கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ஐரோப்பாவின் பெரும் போரும் இஸ்லாமிய எழுச்சியும்.

( 2001 நவம்பர் முதல் - 2011 டிசம்பர் வரை 10 ஆண்டுகள். )

நவீன சிலுவை யுத்தத்திலும் இஸ்லாமே வென்றது.....
இந்த பூமி பந்தில் அமெரிக்கா தன் மொத்த ஆதிக்கத்தையும் நிலை நாட்டிட தீட்டிய திட்டங்கள் 10 ஆண்டுகள் கடந்துவிட்டன....

அமெரிக்கா தான் தீட்டிய திட்டங்களுக்கு பல்வேறு பெயர்களை வைத்தது.
அவை:
1. புதிய அமெரிக்க நூற்றாண்டு திட்டம்...
( Project for new american century )
2. கலாச்சாரங்களின் மோதல்கலும் புதிய உலகின் உருவாக்கமும்....
( Clash of civilization and the remaking of world order )
3. நவீன சிலுவை யுத்தம்.......
( Modern crusad)
4. தீவிரவாதத்திற்கு எதிரான உலகலாவிய யுத்தம்......
( Global war on terror )

இப்படி பல்வேறு போர்களை இஸ்லத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் பிரகடனப் படுத்தியது அமெரிக்கா...
இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் தினிக்கபட்ட இந்த போர்களுக்கான திட்டம் வெகு நாள்கலுக்கு முன்னரே தீட்டப்பட்டு விட்டன....
ஆனால் மொத்த உலகமும் செப்டம்பர் 11, 2001 அன்று அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் இடிக்கபட்ட பின்னர்தான் இதர்க்கான திட்டம் தீட்ட பட்டதாக நம்பி கொண்டிருக்கிறது..........
உண்மையில் இந்த திட்டங்கள் 1915 போடப்பட்டு விட்டன.
2001ல், இஸ்லாமிய உலகை அச்சத்தாலும் பீதியாலும் ஆட்டிப்படைத்து அழிக்க போகின்றோம் என சண்டை பிரகடனம் செய்த அமெரிக்கா அதற்கு பக்க துனையாக பரிவாரங்களை அனுப்பி பணிவிடை செய்த ஐரோப்பிய நாடுகள் போன்றவை சாதித்தது என்னவென்று இங்கே ஒரு ஆய்வுக்கு உட்படுத்துவோம்......
2001 - 2011 வரை நடந்தது என்ன?
இந்த 10 ஆண்டுகளில் அமெரிக்கா இஸ்லாமிய உலகை ஆக்கிரமித்து அவற்றில் மேலை நாட்டு கலாச்சாரத்தை - சுருக்கமாக சொன்னால் கிருஸ்த்துவத்தை தினிப்பதில் ஒரு மகத்தான வெற்றியை பெற்றிருக்க வேண்டும்...
பொட்டில் அறைந்தாற்ப்போல் சொல்லிட வேண்டும் என்றால் :
இஸ்லாமிய உலகில் ஒரு தலைமுறை தோன்றும் அதில் வாழும் இளைஞர்கள் கிருஸ்த்துவர்களாக இருப்பார்கள் என்ற நிலையை உருவாக்கியிருக்கவேண்டும்...
ஏனென்றால் 9/11, என அடையாள படுத்தப்படும் நாட்களுக்கு பின் முஸ்லிம் நாடுகளில் கிருஸ்த்துவ பிரச்சாரமே கொடி கட்டி பறந்தன...
ஆக்கிரமித்த நாடான ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் பைபிளின் வசனங்களை பொறித்த துப்பாக்கிகளைத்தான் அமெரிக்கா - ஐரோப்பிய படைகள் பயன்படுத்தின....
அவற்றை பற்றி அந்த வீரர்களிடம் கேட்ட போது அவர்கள் இப்படி பதில் சொன்னார்கள் :
``IT IS A MISSION FROM GOD. NOT FROM OUR GOVERNMENT``
`` இது ( ஆஃப்கான் ஆக்கிரமிப்பு ) எங்கள் கடவுள் எங்களுக்கு தந்த இலச்சியம் அல்லாமல் எங்கள் அரசாங்கம் எங்களுக்கு தந்த இலச்சியம் அல்ல ``
(ஆதாரம் : AL - JAZEERA, 5TH MAY 2009, FOOTAGE )
ஈராக்கினுல் ஏன் படையெடுத்து சென்றாய் நீ சொன்னது போல் பேரழிவு ஆயுதங்கள் எதுவும் சதாம் ஹுசைனின் ஈராக்கினுல் இல்லையே?
