக்.21:மும்பை தாக்குதலின்போது மர்மமான முறையில் கொல்லப்பட்ட மஹாராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படைத் தலைவர் ஹேமந்த் கர்காரேயின் கொலையின் பின்னணியில் ஹிந்துத்துவா சக்திகள் செயல்பட்டுள்ளன என்பதனை சுட்டிக்காட்டி
சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களில் பதில் அளிக்க மும்பை போலீஸ் கமிஷனருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பீகார் மாநில எம்.எல்.ஏக்களான ராதாகாந்த் யாதவும், ஜோதி பெடேக்கரும் சமர்ப்பித்த மனுக்களை பரிசீலித்த உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மும்பை தாக்குதலின்போது காமா மருத்துவமனையில் நடந்த தாக்குதலுக்கு காரணம், அஜ்மல் கஸாபோ அல்லது அபூ இஸ்மாயிலோ காரணமல்ல எனவும், அத்தாக்குதலின் பின்னணியில் அபினவ் பாரத் என்ற ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்புதான் செயல்பட்டுள்ளது எனவும் ராதாகாந்த் யாதவ் தான் அளித்த மனுவில் கூறியுள்ளார்.

2008 ஆம் ஆண்டு மலேகானில் நடந்த குண்டுவெடிப்பில் அதற்கு காரணமான உண்மையான குற்றவாளிகளான அபினவ் பாரத் பயங்கரவாதிகளை கர்காரே கைதுச் செய்திருந்தார். இதற்கு பழிவாங்க அபினவ் பாரத் கர்காரேக்கு குறிவைத்தது.

முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரலான எஸ்.எம்.முஷ்ரிஃப் தனது கர்காரேயைக் கொன்றது யார்? என்ற நூலிலும் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக யாதவ் குற்றஞ்சாட்டுகிறார். இதனைக் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தவேண்டும் என ராதாகாந்த் யாத் கோரிக்கை விடுத்துள்ளார்.

முஷ்ரிஃப் எழுதிய புத்தகங்களில் உண்மைகளல்ல, அபிப்ராயங்கள்தான் உள்ளன என அரசு தரப்பில் வாதாடிய துணை சோலிசிட்டர் ஜெனரல் டாரியஸ் கம்பாட்டா வாதிட்ட பிறகும் நீதிமன்றம் அதனை அங்கீகரிக்கவில்லை.

கர்காரேயின் மரணத்தைக் குறித்து வேறு சிலரும் சந்தேகத்தை முன்வைத்துள்ளதை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், பொறுப்பான போலீஸ் அதிகாரி இதற்கு பதிலளிக்கவேண்டுமென உத்தரவிட்டது.
இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் நவம்பர் 29 ஆம் தேதி இதற்கு பதில் அளிக்கப்படும் என அரசுதரப்பு வழக்கறிஞர் பி.எ.பால் அறிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

ஆஸ்பத்திரிகளில் 24 மணிநேரமும் ஓ.பி.டி திறப்பு

நாட்டின் சகல அரசாங்க ஆஸ்பத்திரிக ளிலும் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவுகளை 24 மணி நேரமும் திறந்து சேவை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.

சுகாதார அமைச்சின் செயலாளருக்கு இந்தப் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

வாரத்தின் ஏழு நாட்களும் வெளிநோயா ளர் பிரிவுகளில் 24 மணி நேர சேவை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

வெளிநோயாளர் பிரிவுகளுக்கு தினந்தோறும் பெருமளவு மக்கள் சிகிச்சைக்காக வருகை தருகின்ற நிலையில் ஆஸ்பத்திரிகளில் நிலவும் நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்கு மேற்படி நடவடிக்கை உதவுமென குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி; இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தி விரைவாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.

வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளு க்குத் தேவையான சிகிச்சைகள், பரிசோத னைகள் அவர்களுக்கான ஆலோசனைகளை வழங்குவதில் கூடிய கவனம் செலுத்த வேண்டுமென குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, தொற்றுநோய் உட்பட சகல நோய்களுக்கும் உடனடி சிகிச்சைகளை வழங்குவதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டு ள்ளார். இது தொடர்பில் சகல ஆஸ்பத்திரிகளின் அதிகாரிகளுக்கும் தெளிவுபடுத்த வேண்டுமெனவும் பணித்துள்ளார்.

நாட்டின் சுகாதாரத்துறை மேம்பாட்டிற் கான முக்கிய நடவடிக்கையாக இத்திட்டம் அமைவதுடன் பல்வேறு நோய்களினால் அவஸ்தைப்படும் நோயாளிகளுக்கு இது பெரும் வரப்பிரசாதமாகவும் அமையும்.

