கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளில் வழமைபோல் கஹட்டோவிடாவும் சிறப்பிடம்

கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று வெளியிடப்பட்டிருந்தது. இப்பெறுபேறுகளில் வழமைபோல் கஹட்டோவிடாவின் இரு பாடசாலைகளும் சிறந்த பெறுபேற்றைப் பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது. கஹட்டோவிடாவின் இவ்வருட சிறந்த பெறுபேறாக 7A , 2B காணப்படுகிறது. இப்பெறுபேறை கஹட்டோவிட முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்தில் கல்வி கற்கின்ற மாணவி ஹிபா மதீன் அவா்கள் பெற்றுள்ளாா். 


அல் பத்ரியாவின் பெறுபேறு 7A 1B  1C ஆகும். இப்பெறுபேற்றையும் ஒரு மாணவியே பெற்றுள்ளார். அத்தோடு மாணவா்களில் சிறந்த பெறுபேறாக 6A, 2B என்ற பெறுபேறு பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

எமது கஹட்டோவிட மண்ணின் மைந்தா்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று ஊருக்கும் நாட்டுக்கும் சமூகத்துக்கும் சேவையாற்ற எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக!

சவுதி மன்னர் சல்மானின் தொடர் நெருக்கடிகளுக்கு தாக்குபிடிக்க முடியாமல் இஸ்லாத்தை விமர்ச்சித்த குற்றத்திற்க்கு சுவீடன் பகிரங்க மன்னிப்பு கோரியது!

இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை அண்மையில் கடுமையாக விமர்ச்சித்த சுவீடன் சவுதி அரேபியா கொடுத்த நெருக்கடிகளுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரியது
இது தொடர்ப்பாக சுவீடன் மன்னர் சவுதி மன்னர் சல்மானுக்கு எழுதியுள்ள கடிதத்தில்


சவுதி மற்றும் சுவீடனிடையே ஏர்பட்ட பிரச்சனைகளுக்காக வருந்துவதாகவும் மன்னிப்பு கோருவதாகவும் கூறியுள்ள அவர் சவுதி உடன் நட்புறவை விரும்புவதாகவும் இரு நாட்டின் உறவுகள் பலமிக்கதாக மாற வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்

அது போல் சுவிடன் பிரதமர் இன்று பத்திரியைாளர் சந்திப்பில்
இஸ்லாமிய சட்டங்களை மதிப்பதிலும் இஸ்லாமிய குற்றவியல் நடைமுறைகளை செயல் படுத்துவதிலும் தீவிரம் காட்டும் சவுதி மன்னரின் உணர்வுகளை மதிப்பதாகவும் இரண்டு நாடுகளின் உறவில் ஏர்ப்பட விரிசலை சரி செய்ய வேண்டும் என்றும் நடந்த விசயங்களுக்காக சுவீடன் வருந்துவதாவும் மன்னிப்பு கோருவதாகவும் கூறியுள்ளார்


நன்றி  : மெளலவி சையது அலி பைஜி.

பொன்சேகாவுக்கு இன்று பதவியுயர்வு

முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, ஃபீல்ட் மார்ஷல் தரத்துக்கு இன்று 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பதவி உயர்த்தப்படவுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அமைச்சர்கள் மற்றும் முப்படை பிரதானிகள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது முப்படையினரின் அணிவகுப்பு மரியாதை இடம்பெறவுள்ளதுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஜெனரல் சரத் பொன்சேகா, ஃபீல்ட் மார்ஷல் தரத்துக்கு பதவியுயர்த்தப்படவுள்ளார்.
உலகில் இராணுவ அதிகாரி ஒருவரின் மிக உயர்ந்த பதவியாக ஃபீல்ட் மார்ஷல் காணப்படுகின்றது.

இந்தியா, பாகிஸ்தான் உட்பட சில் நாடுகளில் மாத்திரமே இந்த பதவி காணப்படுவதுடன் இந்த பதவிக்கு தெரிவாகும் முதலாவது இலங்கையர் சரத்பொன்சேகா என்பது குறிப்பிடத்தக்கது.

வானையைச் சோ்ந்த சகோதரர் பாரூகு் அவர்கள் இன்று காலமானார்.

வானையைச் சோ்ந்த  சகோதரர் பாரூகு் அவர்கள்  இன்று  காலமானார்.  இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் ஷபீக் , டிலிஷாத்  ஆகியோரின் தந்தையும்,  உம்மு சபீலா அவர்களின் கனவரும் ஆவார். அனனாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை ( 21.03.2015)   நல்லடக்கம் செய்யப்படும்.

   . اَللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مَدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ اْلأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ [وَعَذَابِ النَّار  

இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள்புரிவாயாக! இவருக்கு சுகம் அளிப்பாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவரது தங்குமிடத்தை மதிப்புமிக்கதாக ஆக்குவாயாக! மேலும் விசாலமானதாக இவரது நுழைவிடத்தை ஆக்குவாயாக! வெண்மையான ஆடை அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்துவதுபோல் இவரை இவரது தவறுகளிலிருந்து தண்ணீராலும் ஆலங்கட்டி நீராலும் பனிக்கட்டியாலும் தூய்மையாக்குவாயாக! இவரது இல்லத்தை விட சிறந்த இல்லத்தை (மறுமையில்) அளிப்பாயாக! இவரது துணையைவிட சிறந்த துணையை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இவரைச் சுவனத்தில் நுழையச் செய்து கப்ருடைய வேதனை, நரகவேதனை ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவாயாக! 

பசிலின் வெற்றிடத்திற்கு சுதந்திரக்கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளராக அர்ஜுனா - சந்திரிக்காவும் பங்கேற்பு (படம்)

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளராக,  துறைமுக மற்றும் கப்பல் துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வெற்றிடத்துக்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

எத்தியோப்பிய மக்களுக்கு குடிநீர் கிணறுகளை நிர்மாணித்து வழங்கிய இலங்கை அல்-கிம்மா நிறுவனம். (படங்கள்)


mmmm
ஆபிரிக்காவில் அல்-கிம்மா
கல்குடா அல்-கிம்மா நிறுவனமானது, இலங்கையின் பல பகுதிகளிலும் தங்களது அபிவிருத்திப்பணிகளைச் செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதன் தொடரில், தங்களது சேவையினை இலங்கை மற்றுமன்றி இந்தியா, ஆபிரிக்கா போன்ற நாடுகளிலும் மேற்கொள்வதற்கான திட்டங்களை செயற்படுத்தி வருகின்றனர்.
அண்மையில் ஆபிரிகாவின், எதியோபிய நாட்டில் இருக்கக்கூடிய, குடிநீர் தேவையுடையவர்களுக்கு கிணறுகள் வழங்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் பயனாக, இன்று 16.03.2015 திங்கட்கிழமை எதியோபியாவைச் சேர்ந்த குடும்பங்களுக்கு அல்-கிம்மா நிறுவனத்தினால் குடிநீர்க்கிணறு நிர்மாணிக்கப்பட்டு அன்பளிப்புச் செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, மேலும் பல குடும்பங்களும் பயனடையும் வகையில், வேலைத்திட்டங்களை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ம் திகதியளவில் நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.எம்.எஸ். ஹாறூன் (ஸஹ்வி) அவர்கள் இந்தியா சென்று, அல்-கிம்மாவின் வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கான சாத்தியம் குறித்து ஆராயவுள்ளதுடன், முதற்கட்டமாக குடிநீர் கிணறு ஒன்றையும் அமைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
INFO TECH SYSTEM
M.P.C.S. Road, Oddamavadi.
 madawala news

ஜனவரி 08 திகதி இரவு மகிந்தவுக்கு பயந்து குருநாகல் பிரதேசத்தில் தங்கியிருந்தேன்..!! ஜனாதிபதி மைத்திரி

எனது குடும்ப உறுப்பினர்களினது பாதுகாப்பு காரணங்களுக்காக ஜனாதிபதி தேர்தல் அன்று இரவு நான் குருணாகல் பிரதேசத்தில் உள்ள நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் வைத்து பி.பி.சி செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்திருந்தால் என்னைக் கைது செய்து, குடும்ப உறுப்பினர்களை அழிக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச திட்டமிட்டிருந்தார்.
தேர்தல் முடிவுகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தால் நான் உட்பட எனது குடும்ப உறுப்பினர்கள் எவரும் உயிருடன் இருந்திருப்போமா என்பது தெரியவில்லை. அதுதான் மஹிந்த ராஜபக்சவின் ஜனநாயகமாகும். ஆனால் அவர் இப்பொழுது ஜனநாயகம் குறித்து பேசிக்கொண்டிருக்கிறார்.
அன்றைய தினம் நான் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்திருந்தால் எத்தனை பேர் கொல்லப்பட்டிருப்பார்கள், எத்தனை பேரின் கை கால்கள் உடைக்கப்பட்டிருக்கும், எத்தனை பேரின் தொழில்கள் இழக்கப்பட்டிருக்கும் என்பது எனக்கு தெரியாது. அப்படி இல்லை என்றால் மகிந்த ராஜபக்ச எனது முழு குடும்பத்தையும் சிறைப்படுத்தி அழித்திருப்பார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மகிந்தவை பிரதமராக்குமாறு கோரிக்கைகள் கிடைக்கவில்லை: ஜனாதிபதி
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதமர வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை நியமிக்குமாறு இவ்வாறான ஓர் கோரிக்கையை யாரும் இதுவரையில் தன்னிடம் முன்வைக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் பி.பி.சி செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறான கோரிக்கை அல்லது யோசனையை முன்வைத்தால் அன்று நான் உரிய பதிலை அளிப்பேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இதயம் தாமே என மஹிந்த தெரிவித்துள்ள கருத்து தொடர்பாக பி.பி.சி சேவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வினவியதற்கு உண்மையில் கட்சியின் இதயம் மக்களே என குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இதயமும் மூளையும் மக்களும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுமே என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஆடம்பரத்துக்கு அடிமையாகாத ஜனாதிபதி குடும்பம்: லண்டன் அனுபவம்