என செருப்படி புகழ் புஷ் இடம் கேட்ட போது அவர் சொன்னார்
``THE COMMENT IS PROM THE HEAVEN``
`` இந்த உத்தரவு ( ஈராக்கின் ஆக்கிரமிப்பு ) இறைவனிடமிருந்து எனக்கு வந்தது என்றார்.....``
இதனை இதனினும் விளக்கமாக `` வைகறை வெளிச்சம் `` பிப்ரவரி 2010 - இதழில் தந்திருக்கின்றோம. அதே போல் ஆஃப்கான் சென்று தாலிபான்களிடம் சிக்கி வெளிவந்து அந்த தாக்கங்களால் இஸ்லாத்தை ஏற்று கொண்ட யுவானி ரிட்லியின் `` தாலிபானின் பிடியில் `` என்ற நூலிலும் தந்திருக்கின்றோம்... வாசகர்கள் அவற்றை அவசியம் படிக்கவேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.. இன்ஷா அல்லாஹ்.....
அமெரிக்கா தன் ஆதிக்கத்தை உலகெங்கும் நிலை நாட்டிட திட்டம் வகுத்து தந்த `` சமுவேல் - பி - ஹண்டிண்டன் `` இப்படி கூரினான்...
``மேலை நாட்டு நாகரீகம்தான் நாகரீகம் மற்றவையெல்லாம் அழிக்கப்பட வேண்டும் அவை அநாகரீகம் இத உலகை இரண்டாக பிரிக்க வேண்டும் ஒன்று மேலை நாடுகள் இரண்டு அவை அல்லாத நாடுகள்``
இப்படியெல்லாம் திட்டங்களை தீட்டியவர்களின் நிலை 10 ஆண்டுகளுக்கு பின் என்னவாயிற்று????
எந்த இஸ்லாத்தை அழிக்கவேண்டும் என்று கங்கனம் கட்டி கொண்டு நின்றார்களோ..படை திரட்டி வந்தார்களோ அந்த இஸ்லாம் இவர்களின் நாடுகளை ஆலும் கொள்கையாக ஆகிவிடும் அமோக வெற்றியை ஈட்டி நிற்கின்றது.....
`` நிராகரிப்பாவர்களே நீங்கள் வெற்றியின் மூலம் தீர்ப்பை தேடிக்கொண்டிருந்தால் நிச்சயமாக அவ்வெற்றி மூஃமின்களுக்கு வந்து விட்டது இனியேனும் நீங்கள் தவறை விட்டு அது உங்களுக்கு நலமாக இருக்கும்..... நீங்கள் மீண்டும் போருக்கு வந்தால் நாங்களும் வருவோம், உங்களுடைய படை எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அது உங்களுக்கு எத்தகைய பயனும் தராது. மெய்யாகவே அல்லாஹ் மூஃமின்களோடுதான் இருக்கின்றான்.
( என்று மூஃமிங்களே நீங்கள் கூரிவிடுங்கள் ) அல்-அன்ஃபால் ; 19..
``SAHRIA THE THERAT TO AMERICA``
``ஷரீஅத் அமெரிக்காவை அச்சுறுத்துகின்றது``
ஷரீஅத் அமெரிக்காவை அச்சுறுத்த
முடியுமா?
இப்படி ஒரு அறிக்கை அண்மையில் வெளிவந்துள்ளது...
இந்த அறிக்கை அதாவது ``SAHRIA THE THERAT TO AMERICA`` என்ற அறிக்கையை தயாரித்தது ஏதோ ஒரு தனி மனிதரோ அல்லது ஏதேனும் ஆராய்ச்சி நிறுவனமா?? என்றால் இல்லை....
அமெரிக்காவின் இராணுவ தலமையகம் ``பெண்டகன்`` தான் அந்த அறிக்கையை தயார் செய்திருக்கின்றது...