அத்துடன் நாட்டு மக்களின் ஆரோக்கியமான வாழ்க்கையை இதன் மூலம் உறுதிப்படுத்தவும் முடியும்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சுகாதார, அமைச்சின் செயலாளர் 24 மணித்தியாலமும் வெளி நோயாளர் பிரிவை திறந்து வைத்து சேவைகளை வழங்கும் யோசனை ஏற்கனவே இருந்ததாக குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் பணிப்புரை மற்றும் வழிகாட்டல்களுக்கமைய இத்திட்டத்தை செயற்படுத்துவதுடன் ஆரம்பத்தில் முக்கிய பெரியாஸ்பத்திரிகளில் இதனை நடைமுறைப்படுத்தவும் அடுத்த கட்டமாக அதனை சகல ஆஸ்பத்திரிகளுக்கும் விரிவுபடுத்த உத்தேசித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் டொக்டர்கள், மருந்தக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட சகல தரப்பினருடனும் கலந்துரையாடி விரைவில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதால் அவர் நாடு திரும்பியதும் இந்நடவடிக்கைகள் முனைப்புப் பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது. (ஸ)


ஆர்ஜென்டினா காற்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக மீண்டும் மாரடோனா .

ஆர்ஜென்டினா காற்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக, மீண்டும் மரோடோனா நியமிக்கப்படலாம் எனவும் தெரியவருகிறது. இந் நியமனத்துக்கு அவர் விருப்பம் தெரிவித்திருப்பதாகவும், அந்நாட்டின் அரசியற் பிரமுகர்கள் பலரும் இந்தக் கோரிக்கையைத் தனக்கு விடுத்திருப்பதனால், அப் பொறுப்பினைத் தான் மீண்டும் நிச்சயம் ஏற்றுக் கொளவதாகவும் தெரிவித்தார்.

தென்னாபிரிக்காவில் நடந்து முடிந்த உலகக் கோப்பைக் காற்பந்தாட்டப் போட்டிகளில், ஆர்ஜென்டினா அணி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, எழுந்த சர்ச்சசைகளினால், அந்த அணியின் பயிற்சியாளராக இருந்த முன்னாள் காற்பந்தாட்டச் சாம்பியன் மாராடோனா நீக்கப்பட்டிருந்தார்.

இவ்வாறு அவர் நீக்கபட்டதற்கு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியும் எதிர்ப்பும் கிளம்பியிருந்ததது குறிப்பிடத்தக்கது.

டோனி பிளேயர் மனைவியின் தங்கை இஸ்லாத்தை நோக்கி!

ஈரானுக்கு சில நாட்கள் சென்றிருந்த டோனி பிளேயர் மனைவியின் தங்கை இஸ்லாம் மாதத்தில் கொண்ட ஈடுபாடுகளின் காரணமாக மதம் மாறி விட்டார் எனத் தெரிய வந்துள்ளது. ஊடகவியலாளராகவும் ஒளிபரப்பாளராகவும் பணியாற்றி வரும் 43 வயதான லாரன பூத் செர்ரி பிளேயரின் தங்கை.

 இவர் தற்போது வெளியில் செல்லும் போது பர்தா அணியாமல் செலவதில்லையாம். தினமும் 5 முறை மறக்காமல் இறை வழிபாடும் செய்து வருகிறாராம்.

 தற்போது ஈரானில் இருக்கும் அவர் 6 வாரங்களுக்கு முன்னர் கோம் நகரில் உள்ள பாத்திமா அல்-மாஸுமெஹ் என்ற புண்ணிய தலத்திற்கு சென்றிருந்த போது அங்கு சிறிது நேரம் உட்கார்ந்திருக்கையில் ஏதோ ஒரு தெய்வீக ஒளி தன் மீது பரவியதை உணர்ந்தாராம்.

 அதன் பின்னரே இந்த முடிவுக்கு வந்துள்ளதாக பிரிட்டன் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். தற்போது இவர் பன்றிக்கறி சாப்பிடுவதில்லையாம். 45 நாட்களாக மது பானங்கள் ஏதும் அருந்தவில்லையாம்.

 வாழ்க்கையிலேயே இதுவரை அப்படி இருந்ததில்லை என்றும் கூறுகிறார். தினமும் குரான் படிக்கிறாராம். பிரிட்டன் வந்த உடன் முதல் வேலை மதம் மாறுவது தான் என்கிறார் லாரன பூத்.