பிரித்தானிய மகாராணியின் அழைப்பையேற்று பொதுநலவாய தின நிகழ்வுகளில் கலந்து கொள்ள தனது பாரியார் மற்றும் பிரிதிநிதிகள் குழுவுடன் கடந்த வார இறுதியில் லண்டன் விஜயம் செய்து நாடு திரும்பியுள்ளது. இந்நிலையில், இரு ஜனாதிபதிகளின் அண்மைய லண்டன் விஜயங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசத்தை மாத்திரமன்றி மைத்ரி குடும்பம் ஆடம்பரத்துக்கு அப்பாற்பட்ட நிலையில் வாழ்ந்து வரும் குடும்பம் என்பதையும் கண்கூடாகப் பார்க்க முடிந்தது.
மஹிந்த ராஜபக்ச வந்த போது அவர் மாத்திரம் ஒரு நாள் தங்கியிருப்பதற்காக செலவு செய்ததன் ஒரு சிறு பகுதியே அனைத்து பிரமுகர்களும் தங்கியிருப்பதற்கு செலவாகியிருந்தமையும் வந்திருந்த பிரமுகர்கள் குழுவும் ஜனாதிபதியின் கொள்கைகளுக்கு ஏற்பவே வீண் விரயத்தை விரும்பித் தவிர்ப்பவர்களாகவும் இருந்தமை முக்கியமான விடயமாகும். இந்நிலையில் ஜனாதிபதியின் எளிமையான செயற்பாட்டைக் கண்டு இரு பாதுகாப்பு பிரிவினர்களிடம் இரு வேறு அனுபவத்தைக் கேட்டறிந்தோம்.

ஜனாதிபதி
முதலாவது, ஜனாதிபதியுடனேயே வருகை தந்திருந்த அவரது பிரத்யேக பாதுகாப்புக்குழு அடுத்தது பிரித்தானிய அரசாங்கத்தினால் அவருக்கு வழங்கப்பட்டிருந்த விசேட பாதுகாப்பு குழு. இந்த இரு அணிகளிடமும் வெ வ்வேறு அனுபவங்கள் இருந்தன. இலங்கைப் பாதுகாப்புக் குழுவைப் பொறுத்தவரை அவர்கள் ஜனாதிபதியிடம் இன்னும் நெருங்கிப் பழகுவதற்குத் தயங்குவதோடு முன்னாள் ஜனாதிபதியின் அதிகார ஆளுமையிலிருந்து இன்னும் விடுபாடாத சூழ்நிலையையே காணக்கூடியதாக இருந்தது. அதேவேளை பிரித்தானிய பாதுகாப்புக் குழுவினர் தமது காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருந்தாலும் ஒரு வகை ஆச்சரியத்துடனேயே காணப்பட்டார்கள்.
இதில் பிரித்தானிய பாதுகாப்பு ஊழியர்களிடம் தனித்தனியாக ஒரே கேள்வியைக் கேட்டுப் பார்த்தோம். அதாவது இதற்கு முன் இருந்த ஜனாதிபதியைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா அல்லது பார்த்திருக்கிறீர்களா என்பது தான் அது. அதில் மூத்த உறுப்பினர் ஒருவர் ஆம் நான் அவர் வந்த போதும் பாதுகாப்பு கடமையில் இருந்தேன் என்றார். அப்படியானால் அவருக்கும் இவருக்கும் வித்தியாசம் ஏதாவதிருக்கிறதா என கேட்க, இவரா ஜனாதிபதி என்று கேட்கும் அளவுக்கு மிக மிக எளிமையான மனிதராக இருக்கிறாரே என்று அவர் கூற இன்னொரு அதிகாரி ஆம்.. நானும் அவரைப் பற்றி அப்படித்தான் கேள்விப் பட்டிருக்கிறேன் என்றார்.
இத்தனைக்கும் இந்த சம்பாசனை இடம்பெறும் போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஒரு மிகச் சாதாரண சராசரி இளைஞனைப் போன்று பந்தா இல்லாமல் அவ்வப் போது அவ்வழியே நடந்து செல்வதும் எல்லோரையும் பார்த்து புன்முறுவலுடனேயே ஒவ்வொரு தடவையும் அவரைப் பார்த்து எழ முனையும் பாதுகாப்பு அதிகாரியை ‘உட்காரப்பா’ என்று சொல்வது போல் சைகை செய்வதுமாக தனது கடமைகளை செய்து கொண்டிருந்தார்.