இதில் அங்கம் வகித்தவர்கள் அனைவரும் அமெரிக்காவின் எதிர்காலத்தை மட்டுமல்ல எதிர்வரும் நாள்களில் அமெரிக்கா எங்கெங்கெல்லாம் போர் தொடுக்க வேண்டும் என்பதையெல்லாம் வகுத்து தருபவர்கள்..
ஷரியத் அமெரிக்காவை அச்சுறுத்த முடியுமா......?
அமெரிக்காவை அச்சுருத்தவேண்டுமென்றால் அமெரிக்கா செய்து தயாராக வைத்திருக்கும் ஆயுதங்களை விஞ்சிடும் வண்ணம் உள்ள ஆயுதங்கள் அமெரிக்காவை அச்சுருத்தலாம்....
அல்லது
அமெரிக்காவை விஞ்சும் விஞ்ஞான வளர்ச்சியை பெற்ற ஒரு நாடு அமெரிக்காவை அச்சுறுத்தலாம்..........
ஆனால்
ஷரியத் எப்படி அமெரிக்காவை அச்சுறுத்த முடியும்????
400 பக்கங்கள் கொண்ட பெண்டகனின் அறிக்கை சொல்கிறது ஷரியத்தால் அமெரிக்கா அச்சப்பட்டு நிற்கின்றது என்று.......
ஆமாம்......!!!!
அமெரிக்காவில் மிகவும் வேகமாக வளர்ந்து மார்கம் இஸ்லாம் !
அமெரிக்காவில் இஸ்லாம் வேகமாக வளர்வதற்கு காரணம் அமெரிக்காவில் சென்று குடியேறிய முஸ்லிம்கள் அல்ல..
மாறாக அமெரிக்க மக்களே இஸ்லாத்தை அதிக அளவில் ஏற்று வருகிறார்களாம்......
இந்த மக்கள் அமெரிக்காவின் மேலை நாட்டு நாகரிகத்தை தூக்கி வீசி விட்டு இஸ்லாமிய நாகரிகத்தையும் , இஸ்லாமிய பண்பாட்டையும் விறும்பி பின்பற்றி வருகிறார்களாம்.........
இந்த முஸ்லிம்கள் அதாவது அமெரிக்க மக்களாகிய இவர்கள் ஷரியத் சட்டங்கள் தாம் நமது வாழ்வின் பிரச்சனைகளை தீர்த்திடும் வல்லமை பெற்றவை.. ஷரியத்தை முழுமையாக பின்பற்றிடும் போதே வாழ்க்கை இயற்கையோடும் மனிதனின் இயல்போடும் ஒத்துபோகும் என்பதை உளப்பூர்வமாக நம்புகிறார்கள்..
ஆகவே இனி ஷரியத் சட்டங்களே அமெரிக்க குடிமக்களாகிய நம்மை ஆட்சி செய்யும் சட்டமாக ஆக வேண்டும் என விறும்புகிறார்களாம்...
அல்லாஹு அக்பர்......அல்லாஹு அக்பர்.........அல்லாஹு அக்பர்..............
வெறுமனே விரும்புவதோடு நின்றுவிடவில்லையாம் அதற்காக அவர்கள் தங்களால் இயன்றதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்களாம்.............
இதனால் நடப்பிலிருக்கும் அமெரிக்க அரசியல் சாசன மரபுகள் வெளியேற்றப்பட்டு அந்த இடத்தில் ஷரியத் சட்டங்கள் அமற்ந்து கோலோச்சுமாம்..........
இப்படியெல்லாம் அமெரிக்காவின் எதிர்காலத்தை கனிக்கும் பெண்டகன் என்ற அமெரிக்க இராணுவத்தின் அறிக்கை இன்னொன்றையும் குறிப்பிடுகின்றது...
அது.......!!!!!!
அமெரிக்காவுக்கு கொள்கை வகுத்து தந்தவர்கள் ஒரு பெரும் தவறை செய்து விட்டார்களாம்..........
அதுவென்ன அவர்கள் செய்த பெரிய தவறு??????
இதற்கும் இஸ்லாத்திற்கும் என்ன சம்பந்தம்???????????
உலகமெல்லாம் தீவிரவாதத்திற்கு எதிறாக போர் தொடுக்கின்றோம் என அல்லும் , பகலும் உற்று பார்த்து கொண்டிருந்தவர்கள் அமெரிக்காவினுள் என்ன நடக்கிறது என்பதை காணத் தவறி விட்டார்களாம்......
உண்மையில் அமெரிக்காவின் தீவிரவாதத்திற்கு எதிரான போர் இஸ்லாத்திற்கு எதிறான போர்தான். இதை நாம் அடிக்கடி வாசகர்களுக்கு நினைவு படுத்தி வருகின்றோம்.........
ஆனால் நமது ஊடகங்கள் இப்போது தான் அந்த உண்மையை ஒத்து கொள்கின்றன.... ஆனாலும் சாக்குபோக்கான சொற்களையே இதற்கு பயன்படுத்துகின்றன...
எடுத்து காட்டாக பத்து ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்காவின் நிலையை விவரிக்க வந்த ``பிரண்ட் லைன்`` ஏடு இப்படி குறிப்பிடுகின்றது...
`` THE WORLD HAS PAID A HEAVY PRICE FOR THE UNITED STATES GLOBAL WAR ON TERROR IN THE TEN YEAR AFTER THE AL - QAIDA ATTACK OF SEPT 11, 2001 ``
அதாவது பத்தாண்டுகளுக்கு பின் செப்டம்பர் 11,2001 அல் கொய்தா தாக்குதலுக்கு பின் உலகம் ஒரு பெரும் விலையை தந்திருக்கின்றது அமெரிக்காவின் தீவிரவாததிற்கு எதிரான உலகளாவிய போரில்..........
அல் கொய்தா என்ற அமைப்பு அமெரிக்காவின் கம்யூட்டர்களில் தான் இருக்கின்றது......நிச்சயமாக அது இந்த உலகில் இல்லை...
10 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க குடிமக்களுக்கு நன்றாக புரிந்துவிட்டது...
9/11 என்பது நமது உளவுத்துறையினரின் கையிருப்பு..
இது உலகிலே ஒரு பெரும்போரை - நவீன சிலுவை யுத்தத்தை - நாகரிகங்களின் மோதலை - அமெரிக்காவின் நூற்றாண்டிற்கான திட்டத்தை தொடங்குவதற்கு தமது நாடு செய்த ஏற்பாடு தான் என்று....
இந்த 10 ஆண்டுகளின் பெறும் போரின் இறுதியில் அமெரிக்காவினர் உலகிலிருந்து இஸ்லாத்தை துடைத்திட இயலவில்லை... மாறாக அது இஸ்லாத்தின் கைகளுக்குள் வந்துக் கொண்டிருக்கின்றது.....
இப்போது பெண்டகனின் - அமெரிக்க இராணுவ தலைமையகத்தின் ஒரு பகுதியினர் தங்களுடைய முழு கவனத்தையும் ஷரியத்தின் பக்கம் திருப்பியிருக்கிறார்கள்......
விளக்கமாக சொன்னால் ஷரியத் சட்டங்களை மக்கள் மன்றத்தில் பெறும் பேய் என காட்டிட முயற்சிகள் மேற்க்கொண்டு வருகிறார்கள்...
`` THE LEGAL POLITICAL - MILITARY DOCTRINE KNOWN WITH ISLAM AS SHARIAH ``
அதாவது ஷரியத் சட்டம் , அரசியல், இராணுவம் இத்தனையும் உள்ளடக்கியது..
இதனைத்தான் இஸ்லாத்தில் ஷரியத் என அழைக்கிறார்கள்...
இப்படி அனைத்தையும் உள்ளடக்கிய ஷரியத் ஒரு `` TOTALITARIAN THREAT `` அதாவது சர்வாதிகார ஆபத்து என கூறிகொண்டிருக்கிறார்கள்.....
ஆதாரம் : ( PREFACE SHARIA THE THREAT TO AMERICA ).
ஷரிஅத் - ஐ ஏன் இவர்கள் ஒரு சர்வாதிகார ஆபத்து என்கிறார்கள்???????
இந்த கேள்விக்கு இந்த 400 பக்க பெண்டகன் ஆய்வில்,
இப்படி விளக்கம் கூருகின்றனர் :
`` ஷரியத் என்ற சொல்லை `` இதுதான் பாதை `` என்று மொழி பெயர்க்கிறார்கள்.
உண்மையில் ஷரியத் என்பது ஒர் முழுமையான சட்ட வடிவம் என்பது மட்டுமல்ல அது ஓர் முழுமையான அரசியல் அமைப்பும் கூட.