முதற்பெண்மணி
இது ஒரு புறமிருக்க, அவரது மனைவி திருமதி மைத்ரிபால சிறிசேனவோ தன் சமையல் கடமைகளை செய்ய முடியவில்லையே என வருத்தத்துடன் முதல் நாளும் பின் அவ்வப்போது தன் கையாலேயே சமைக்கக் கூடிய வாய்ப்பையும் பெற்றதனால் தானுண்டு தன் கடமையுண்டு என்று இருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அதற்கும் மேலாக அவ்வப்போது ஜனாதிபதியுடன் வெளியில் செல்ல நேர்ந்தால் செல்லும் வழியில் சில வேளைகளில் ஜனாதிபதியை ஒரு தடவையேனும் பார்க்க வேண்டும் எனும் ஆவலுடன் ஹோட்டல் வரவேற்புப் பகுதியில் குவிந்திருப்போரைக் கண்டால் ஜனாதிபதி அங்கு சென்று அவர்களோடு உரையாடி விட்டு வரும் வரையும் மிகப் பொறுமையாக ஏதாவது ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்ததைக் கண்டு எமக்கும் ஆச்சரியமாக இருந்தது.
ஒரு தடவை அவரோடு உரையாடிக்கொண்டிருந்த ஊடகவியலாளர் இர்பான் இக்பால் மூலமாக புகைப்படம் ஒன்றை எடுப்பதற்காக அனுமதி கேட்ட போது வெட்கத்தோடு புன்னகைத்துக் கொண்டு வேண்டாம் என்று கூட சொல்ல முடியாமல் அவர் தயங்கிக் கொண்டே இருந்ததை அவதானித்த போது அவரிடம் இருந்த எளிமையை நினைத்து ஆச்சரியமாகவே இருக்கிறது. இறுதியில் நேற்று மாலை ஜனாதிபதி விமான நிலையம் நோக்கிப் புறப்பட்டுச் செல்லும் போது அங்கு 20 பேர் வரை கூடியிருந்த சூழ்நிலை காணப்பட்டது.

ஜனாதிபதியின் புதல்வர்
ஜனாதிபதி உட்பட அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் மத்திய மாகாணசபை உறுப்பினர் அசாத் சாலியும் புறப்பட்டுச் சென்ற பின் அங்கு எங்கள் குழுவில் இருந்த மூவருடன் சேர்த்து பத்துப் பேர் நின்றிருந்தோம். சில நிமிடங்களில் கலைந்து செல்ல மெதுவாக நகர்ந்த போது எமது அருகில் எங்களோடு ஒருவராக மிகச் சாதாரணமாக ஜனாதிபதியின் மகனும் தனது நண்பர்கள் இருவருடன் நடந்து வந்தார். பின், புகையிரத நிலையம் வந்ததும் சென்று வருகிறோம் என ஒரு நண்பனாக அவரும் விடைபெற்றுச் சென்ற இந்த அனுபவங்களை இலங்கையின் முதற்குடும்பம் பற்றி வாசகர்களும் அறிந்து கொள்ள இங்கு பதவிலிடுகிறோம்.

இங்கு காணப்படும் படங்கள் கடந்த 10ம் திகதி புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களை தூதரக ஏற்பாட்டில் சந்திப்பதற்காக வருகை தந்திருந்த ஜனாதிபதி தனக்கான அழைப்பு வரும் வரை தனியாக பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டிந்த இடத்தில் அமர்ந்திருந்த வேளையில் எடுக்கப்பட்டவையாகும். எமது நிருபரின் வேண்டுகோளை மறுக்காது ஒத்துழைத்ததோடு எந்தவொரு கட்டத்திலும் அணுகி உரையாடக்கூடிய சாதாரண நபராகவே அவர் நடந்துகொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

சோனகர்.கொம்