ஷரியத் என்பதில் ஆன்மீகம் நிச்சயமாக உண்டு...
அதை வைத்துக் கொண்டு அது மேலை நாட்டில் புழக்கத்திலிருக்கும் மதம் என்ற அர்த்தத்தில் அதை எடுத்துக்கொள்ள கூடாது.
ஏனென்றால் மதம் எந்தெந்த துறைகளில் எல்லாம் தலையிடக் கூடாது என நாம் நினைத்துக்கொண்டிருக்கின்றோமோ அந்த துறைகளிலெல்லாம் புகுந்து
அவற்றையெல்லாம் நெறிப் படுத்துகின்றது ஷரியத்...
பொருளாதார துறை, சமூகவியல், இராணுவம், சட்டம், அரசியல் ஆகிய எல்லாத் துறைகளுக்கும் ஒன்றாக வழிகாட்டுகிறது ஷரியத் என்கிறார்கள்.
மேலை நாட்டவர்களை பொருத்தவரை அரசியல் வேறு, ஆன்மீகம் வேறு. ஆன்மீகம் மனிதனின் தனிவாழ்க்கையோடு முடங்கிக் கிடந்திட வேண்டும்.
அது எந்த நிலையிலும் அரசியலிலோ, மனிதனின் இதர விஷயங்களிலோ தலையிட கூடாது.
ஆனால் இஸ்லாம் வாழ்வின் எல்லாத் துறைகளுக்கும் வழிகாட்டும் மார்கம், இதை அமெரிக்கர்களால் பொறுத்து கொள்ள முடியவில்லை.
அவர்களின் கருத்துப்படி ஷரியத் அமெரிக்காவின் அரசியல் வாழ்க்கையில், பணத்தை சேர்ப்பதில், செலவு செய்வதில், மனிதனின் ஒழுக்கம் இவற்றில் தலையிட கூடாது.
ஷரியத் இவற்றிற்கும் சேர்த்து வழிகாட்டுவதால் அஃது அமெரிக்காவை ஆளும் கொள்கையாக ஆகிவிட கூடாது ```
என்கிறார்கள்.
ஆதாரம் - ( PREFACE SHARIA THE THREAT TO AMERICA )
சர்வாதிகார ஆட்சி முறையா - ஷரியா?
பெண்டகன் என்ற அமெரிக்க இராணுவ தலைமையகம் ஷரியத் ஆட்சியை `` டோட்டாலிட்டேரியன் `` ஆட்சிமுறை என்றழைக்கின்றது..
இந்த `` டோட்டாலிட்டேரியன் `` என்ற சொல்லுக்கு சர்வதிகார ஆட்சிமுறை அல்லது ஒரே ஒரு கட்சியின் ஆட்சி என்றெல்லாம் பொருள் உண்டு...
சர்வதிகார ஆட்சி முறைக்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை.
இப்படி இருக்க ,,
அமெரிக்க இராணுவ தலைமையகத்தின் ஆய்வாளர்கள் அந்த சொர்களை ஏன் பயன்படுத்துகின்றார்கள்...
இதை நாம் ஆழ்ந்து பார்த்தால் அவர்கள் `` ஷரியத் `` என்ற சொல்லை பூதாகரப்படுத்தவே இந்த சர்வாதிகார ஆட்சி .,,,
`` டோட்டாலிட்டேரியன் சிஸ்டம் `` என்ற சொல்லை பயன்படுத்துகிறார்கள்...
ஆனால் உண்மையில் அவர்களே ( பெண்டகன் ஆய்வாளவர்களே ) ஷரியத் ஒரு சர்வதிகார திட்டம் என்பதை நம்பவில்லை..
அவர்கள் `` டோட்டாலிட்டேரியன் சிஸ்டம் `` என ஷரியத் சட்டங்களை குறிப்பிடுவதற்கு காரணம் ஷரியத் சட்டங்கள் மனித வாழ்வின் எந்த பகுதியையும் விட்டு வைத்திடாமல், எல்லா பகுதிகளுக்கும் வழிக்காட்டுகின்றது.மனித வாழ்வின் எல்லா பகுதிகளுக்கும் விதி வகுத்து தருகின்றது.
அதாவது ஷரியத் சட்டங்கள் ஒரு முழு வாழ்க்கை திட்டம் என்பதுதான்....
உண்மையில் ஷரியத் சட்டங்கள் வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் ஒரு வழிகாட்டி என்பதை நாம் பெண்டகனின் அறிக்கையிலிருந்து ஆதாரத்துடன் தெரிந்து கொள்ளளாம்......
அமெரிக்காவில் ஷரியத் சட்டங்கள் வருமா?
பெண்டகன் என்ற அமெரிக்க இராணுவ தலைமையகம் , ஷரியத் சட்டங்கள் அமெரிக்காவில் தலை தூக்கிட அனுமதிக்க கூடாது என்ற பிரச்சாரத்தை வேகபடுத்திட ஷரியத் சட்டங்கள் அமெரிக்காவின் அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது என்றொரு முழக்கத்தை முன் வைக்கின்றனர்...
இந்த முழக்கத்தின் வழி அவர்கள் அமெரிக்க குடிமக்கள் அனைவரையும் ஷரியத் சட்டத்திற்கு எதிரான ஒன்று திரட்டிட முனைகின்றார்கள்....
உண்மையை சொன்னால், மொத்த அமெரிக்க மக்களையும், அமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் இஸ்லாத்திற்கெதிராக திருப்பிட தங்களால் இயன்றதையெல்லாம் செய்து வருகின்றார்கள்...
பெண்டகனுக்காக அறிக்கை தயாரித்த அமெரிக்க இராணுவ அதிகாரிகள், இன்னொரு பிரச்சாரத்தையும் செய்ய தொடங்கி இருக்கின்றார்கள்....
ஷரியத் சட்டங்கள் அமெரிக்காவின் அரசியல் நிர்ணய சட்டத்தின் இடத்தை பிடித்து விடாமல் தடுத்திட வேண்டுமென்றால் முஸ்லிம்களை வளரவிடாமலும், எந்த செயல்களிலும் ஈடுபடவிடாமலும் தடுத்தாக வேண்டும்...
காரணம் முஸ்லிம்கள் இருந்தால் அவர்கள் நிச்சயமாக ஷரியத் சட்டங்களை அமெரிக்காவில் நிலை நாட்டிட எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வார்கள்.. காரணம் அது முஸ்லிம்களின் கடமை எங்கின்றார்கள் பெண்டகனின் இராணுவ ஆராய்ச்சியாளர்கள்.....
அதை அவர்களின் சொற்களில் சொன்னால் :
`` SHARIA IS AN INMUTABLE COMPULSORY SYSTEM THAT MUSLIMS ARE OBLIGED TO MISTALL AND THE WORLD REQUIRED TO ADOPT THEM , FAIL TO DO SO BEING DEEMED A DAMNABLE OFFENCE AGAINST ALLAH ``
`` ஷரியத் முறை என்பது ஒர் கட்டாய முறை.
அதனை நிலை நாட்டுவது முஸ்லிங்களின் கடமை.
இந்த உலகம் அதை ஏற்று கொள்ள வேண்டும்.
ஷரியத் - ஐ நிலை நாட்டிட தவறுவது,
முஸ்லிம்கள் அல்லாஹ்வுக்கு எதிராக செய்யும்
கண்டனத்திற்குரிய குற்றம். ``
ஆகவே முஸ்லிம்கள் இருந்தால் அவர்கள் கட்டாயம் நிறைவேற்றியே தீர வேண்டிய கடமையாகிய ஷரியத் - ஐ நிலை நாட்டிட முயற்சி செய்வார்கள். ஆகவே அவர்களை என்ன செய்வது...?
இப்படியும் ஓர் ஆலோசனைகளை நடத்தியிருக்கிறார்கள் பெண்டகனின் அதிகாரிகள்.....
இதில் பல ஆலோசனைகள் வைக்கபட்டுள்ளன. அவற்றுள் முக்கியமான ஒன்றை இங்கே தருகின்றோம்.....
`` கம்யூனிஸ்ட்டுகள் என்ற பொதுவுடைமைவாதிகள் அமெரிக்காவில் தலையெடுத்த போது அவர்களை நாடு கடத்தும், திட்டம் ஒன்று தீட்டப்பட்டு, அவர்கள் மீது பொய் குற்றம் சுமத்தி நாடு கடத்தினார்களாம் அமெரிக்கர்கள்...
அதே போல் முஸ்லிம்களையும் செய்து விடலாமா? என்றொரு ஆலோசனையை முன் வைத்திருக்கின்றனர்.. இந்த ஆலோசனைக்கு செயல் வடிவம் கொடுத்திடலாமா? என கேட்ட போது ,
பெண்டகன் அதிகாரி ஒருவரே இப்படி பதில் சொல்லியிருக்கின்றார் :
`` இப்போதுள்ள நிலையில் அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்களை நாடு கடத்திட இயலாது.
காரணம்
அவர்கள் அமெரிக்க குடிமக்கள் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.
அது அவர்கள் உரிமை.
நமது அரசியல் அமைப்பு சட்டம் இந்த உரிமையை வழங்கியிருக்கின்றது.
அடுத்து முஸ்லிம்களை நாடுகடத்திடும் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்படுமேயானால் அதில் நாடு முழுவதிலும் ஏற்படும் கொந்தளிப்பில், இன்னும் ஏராளமான அமெரிக்கர்கள் இஸ்லாத்தை ஏற்ப்பார்கள்.
இதனால் நாளை வந்து விடுமோ என அச்சப்படும் `` ஷரியத் `` சட்டங்கள் இன்றே வந்து விடும் ``
என எதிர் கருத்தை கூரியிருக்கின்றார்கள்.
ஆதாரம் : (PREFACE SHARIA THE THREAT TO AMERICA )
ஏற்கனவே 9/11, தான் அமெரிக்காவில் அதிகமான குடிமக்கள் இஸ்லாத்தின் பக்கம் , திறும்பிட காரணமாக அமைந்துள்ளது என்பதையும் எதிர் கருத்தை கூரியவர்கள் எடுத்து காட்டி இருக்கின்றார்கள்.
இதனால் அமெரிக்கா தற்போது செய்வதறியாது திணறிக்ண்டிருக்கின்றது.
இப்போதைக்கு ஷரியத்தை நிலை நாட்டிட துடிப்பவர்களை இனங்கண்டு அவர்களை செயல்பட விடாமல் தடுப்பது என முடிவு செய்துள்ளது...
அமெரிக்க ஆய்வாளர்கள் இன்னொரு உண்மையையும் தாங்கள் தயாரித்த ஆய்வறிக்கையில் ஒத்துக் கொண்டுள்ளார்கள்,
அது, மொத்த ஐரோப்பாவிலும் வேகமாக இஸ்லாம் வளர்ந்து வருவதை குறிப்பிடுவதாகும்.
அதனை பெண்டகனின் ஆய்வு இப்படி கூருகின்றது,
`` இந்த நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பா ஒரு இஸ்லாமிய கண்டமாக மாறும் இதையே அண்மையில் ஆங்கில நாட்டில் இடம்பெற்ற ஆய்வு ஒன்றும் கூறியது......
( பார்க்க வைகறை வெளிச்சம் அக்டோபர் - நவம்பர் 2011 ஆங்கில நாட்டில் இஸ்லாமிய அலை )
பெண்டகனின் இந்த அறிக்கையை படிக்கும்போது அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மது ( ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலம் ) அவர்கள் சொன்ன வரிகள் தாம் நினைவுக்கு வருகின்றது..
`` பூமியின் கிழக்கு பகுதியையும், மேற்க்குப் பகுதியையும் அல்லாஹ் எனக்கு சுருக்கி காட்டி விட்டான். எதிர்காலத்தில் என் சமுதாயத்தின் ஆதிக்கம் எனக்கு காட்டப்பட்ட எல்லாப் பகுதிகளையும் சென்றடையும்.
( முஸ்னத் அஹ்மத் : பாகம் 5 , பக்கம் : 366 )
அல் - குர் ஆன் பிரகடன படுத்துகின்றது :
`` அவன்தான் தன்னுடைய தூதை நேரான வழியைக் கொண்டும், சத்திய மார்கத்தைக் கொண்டும் அனுப்பி வைத்தான். இனை வைத்து வணங்குவோர் அதனை வெறுத்த போதிலும் உலகிலுள்ள எல்லா மார்கங்களையும் இந்த சத்திய மார்கம் வெல்லும் ``
( அல் - குர் ஆன் : 9 ; 32,33 )

அஸ்ரஃப் இஸ்லாம்

0 comments:

Post a Comment